திருப்புகழ் 772 சிந்து உற்று எழு  (சீகாழி)
Thiruppugazh 772 sindhuutRuezhu  (seegAzhi)
Thiruppugazh - 772 sindhuutRuezhu - seegAzhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தத்தன தானன தந்தத் ...... தனதான

......... பாடல் .........

சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே

தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே

அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே

அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள்

நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே

நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே

சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே

சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிந்து உற்று எழு மா மதி அங்கித் திரளாலே ... கடலில் இருந்து
எழுகின்ற அழகிய சந்திரன் வீசும் நெருப்புப் பிழம்பாலே,

தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று எழலாலே ... தென்றல் காற்று
சந்தனச் சோலையின் நறு மணத்துடன் எழுந்து வருவதாலே,

அந்திப் பொழுதாகிய கங்குல் திரளாலே ... மாலைப் பொழுதாகிய
இரவின் நெருக்கத்தாலே,

அன்புற்று எழு பேதை மயங்கித் தனி ஆனாள் ... அன்பு மிகுந்து
எழும் இப் பேதைப் பெண் மயக்கம் கொண்டு தனித்திருக்கின்றாள்.

நந்து உற்றிடு வாரியை மங்கத் திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர்
வேலினை உந்திப் பொரு வேளே
... சங்குகள் உள்ள சமுத்திரத்தை,
கலங்கிய தோற்றம்ததும்பும்படியாக, விஷம் போன்று விளங்கும்
வேலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த அரசே,

சந்தக் கவி நூலினர் தம் சொற்கு இனியோனே ... சந்தக் கவி நூல்
சொல்லும் புலவர்களுடைய சொல்லில் விருப்பம் உடையவனே,

சண்பைப் பதி மேவிய கந்தப் பெருமாளே. ... சண்பை என்னும் சீகாழியில்*
பொருந்தி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.


* சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.


சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.
சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், தென்றல், சந்தன மணம், இரவு
- இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.865  pg 2.866  pg 2.867  pg 2.868 
 WIKI_urai Song number: 776 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 772 - sindhu utRu ezhu (seegAzhi)

sinthutRezhu mAmathi angith ...... thiraLAlE

thenRatRaru vAsami kunthut ...... RezhalAlE

anthippozhu thAkiya kangut ...... RiraLAlE

anputRezhu pEthaima yangith ...... thaniyAnAL

nanthutRidu vAriyai mangath ...... thikazhAyE

nanjoththoLir vElinai yunthip ...... poruvELE

santhakkavi nUlinar thanjcoR ...... kiniyOnE

saNpaippathi mEviya kanthap ...... perumALE.

......... Meaning .........

sinthu utRu ezhu mA mathi angith thiraLAlE: Because of the rays of fire emitted by the moon rising from the sea,

thenRal tharu vAsam mikunthu utRu ezhalAlE: because of the southerly breeze blowing with an intense aroma of sandalwood,

anthip pozhuthAkiya kangul thiraLAlE: and because of the dusk turning into approaching dark night,

anputRu ezhu pEthai mayangith thani AnAL: this poor maid, tormented by love, is in a daze all alone.

nanthu utRidu vAriyai mangath thikazhAyE nanju oththu oLir vElinai unthip poru vELE: Oh Lord, while fighting, You wielded the poison-like and dazzling spear on the sea full of conch shells, agitating the sea into a muddy colour!

santhak kavi nUlinar tham coRku iniyOnE: You relish the rhythmic words composed by poets who are wizards in alliteration!

saNpaip pathi mEviya kanthap perumALE.: Oh Lord KandhA! You are seated in the town of SaNbai (SeegAzhi*), Oh Great One!


* The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.


SeegAzhi is 11 miles south of Chidhambaram. It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr.


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan. The sea, the moon, the southerly breeze, the aroma of sandalwood and the night are some of the things which aggravate the agony of her separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 772 sindhu utRu ezhu - seegAzhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]