திருப்புகழ் 661 தொய்யில் செய்யில்  (வெள்ளிகரம்)
Thiruppugazh 661 thoiyilseyyil  (veLLigaram)
Thiruppugazh - 661 thoiyilseyyil - veLLigaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்ய தய்ய தய்ய தய்ய
     தய்ய தய்ய ...... தனதான

......... பாடல் .........

தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
     தொய்யு மைய ...... இடையாலுந்

துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்
     சொல்லு கள்ள ...... விழியாலும்

மைய செவ்வி மவ்வல் முல்லை
     மல்கு நல்ல ...... குழலாலும்

மையல் கொள்ள எள்ளல் செய்யும்
     வல்லி சொல்லை ...... மகிழ்வேனோ

செய்ய துய்ய புள்ளி நவ்வி
     செல்வி கல்வ ...... ரையிலேனல்

தெய்வ வள்ளி மையல் கொள்ளு
     செல்வ பிள்ளை ...... முருகோனே

மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
     வெள்ளை வெள்ளி ...... நகர்வாழ்வே

வெய்ய சைய வில்லி சொல்லை
     வெல்ல வல்ல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய
இடையாலும்
... மார்பின் மீது சந்தனத்தால் எழுதினாலே நெகிழ்ந்து
தளர்பவர்கள் போல பாசாங்கு செய்யும் கீழ் மக்களான விலைமாதரின்
இளைத்துள்ள, வியக்கத் தக்க (நுண்ணிய) இடையாலும்,

துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு(ம்) கள்ள
விழியாலும்
... எழுந்து பாய்ந்து வள்ளைக் கொடிபோன்று காது வரை
நீளும், மனத்தில் நினைந்துள்ள வஞ்சக எண்ணத்தை வெளிப்படுத்தும்,
திருட்டுக் கண்களாலும்,

மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு(ம்) நல்ல குழலாலும் ...
மை போன்று கரு நிறம் கொண்டதும், செம்மை வாய்ந்த காட்டு மல்லிகை,
முல்லை நிறைந்துள்ள நல்ல கூந்தலாலும்,

மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை
மகிழ்வேனோ
... காம இச்சை கொள்ளும்படியாக (என்னை)
இகழ்கின்ற பெண்களின் பேச்சுக்கு மகிழ்ச்சி கொள்வேனோ?

செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல் ...
செந்நிறத்தவனே, தூயவனே, பெண் மான் போன்ற லக்ஷ்மியின்
குமாரியும், கல் நிறைந்த வள்ளி மலையில் தினைப் புனத்தைக் காவல்
செய்தவளுமான

தெய்வ வள்ளி மையல் கொள்ளு(ம்) செல்வ பிள்ளை
முருகோனே
... தெய்வ வள்ளி மேல் மோகம் கொண்ட செல்வப்
பிள்ளையான முருகனே,

மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய வெள்ளை வெள்ளி நகர்
வாழ்வே
... மெய்யர்க்கு மெய்யனே, பொய்யர்க்குப் பொய்யனே, கள்ளம்
இல்லாத நகராகிய வெள்ளிகரம் என்னும் தலத்தில் வாழும் செல்வனே,

வெய்ய சையவல்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே. ...
விரும்பத் தக்க கயிலை மலை வாசியாகிய சிவபெருமானுக்கு பிரணவத்தின்
பொருளை இன்னதென்று விளக்கி வெற்றியைக் கொண்ட பெருமாளே.


* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா
ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.582  pg 2.583  pg 2.584  pg 2.585 
 WIKI_urai Song number: 665 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 661 - thoiyil seyyil (veLLigaram)

thoyyil seyyil noyyar kaiyar
     thoyyu maiya ...... idaiyAlum

thuLLi vaLLai thaLLi yuLLal
     sollu kaLLa ...... vizhiyAlum

maiya sevvi mavval mullai
     malku nalla ...... kuzhalAlum

maiyal koLLa eLLal seyyum
     valli sollai ...... makizhvEnO

seyya thuyya puLLi navvi
     selvi kalva ...... raiyilEnal

theyva vaLLi maiyal koLLu
     selva piLLai ...... murukOnE

meyyar meyya poyyar poyya
     veLLai veLLi ...... nakarvAzhvE

veyya saiya villi sollai
     vella valla ...... perumALE.

......... Meaning .........

thoyyil seyyil noyyar kaiyar thoyyum aiya idaiyAlum: Because of the surprisingly slim and slender waist of the despicable whores who pretend to fall down at the mere splashing of sandal paste on their bosom,

thuLLi vaLLai thaLLi uLLal sollu(m) kaLLa vizhiyAlum: because of their surreptitious eyes that jump out like the vaLLai creeper, extending right up to their ears, and revealing their ulterior motive,

maiya sevvi mavval mullai malku(m) nalla kuzhalAlum: and because of their ink-black and beautiful hair, adorned with reddish jungle flowers and jasmine,

maiyal koLLa eLLal seyyum valli sollai makizhvEnO: will I be provoked into lustful thinking and fall for the taunting remarks of these women?

seyya thuyya puLLi navvi selvi kal varaiyil Enal: Your complexion is red! Oh Immaculate One! She is the daughter of the deer-like Lakshmi; and she guarded the millet-field in the forest of the stone-filled mountain, VaLLimalai;

theyva vaLLi maiyal koLLu(m) selva piLLai murukOnE: She is the Divine damsel, VaLLi whom You intensely loved, Oh MurugA, the pet son (of the Lord)!

meyyar meyya poyyar poyya veLLai veLLi nakar vAzhvE: You are truthful to all Your true devotees! You remain a myth to all the liars! You are the treasure of the unsullied town VeLLigaram*!

veyya saiyavalli sollai vella valla perumALE.: To Lord SivA, who resides in the most desirable abode of Mount KailAsh, You explained the significance of PraNava ManthrA successfully, Oh Great One!


* VeLLigaram is 12 miles west of VEppagunta Railway Station, 22 miles north of ArakkOnam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 661 thoiyil seyyil - veLLigaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]