Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Thirumurugan Alayam - Kuala Krai, Malaysiaதிருமுருகன் ஆலயம்
கோலக்கிரை கிளந்தான் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Thirumurugan Alayam  Flag of Kelantan State
Kuala Krai Kelantan Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

ஆலய வரலாறு

1950களில் வேலை நிமித்தம், அனேக இந்தியர்கள் கோலக்கிரை இரயில்வேக்கு வந்து குடியேறினர். இங்குக் குடியேறியவர்கள் "கிளந்தானா அவன் இழந்தான்" என்ற தாழ்வான எண்ணத்திலே தான் வருவார்கள். ஏனென்றால் அச்சமயமிருந்த வளர்ச்சியின்மையும் நம்மவர்களின் சொற்ப எண்ணிக்கையும்தான்.

இந்தச் சூழலில் இரயில்வே பம்புசெட் இயக்குவராக இருந்தவர் ஒருவர், இரவு நேரங்களில் சென்று தம் கடமையைச் செய்து வருவது வழக்கம். இவ்வாறு கடமையாற்றும் வேளையில்தான், தனக்குள்ளே எழுந்த பீதியைப் போக்க, இப்போதுள்ள அலய ஸ்தலத்திலிருந்த ஒரு மரத்தின்கீழ் விளக்கு ஏற்றி வந்தார். இவ்விளக்கு அனைவருக்கும் இருளைப் போக்கியது. நாளடைவில் இங்கு வாழும் இந்தியர்களைக் காக்கும் முனீசுவரனாக இருந்தது. இதைத் தொடர்ந்து இரயில்வே ஊழியர்கள் இங்கு வருவதும் தரிசிப்பதுமாக இருந்தனர். வெள்ளிக்கிழமைகளில் பலிகொடுத்து உண்டு மகிழ்வதுமுண்டு.

சிறிய ஒடு தகரத்தில் இருந்து வந்த கோவில் சிறுகச் சிறுக அனைவரது உதவியுடன் செப்பனிடப்பட்டு வந்தது. 1970-ல் இந்நகரிலும் சுற்று வட்டாரத்திலும் இருக்கின்ற இந்துக்களுக்கென ஒரு பொதுக் கோவில் வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அதன் பயனாக இரயில்வே தளத்திலிருந்த நிலத்தை "TOL'' என்ற அடிப்படையில் பெறப்பட்டு அதில் ஒரு மடக்கோவில் எழுப்பி முருகப் பெருமனை நிறுத்தி, இங்கு வாழும் இந்தியார்களுக்கு நலம் பயக்கத் தொடங்கியது.

1972-ல் ஆலயத்திற்கென ஒரு முறையான நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு அது முதல் பதிவு அதிகாரச் சட்டத்தின் கீழ் இயங்கத் தொடங்கியது. அத்துடன் ஆலயத்தின் பக்கத்திலேயே ஒரு பலநோக்கு மண்டபம் தேவையெனக் கருதி, அதற்கும் சுற்று வட்டாரத்திலுள்ள நன்னெஞ்சங்களின் நன்கொடையால் உருவாக்கப்பட்டது. 1972-ல் இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் கிள்ளான் ஜெயந்தி ஐயர் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டது.

திருவிழா

"சித்திரா பௌர்ணமி" உற்சவம் ஆலயத்தின் பிரதான திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இரதம்:

சித்திரா பௌர்ணமி உற்சவத்திற்கு உச்சக்கட்டமாக முருகப் பெருமானின் சகல அலங்காரத்துடன், சுமந்து செல்லும் இரதம் ஒன்றினை இத்திருவிழா துவங்கின போதிலிருந்தே ஆலயம் பெற்றுள்ளது.

நித்திய பூசை

காலை மணி 7.00க்கும் மாலை மணி 7.00க்கும், வெள்ளிக்கிழமையும் விசேஷ நாட்கழிலும் சிறப்பு தீபாரதனைகளுடன் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

விழாக்கள்

ஆங்கில வருடப் பிறப்பு, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் இன்னும் அநேக உற்சவங்கள் ஆண்டுதோறும் உபயத்தார்களின் உதவியுடன் நடைபெற்று வருகின்றன.

குடமுழுக்கு விழா

1972-ல் கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயம் பெரும் முயற்சியில் செப்பனிடப்பட்டு, முறையாக கோபுர வேலைகள் செய்யப்பட்டு 11-6-1993-ல் விநாயகப் பெருமான், சுப்பிரமணியர், அம்பாள், நவக்கிரகம், நாகத்தம்பிரான், அரசமரப் பிள்ளையார், முனீஸ்வரர் ஆகிய மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு செய்ய திருவருள் கூட்டியது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெற்றது.

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

7 am – 11 am
5 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Thirumurugan Alayam,
Jalan Jirat,
Kuala Krai,
Kelantan,
MALAYSIA
Postcode: 18000
Telephone: +6 09 977 7962


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
Ω  5.526599, 102.204843

Thirumurugan Alayam - Kuala Krai, Malaysia

The information here may NOT be accurate

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Thirumurugan Alayam - Kuala Krai, Kelantan, Malaysia
(kdcmya49)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]