திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 773 செக்கர்வானப் பிறை (சீகாழி) Thiruppugazh 773 sekkarvAnappiRai (seegAzhi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத் ...... தனதான ......... பாடல் ......... செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத் தெற்கிலூ தைக்கனற் ...... றணியாத சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச் சித்தம்வா டிக்கனக் ...... கவிபாடிக் கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக் கற்பதா ருச்செகத் ...... த்ரயபாநு கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க் கைக்குணான் வெட்கிநிற் ...... பதுபாராய் சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித் தப்ரதா பர்க்குமெட் ...... டரிதாய தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத் தத்வரூ பக்கிரிப் ...... புரைசாடிக் கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக் குத்துரா வுத்தபொற் ...... குமரோனே கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக் கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... செக்கர் வானப் பிறைக்கு இக்கு மாரற்கு அ(ல்)ல ... செவ்வானத்து பிறை நிலவுக்கும், கரும்பு வில்லை ஏந்தும் மன்மதனுக்கும், இவை மட்டும் இல்லாமல் தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத சித்ர வீணைக்கு ... தெற்கிலிருந்து வரும் ஊதைக் காற்றுக்கும், நெருப்புப் போலச் சுடுகின்ற தன்மை குறையாத (இன்பகரமான ஓசையைத் தரும்) சித்திர வீணைக்கும், அலர் பெற்ற தாயர்க்கு அவச் சித்தம் வாடி ... வசை மொழிகளைக் கொண்ட தாய்மார்களுக்கும், வீணாக உள்ளம் வாட்டம் அடைந்து, கனக் கவி பாடி ... (விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது) பெரிதாகப் பாடல்களைப் பாடி, கைக் கபோலக் கிரி பொன் கொள் ராசிக் கொடைக் கற்ப தாருச் செக த்ரய பானு ... (அப்பாடல்களில் அவர்களைத்) துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும், பொன் சேரும் அதிர்ஷ்டம் உள்ளவர் என்றும், கொடையில் கேட்டதைத் தரும் கற்பக மரத்தைப் போன்றவர் என்றும், மூவுலகங்களிலும் விளங்கும் சூரியன் என்றும், கற்ற பேர் வைப்பு எனச் செத்தை யோகத்தினர்க் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய் ... கற்ற புலவர்களின் சேமநிதி (நீங்கள்) என்றும், (பொய்யான புகழ் கூறிக்) குப்பையாகிய செல்வ யோகம் படைத்த மனிதர்களின் கைக்குள் நான் அகப்பட்டு வெட்கம் அடைந்து நிற்கின்ற நிலையை நீ கண் பார்ப்பாயாக. சக்ர பாணிக்கும் அப் பத்ம யோனிக்கு(ம்) நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய ... சக்கரத்தைக் கையில் கொண்ட திருமாலுக்கும், அந்தத் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனுக்கும், என்றும் அழியாதவர் என்று புகழ் பெற்ற பரம சிவனுக்கும் எட்டுதற்கு அரியதான தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அத் தத்வ ரூப ... தத்துவ வேதத்தின் தோற்றத்தை உபதேசம் செய்த அந்த ஞான வடிவானவனே, கிரிப் புரை சாடிக் கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ ... கிரெளஞ்ச மலையின் பெருமையைக் குலைத்து, மாமரத்தில் புகுந்து ஒளித்திருந்த சூரனின் உடல் தொளை படும்படியாக குத்து ராவுத்த பொற் குமரோனே ... (வேலினால்) குத்திய குதிரை (மயில்) வீரனே, அழகிய குமரனே, கொற்றவா உற்பலச் செச்சை மாலைப் புயக் கொச்சை வாழ் முத்தமிழ்ப் பெருமாளே. ... அரசனே, நீலோற்பலம், வெட்சி மாலை இவைகளை அணிந்த புயங்களை உடையவனே, கொச்சை என்னும் சீகாழியில்* வீற்றிருக்கும் முத்தமிழ் வல்ல பெருமாளே. |
* சீகாழிக்கு உரிய பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - ... என்பன. |
சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது. சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.867 pg 2.868 pg 2.869 pg 2.870 WIKI_urai Song number: 777 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 773 - sekkarvAnap piRai (seegAzhi) chekkarvA nappiRaik kikkumA raRkalath theRkilU thaikkanat ...... RaNiyAtha sithravee Naikkalarp petRathA yarkkavac ciththamvA dikkanak ...... kavipAdik kaikkapO lakkirip poRkoLrA sikkodaik kaRpathA rucchekath ...... thrayabAnu katRapEr vaippenac cseththaiyO kaththinark kaikkuNAn vetkiniR ...... pathupArAy sakrapA Nikkumap pathmayO nikkunith thaprathA parkkumet ...... tarithAya thathvavE thaththinuR paththipO thiththAth thathvarU pakkirip ...... puraisAdik kokkilE pukkoLith thittacUr pottezhak kuththurA vuththapoR ...... kumarOnE kotRavA vuRpalac cecchaimA laippuyak kocchaivAzh muththamizhp ...... perumALE. ......... Meaning ......... chekkar vAnap piRaikku ikku mAraRku a(l)la: Not only because of the crescent moon in the reddish sky and the God of Love (Manmathan) holding the sugarcane bow, theRkil Uthaikku anal thaNiyAtha sithra veeNaikku: but also because of the chilling southerly breeze and the melodious sound of Chitra VeeNa, burning (the ears) unremittingly, alar petRa thAyarkku avac ciththam vAdi: and because of the scandal-mongering womenfolk, I became depressed unnecessarily; kanak kavi pAdi: (to enable me to pay the whores, I sought rich people and on them) I sang many lengthy songs; kaik kapOlak kiri pon koL rAsik kodaik kaRpa thAruc ceka thraya bAnu: (in those songs) I described them as great mountains with a trunk and a huge jaw like the white elephant AirAvadham; as fortunate ones who would amass gold; as the wish-yielding KaRpaga Tree in giving alms; as the prominent sun, shining in the three worlds; katRa pEr vaippu enac ceththai yOkaththinark kaikkuL nAn vetki niRpathu pArAy: and as the safe repository for the learned poets; knowing that these were false tributes, I shamelessly fell into the hands of these men fortunate to be possessing the rubbish called wealth; kindly look at my humiliating plight with compassion. sakra pANikkum ap pathma yOnikku(m) niththa prathAparkkum etta arithu Aya: To Lord VishNu, holding a disc in His hand, to BrahmA who emerged on the lotus sprouting from the abdomen of VishNu and to Lord SivA who is famously known as the immortal God, It was beyond comprehension; thathva vEthaththin uRpaththi pOthiththa ath thathva rUpa: It was the origin of all scriptures, and You, as the Entity of True Knowledge, preached It! kirip purai sAdik kokkilE pukku oLiththidda cUr pottu ezha kuththu: Vanquishing the arrogance of Mount Krouncha, You also pierced with Your spear, the body of the demon SUran who assumed the disguise of a mango tree, rAvuththa poR kumarOnE: Oh valorous One, mounted on the horse-like peacock! Oh handsome KumarA! kotRavA uRpalac cecchai mAlaip puyak kocchai vAzh muththamizhp perumALE.: Oh Lord, Your shoulders are adorned with garlands of flowers like blue lily and vetchi! You are seated in Your abode at Kochchai (SeegAzhi*) as the Master of the three branches of Tamil, Oh Great One! |
* The various names of SeekAzhi are as follows: 1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA. 2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran. 3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped. 4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped. 5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back. 6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice to save the king. 7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine. 8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine. 9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed after his worship at this shrine. 10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away. 11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship. 12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end of the aeons. |
SeegAzhi is 11 miles south of Chidhambaram. It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |