திருப்புகழ் 662 இல்லையென நாணி  (வெள்ளிகரம்)
Thiruppugazh 662 illaiyenanANi  (veLLigaram)
Thiruppugazh - 662 illaiyenanANi - veLLigaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தான ...... தனதான

......... பாடல் .........

இல்லையென நாணி யுள்ளதின் மறாம
     லெள்ளினள வேனும் ...... பகிராரை

எவ்வமென நாடி யுய்வகையி லேனை
     யெவ்வகையு நாமங் ...... கவியாகச்

சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
     தொல்லைமுத லேதென் ...... றுணரேனைத்

தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது
     துய்யகழ லாளுந் ...... திறமேதோ

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     மையவரை பாகம் ...... படமோது

மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
     வள்ளிமலை வாழுங் ...... கொடிகோவே

வெல்லுமயி லேறு வல்லகும ரேச
     வெள்ளிலுட னீபம் ...... புனைவோனே

வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
     வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இல்லையென நாணி ... இல்லை என்று கூற வெட்கப்பட்டு,

உள்ளதின் மறாமல் ... உள்ள பொருளின் அளவுக்கு மறுக்காமல்,

எள்ளினள வேனும் பகிராரை ... ஓர் எள்ளின் அளவாவது பகிர்ந்து
கொடுக்காதவர்களை,

எவ்வமென நாடி ... வெறுக்கத்தக்கவர்கள் என்று ஆராய்ந்தறிந்து

உய்வகையி லேனை ... பிழைக்கும் வழி இல்லாத என்னை,

எவ்வகையு நாமங் கவியாக ... எந்த வகையிலாவது உன்
திருநாமங்களைக் கவிதையாக

சொல்லவறி யேனை ... அமைத்துச் சொல்லும் அறிவில்லாத என்னை,

எல்லைதெரியாத தொல்லைமுதல் ஏதென்றுணரேனை ...
முடிவெல்லை காண முடியாத பழைய மூலப்பொருள் இன்னது என்று
உணரும் அறிவில்லாத என்னை,

தொய்யுமுடல் பேணு பொய்யனை ... இளைத்துத் துவளும்
உடம்பைப் போற்றும் பொய்யனாகிய என்னை,

விடாது துய்யகழலாளுந் திறமேதோ ... புறக்கணித்து
விட்டுவிடாமல் பரிசுத்தமான உன் திருவடிகளால் ஆண்டருளும் வழி
ஏதேனும் உண்டோ, யான் அறியேன்.

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ ... வலிமை பொருந்திய அசுரர்கள்
மாளவும், நல்ல தேவர்கள் வாழவும்,

மையவரை பாகம்பட மோது ... குற்றமுள்ள கிரெளஞ்சகிரி
கூறுபட்டழிய மோதியவனே,

மையுலவு சோலை செய்யகுளிர் சாரல் ... இருண்ட சோலைகள்,
செவ்விய குளிர்ந்த மலைகள் உடைய

வள்ளிமலை வாழுங் கொடிகோவே ... வள்ளிமலையில் வாழும்
குறக்குலக் கொடியாகிய வள்ளியின் மணாளனே,

வெல்லுமயி லேறு வல்லகுமரேச ... வெல்லும் திறல் படைத்த மயில்
மீது ஏறவல்ல குமரேசா,

வெள்ளிலுட னீபம் புனைவோனே ... விளாத் தளிருடன்
கடப்பமலரை அணிபவனே,

வெள்ளிமணி மாட மல்கு திரு வீதி ... வெண்ணிற அழகிய
மாடங்கள் நிறைந்த செல்வச் செழிப்புள்ள வீதிகளை உடைய

வெள்ளிநகர் மேவும் பெருமாளே. ... வெள்ளிகரம் என்ற
வெள்ளிநகரில் அமர்ந்த பெருமாளே.


* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா
ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.586  pg 2.587 
 WIKI_urai Song number: 666 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 662 - illaiyena nANi (veLLigaram)

illaiyena nANi yuLLathin maRAmal
     eLLinaLa vEnum ...... pakirArai

evvamena nAdi yuyvakaiyi lEnai
     evvakaiyu nAmang ...... kaviyAkac

collavaRi yEnai yellaitheri yAtha
     thollaimutha lEthen ...... RuNarEnaith

thoyyumudal pENu poyyanaivi dAthu
     thuyyakazha lALun...... thiRamEthO

vallacurar mALa nallacurar vAzha
     maiyavarai pAkam ...... padamOthu

maiyulavu cOlai ceyyakuLir cAral
     vaLLimalai vAzhung ...... kodikOvE

vellumayi lERu vallakuma rEca
     veLLinuda neepam ...... punaivOnE

veLLimaNi mAda malkuthiru veethi
     veLLinakar mEvum ...... perumALE.

......... Meaning .........

illaiyena nANi: Being embarrassed to say no, and

uLLathin maRAmal: without holding back any possession,

eLLinaLa vEnum pakirArai: one should be able to share with others whatever little bit one has. People who do not share with others

evvamena nAdi: should be discerned by me as those to be condemned.

yuyvakaiyi lEnai: I do not know the means to survive.

evvakaiyu nAmang kaviyAkac collavaRiyEnai: I do not know how to compose Your venerable names in beautiful poems about Yourself.

yellaitheri yAtha thollaimuthalEthen RuNarEnaith: I do not realise that You are endless, pristine and the primordial principle.

thoyyumudal pENu poyyanai: I am a liar cherishing this decaying mortal body of mine.

vidAthu thuyyakazha lALum thiRamEthO: Nonetheless, without forsaking, You always protect me with Your holy feet; and I wonder at Your magnanimity!

vallacurar mALa nallacurar vAzha: The mighty asuras were left to perish; the virtuous DEvAs were protected;

maiyavarai pAkam padamOthu: and the sinful mount Krouncha was smashed to smidgen by You.

maiyulavu cOlai ceyyakuLir cAral: Dense groves and cool mountains abound

vaLLimalai vAzhung kodikOvE: in VaLLimalai where lives the petite damsel, VaLLi, a veritable creeper; and You are her consort!

vellumayi lERu vallakuma rEca: You mount the triumphant Peacock, Oh Lord Kumara!

veLLinuda neepam punaivOnE: You adorn Yourself with fresh viLa leaves and Kadappa flowers.

veLLimaNi mAda malkuthiru veethi: In the prosperous-looking streets of this town, there are many beautiful silvery-white balconies in

veLLinakar mEvum perumALE.: VeLLigaram* (meaning Silver Town), which is Your abode, Oh Great One!


* VeLLigaram is 12 miles west of VEppagunta Rail Station, 22 miles north of ArakkOnam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 662 illaiyena nANi - veLLigaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]