திருப்புகழ் 593 பொன்றலைப் பொய்  (திருச்செங்கோடு)
Thiruppugazh 593 pondRalaippoi  (thiruchchengkodu)
Thiruppugazh - 593 pondRalaippoi - thiruchchengkoduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தத்தத் தந்த தத்தத்
     தந்த தத்தத் தந்த தத்தத்
          தந்த தத்தத் தந்த தத்தத் ...... தனதான

......... பாடல் .........

பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
     தும்ப றுத்திட் டின்று நிற்கப்
          புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் ...... கறியாமே

பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
     சிங்கி யொத்தச் சங்க டத்துப்
          புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் ...... கொடியார்மேல்

துன்று மிச்சைப் பண்ட னுக்குப்
     பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்
          தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் ...... பதிமீதே

தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்
     கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
          துங்க ரத்தப் பங்க யத்தைத் ...... தருவாயே

குன்றெ டுத்துப் பந்த டித்துக்
     கண்சி வத்துச் சங்க ரித்துக்
          கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் ...... சுரலோகா

கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்
     திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
          கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் ...... பொரும்வேழம்

சென்று ரித்துச் சுந்த ரிக்கச்
     சந்த விர்த்துக் கண்சு கித்துச்
          சிந்தை யுட்பற் றின்றி நித்தக் ...... களிகூருஞ்

செண்ப கத்துச் சம்பு வுக்குத்
     தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்
          செங்கு வட்டிற் றங்கு சொக்கப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பொன்றலைப் பொய்க்கும் பிறப்பைத் தும்பு அறுத்திட்டு ...
இறத்தல் கூடியதாய், பொய்யாக முடியும் பிறப்பு என்பதை இணைக்கும்
கயிற்றை அறுத்துத் தள்ளி,

இன்று நிற்கப் புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே ...
இன்று ஓர் ஒழுக்கத்தில் நிற்க புத்தியில் கொஞ்சமேனும் கவனித்து
மேற்கொள்ள அறியாமல்,

பொங்கி முக்கிச் சங்கை பற்றிச் சிங்கி ஒத்தச் சங்கடத்துப்
புண் படைத்துக் கஞ்ச மைக் கண் கொடியார் மேல்
... காய்ந்து
கொதித்தும், முயற்சிகள் செய்தும், சந்தேகம் கொண்டும், விஷம் போன்ற
துன்பங்களால் மனம் புண்ணாகி, தாமரை போன்ற, மை பூசிய கண்ணைக்
கொண்ட, விலைமாதர்கள் மீது,

துன்றும் இச்சைப் பண்டனுக்குப் பண்பு அளித்துச்
சம்ப்ரமித்து
... பொருந்தி நெருங்கும் ஆசைப் பாத்திரனாகிய எனக்கு
நற்குணத்தைக் கொடுத்து சிறப்பு அடையச் செய்து,

தும்பி பட்சிக்கும் ப்ரசச் செய்ப்பதி மீதே தொண்டு பட்டுத்
தெண்டனிட்டு
... வண்டு உண்ணும் தேன் கொண்ட (பூந்தாதுகள்
உள்ள) வயலூர் என்னும் தலத்தில் தொண்டு செய்யும் பணியை
மேற்கொண்டு,

கண்டு பற்றத் தண்டை வர்க்கத் துங்க ரத்தப் பங்கயத்தைத்
தருவாயே
... நான் பார்த்துப் பற்றுவதற்கு தண்டை, சிலம்பு
முதலியவற்றை அணிந்தவையும், பரிசுத்தமான செந்நிறமுள்ளவையுமான
திருவடித் தாமரையை தந்து அருள்க.

குன்று எடுத்துப் பந்தடித்துக் கண் சிவத்துச் சங்கரித்துக்
கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இச் சுர லோகா
... கிரவுஞ்ச
கிரியை எடுத்து பந்தைத் தூக்கி எறிவது போல் எடுத்து எறிந்து கண்
சிவக்கக் கோபித்து அழித்து, (கைம்மாறு கருதாது உதவும்) மேகம் போல்
இந்திரனுக்கு ஈந்த தேவ லோகத்தவனே,

கொம்பு குத்திச் சம்பு அழுத்தித் திண் தலத்தில் தண்டு
வெற்பைக் கொண்டு அமுக்கிச் சண்டை இட்டுப் பொரும்
வேழம்
... கொம்பால் குத்தியும், சம்பங்கோரை போன்ற நுனியால்
அழுத்தியும், திண்ணிய இப்பூமியில் கதையையும் மலையையும் சேர்த்து
அடக்கிப் போர் புரிந்த (கயாசுரன் என்ற) யானையை

சென்று உரித்துச் சுந்தரிக்கு அச்சம் தவிர்த்துக் கண் சுகித்துச்
சிந்தையுள் பற்று இன்றி நித்த(ம்) களி கூரும்
... சென்று தாக்கி
தோலை உரித்து*, அழகிய பார்வதி தேவிக்கு பயத்தை நீக்கி, கண்
களிப்புடன் மனதில் பற்று ஒன்றும் இல்லாமல் தினமும் மகிழ்ச்சி
கொள்ளும்,

செண்பகத்துச் சம்புவுக்குத் தொம் பதத்துப் பண்பு உரைத்து ...
செண்பக மலர் அணியும் சம்புவாகிய சிவபெருமானுக்கு தத்வம் அசி
என்னும் வேத வாக்கியத்தில் த்வம் என்னும் சொல்லுக்கு (குருவாக
நின்று) விளக்க இயல்பை எடுத்து விளக்கி,

செங்குவட்டில் தங்கு சொக்கப் பெருமாளே. ...
திருச்செங்கோட்டில்** உறையும் அழகிய பெருமாளே.


* கயாசுரன் என்பவன் பிரமனிடம் வரம் பெற்றுப் பேராற்றல் கொண்டு,
மண்ணவர், விண்ணவர் யாவரையும் வருத்தினான். யானை முகம் கொண்ட
அந்த அசுரனைச் சிவபெருமான் உதைத்துத் தள்ளி, உமா தேவியும் அச்சம்
நீங்க, அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.


** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து
6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்
நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.


'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'
- என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.931  pg 1.932  pg 1.933  pg 1.934 
 WIKI_urai Song number: 375 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 593 - pondRalaip poi (thiruchchengkOdu)

ponRa laippoyk kumpi Rappaith
     thumpa Ruththit tinRu niRkap
              punthi yiRchat Rungu Rikkaik ...... kaRiyAmE

pongi mukkic changai patRic
     chingi yoththac changa daththup
              puNpa daiththuk kanja maikkat ...... kodiyArmEl

thunRu micchaip paNda nukkup
     paNpa Liththuc champra miththuth
              thumpi patchik kumpra saccheyp ...... pathimeethE

thoNdu pattuth theNda nittuk
     kaNdu patRath thaNdai varkkath
              thunga raththap panga yaththaith ...... tharuvAyE

kunRe duththup pantha diththuk
     kaNsi vaththuc changa riththuk
              koNda loththit tinthra nukkic ...... churalOkA

kompu kuththic champa zhuththith
     thiNda laththit RaNdu veRpaik
              koNda mukkic chaNdai yittup ...... porumvEzham

senRu riththuc chuntha rikkac
     chantha virththuk kaNsu kiththuc
              chinthai yutpat RinRi niththak ...... kaLikUrum

seNpa kaththuc champu vukkuth
     thompa thaththup paNpu raiththuc
              chengu vattit Rangu chokkap ...... perumALE.

......... Meaning .........

ponRalaip poykkum piRappaith thumpu aRuththittu: Birth, that is associated with death, ends up as a total myth; having severed that bondage,

inRu niRkap punthiyil satRum kuRikkaikku aRiyAmE: I have not been able to channel my thinking today to confine, even slightly, to any particular discipline;

pongi mukkic changai patRic chingi oththac changadaththup puN padaiththuk kanja maik kaN kodiyAr mEl: (instead,) I have been flirting with whores who fume and boil in rage, make several attempts (to snare me), who, with suspicion, make my mind sore with their venomous acts and entice me with their lotus-like eyes smeared with black paint;

thunRum icchaip paNdanukkup paNpu aLiththuc champramiththu: I am like a pot filled with lust for them, chasing these whores in close quarters; will You inculcate virtuous thought in me, making me great?

thumpi patchikkum prasac cheyppathi meethE thoNdu pattuth theNdanittu: Leading me to serve in the place, VayalUr, where flowers with honey-filled pollens abound imbibed by beetles,

kaNdu patRath thaNdai varkkath thunga raththap pangayaththaith tharuvAyE: kindly grant me the vision of Your immaculate and reddish lotus-feet, adorned with thandai and other anklets, so that I could hold on to them as my refuge!

kunRu eduththup panthadiththuk kaN sivaththuc changariththuk koNdal oththittu inthiranukku ic chura lOkA: You tossed the Mount Krouncha as if it were a ball and destroyed it in rage with fiery eyes; and You gave his land as a boon to IndrA in a gesture of compassion like the cloud (that showers without expecting anything in return), Oh Lord of the celestials!

kompu kuththic champu azhuththith thiN thalaththil thaNdu veRpaik koNdu amukkic chaNdai ittup porum vEzham: Piercing with his tusks and pressing with the sharp tips that were like reeds, he fought on this solid earth holding his mace and the mountain together; he was KayAsuran, the elephant-demon*;

senRu uriththuc chuntharikku accham thavirththuk kaN sukiththuc chinthaiyuL patRu inRi niththa(m) kaLi kUrum: He went after that demon, attacked him and peeled off his hide; He removed the fear of the beautiful Goddess PArvathi; with absolute detachment He was able to show happiness in His eyes each and every day;

seNpakaththuc champuvukkuth thom pathaththup paNpu uraiththu: He is Lord SivA who wears the sheNbaga (champak) flowers; to that SivA You, as His Master, explained the significance of the term "thvam" (in the ManthrA "thathvamasi") in detail,

chenguvattil thangu chokkap perumALE.: and took Your seat in ThiruchchengkOdu**, Oh Handsome and Great One!


* By virtue of the boon he obtained from Brahma, the elephant-demon KayAsuran became mighty aggressive and tortured all the celestials. Lord SivA knocked down the demon and peeled away his hide to the great relief of DEvi PArvathi, and wore that skin as a shawl.


** ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given.


In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 593 pondRalaip poi - thiruchchengkodu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]