திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 592 நீலமஞ்சான குழல் (திருச்செங்கோடு) Thiruppugazh 592 neelamanjAnakuzhal (thiruchchengkodu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன ...... தந்ததான ......... பாடல் ......... நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி ...... ரண்டுபோல நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை நீடலங் காரசர மோடடைந் தார்மருவி நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி னீலவண் டேவியநல் காமனங் காரநிறை நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் ...... சம்பையாரஞ் சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை சாதிசந் தானெகின மார்பரந் தோகையென தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை ...... யஞ்சியோடத் தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள் தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள் தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக ...... விஞ்சைதாராய் சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய் தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் ...... விந்தையோனே சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர் தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை தோளகண் டாபரம தேசிகந் தாவமரர் தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர் சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன ...... முங்கொள்வேலா மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர் மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு மார்பகன் காணமுடி யோனணங் கானமதி ...... யொன்றுமானை மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர் வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு(ம்) நீள் முகம் தாமரையினார் ... கரிய மேகம் போன்ற கூந்தலில் உள்ள மாலையில் வண்டுகள் மொய்க்கின்ற நிலையும், நீளமான பந்து ஆடுவதைப் போல (அங்குமிங்கும் புரளும்) கண்களை உடையவர்கள். பளிங்கு போல் வெண்மையான பற்களும், கறுத்த அழகிய வில் போன்ற புருவமும் பொன்னாலாகிய தோடு என்னும் அணி கலன் அசைகின்ற ஒளி கொண்ட முகம் என்ற தாமரையும் விளங்குபவர்கள். மொழிந்து ஆர மொழி நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய(ம்) நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல நீள் இபம் கோடு இள நீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரமோடு அடைந்தார் ... பேசுகின்ற நிறைந்த பேச்சுக்கள் கிளியின் மொழியை நிகர்ப்பவர். கமுகை ஒக்கும் கழுத்தை உடையவர்கள். தோள்கள் அவற்றில் படிந்த தேமலோடு வாசனையுடன் மூங்கிலின் அழகைக் கொண்ட சிறப்பினர். இரு மலைகளைப் போல நீண்ட யானைக் கொம்பு, தேனைப் போல் இனிக்கும் இளநீர் போன்றதும், முத்து மாலை அணிந்ததுமான, மார்பகத்தார். நீண்ட அலங்காரமான கழுத்துச் சங்கிலியோடு கூடினவர்கள். மருவி நீள் மணம் சாறு பொழி அவ் வ(ள்)ளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்கார(ம்) நிறை நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் ... பொருந்தியதும், மிக்க நறு மணச் சாற்றினைப் பொழிகின்றதுமான (கலவைச் சந்தனம் உள்ள) கிண்ணம் போன்ற மார்பகத்தார். (காம பாண) மலர்களுள் நீலோற்ப மலர்ப் பாணத்தை ஏவிய நல்ல மன்மதனுடைய இறுமாப்பு நிறைந்த அன்புக்கு இடமானதும், சந்ததியைத் தருகின்றதுமான பெண்குறி மூலமாக காம நிதியாகிய அமுதத்துக்கு நிகரான புணர்ச்சி அனுபவத்தைத் தருபவர். இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ... நுண்ணிய இடுப்பு விளங்கி, திக்குகளில் வாய்விட்டு மின்னும் மின்னல் போன்றவர்கள். அழகு நிறைந்த பொன்னாலாகிய சரிகை இட்ட பட்டுப் புடவை சூழ்ந்துள்ள கால்களின் பாதங்களில் சிலம்பு ஒலிக்க நடந்து, ஆன நடை சாதி சந்தான எகின(ம்) மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலை மாதர் இன்பு ஆர் கலவி தாவு கொண்டே ... அவர்களுக்கான நடை உயர்ந்த வம்சத்து அன்னம் எனவும், அழகிய மார்பராய், எழில்மிகு மயில் எனவும் எழுந்து தோன்றுபவராகிய அழகிய விலைமாதர்களின் இன்பம் நிறைந்த சேர்க்கையில் பாய்தலைக் கொண்டு, கலிய நோய்கள் கொண்டே பிறவி தான் அடைந்து ஆழும் அடியேன் இடம் சாலும் வினை அஞ்சி ஓட ... துன்பத்தைத் தருவதான நோய்கள் நிறைந்த பல பிறவிகளை அடைந்து ஆழ்ந்து விழும் அடியேனிடத்தில் நிரம்பி வரும் வினை பயந்து நீங்குவதற்காக, தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு தாபம் விண்டே அமுத வாரி உண்டே பசிகள் தாபமும் தீர ... கடப்ப மாலை அசைகின்ற கழல் அணிந்த பாதத் தாமரைகளை விரும்பி, அந்தப் பெரிய திருவடியை விரும்பும் நெறியில் ஆழ்ந்து பொருந்தி, அடுத்து வரும் தாகங்களை (ஆசைகளை) ஒழித்து, அருளமுத வெள்ளத்தைப் பருகி, பசியும் தாகமும் நீங்குவதற்காக, துகிர் போல் நிறம் காழ் கொள் உரு சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக விஞ்சை தாராய் ... பவளம் போல் நிறமும் ஒளி கொண்ட உருவமும் பொருந்த ஜோதி முருகா எனக் கூறும் ஆசை ஒன்றையே கொண்டு நான் மன அமைதியுடன் இருந்து ஓத, பெருமை வாய்ந்த ஒப்பற்ற உள்ளம் பேறு பெறும்படியான ஞானத்தைத் தந்து அருளுக. சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி ந(ல்)ல தூள் அணைந்து ஆளி நிருவாணி அம் காளி ... திரி சூலத்தை ஏந்தியவள், எனது தாய் கெளரி, ஆசையை அகற்றுபவள், குண்டலங்களும் தோடும் பூண்டு நடனமாடும் சிவகாம சுந்தரி, நல்ல திருநீற்றைத் தரித்து ஆள்பவள், திகம்பரி, அழகிய காளி, கலை தோகை செந்தாமரையின் மாது நின்றே துதி செய் தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே ... கலை மகளும், செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியும் நின்று துதிக்கின்ற பரிசுத்தமான தாய், மூங்கில் போன்ற தோளை உடையவள் (ஆகிய பார்வதியை) பாகத்தில் உடையவராய் திருவருள் நிறைந்தவராகிய பரமசிவனுடைய குழந்தை என்று பெரிய உலகத்தோர் புகழும் விசித்திர தேவனே, சூர சங்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை தோள கண்டா பரம தேசிக அந்தா அமரர் தோகை பங்கா எனவே ... சூரனை அழித்தவனே, தேவலோகத்துக்கு வேண்டியவனே, ஆறு (கார்த்திகை) மாதர்களின் குழந்தையே, குமார வேளே, கடப்ப மலர் நிறைந்த மாலை அணிந்துள்ள வீரனே, சிவபெருமானுக்கு குருவாகிய அழகனே, தேவ மகள் (தேவயானையின்) கணவனே எனறெல்லாம் வேத ஆகமம் சூழ் சுருதி தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா ... வேதங்களையும், ஆகமங்களையும் ஆய்ந்த தேவர்களின் (முறையீட்டு) ஒலி (சூரனிடம் தாங்கள் படும்) வருத்தத்தைப் பாட, எழு கிரிகளும் துண்டாகப் பொடிபட (அந்த மலைகளில்) எழுந்திருந்த அசுரர்களின் ரத்தம் பெருகி ஆறாக வர, வேலாயுதத்தைச் செலுத்தி நடனமும் கொண்ட வேலனே, மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு வாலியும் பாழி மரமோடு கும்பாகனனும் ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோன் ... (ராவணன் பாட்டனும், தலைமை அமைச்சனுமாகிய அரக்கன் - மாலியன்) இறக்கவும், ஒப்பற்ற இரணியன் சாகவும், வலிமை மிக்க வாலியும், பருத்த மராமரத்தோடு அழியவும், கும்பகர்ணனும், கடலும், பயங்கரமான வலிமை கொண்டிருந்த ராவணனும் அழியவும் எய்த அம்பைக் கொண்டவன், அழகிய மேக நிறத்தினன், உகந்து ஓதி இடையர் மாதுடன் கூடி விளையாடு(ம்) சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி ஒன்றும் ஆனை ... மன மகிழ்ச்சியுடன் இடையர் மாதர்களுடன் கூடி காம லீலைகளை அனுபவித்தவன், லக்ஷ்மியை மார்பில் கொண்டவன், பொன் முடியோனாகிய திருமாலின் மகளான அறிவு நிறைந்த தேவயானையின் மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு ஆட முகமோடு உகந்து ஈர ரச வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி மாது பங்கா ... மார்பும், மலை போன்ற மார்பகப் பாரமும் பொருந்த, இடையின் நுண்மை நெகிழ்ந்து அசைய, அவளுடைய திருமுகத்தில் மகிழ்ச்சி உற்று, கருணையுடன், வாயினின்று இனிமையாக வரும் இதழ் ஊறலைச் சிறிது சிறிதாகப் பருகி, ரத்தினச் சிலம்பு ஒலிக்க அவளை மணக்கும் காதலைப் பாராட்டும் மயிலோனே, பரிசுத்தமானவனே, குற மாதாகிய வள்ளியின் கணவனே, மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே. ... வேத முழக்கம் கேட்கும் திருச்செங்கோட்டு* நகரில் வாழ வந்தவனே, கரிய திருமாலும், பிரமனும், அமரர்களும் புகழும் தம்பிரானே. |
இப்பாடலில் விலைமாதர்களின் தலை முதல் எல்லா அங்கங்களும் உவமைகளால் வர்ணிக்கப்பட்டுள்ளன. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது. |
'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.925 pg 1.926 pg 1.927 pg 1.928 pg 1.929 pg 1.930 pg 1.931 pg 1.932 WIKI_urai Song number: 374 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 592 - neelamanjAna kuzhal (thiruchchengkOdu) neelamanj Anakuzhal mAlaivaN dOdukathi needupan thAduvizhi yArpaLing kAnanakai neelapon sApanutha lAsaiyin thOdasaiyu neeLmukan thAmaraiyi nArmozhin thAramozhi nErsukam pOlakamu kAnakan thArarpuya nErsuNang kAvikiLai yErsiRan thArmalaiyi ...... raNdupOla neeLipang kOdiLanir thEnirun thAramulai needalang kArasara mOdadain thArmaruvi neeLmaNanj chARupozhi yAvaLam pOthivaiyi neelavaN dEviyanal kAmanang kAraniRai nEsasan thAnaalkul kAmapaN dAramuthai nErusam pOkaridai nUloLirn thAsaiyuyir ...... sampaiyAranj chAlupon thOkaiyamai pALithanj chUzhcharaNa thALsilam pOlamida vEnadan thAnanadai sAthisan thAnekina mArparan thOkaiyena thAnezhung kOlavilai mAtharin pArkalavi thAvukoN dEkaliya nOykaLkoN dEpiRavi thAnadain thAzhumadi yEnidanj chAlumvinai ...... yanjiyOdath thArkadam pAdukazhal pAthasen thAmaraikaL thAzhperum pAthaivazhi yEpadin thEvaruku thApamviN dEyamutha vAriyuN dEpasikaL thApamun theerathukir pOniRang kAzhkoLuru sAravun jOthimuru kAvenung kAthalkodu thAnirun thOthairu vOrakam pERuRuka ...... vinjaithArAy cUliyen thAykavuri mOkasang kArikuzhai thOdukoN dAdusiva kAmasun thArinala thULaNain thALiniru vANiyang kALikalai thOkaisen thAmaraiyin mAthunin REthuthisey thUyaam pAkazhaikoL thOLipang kALakrupai thOyparan sEyenavu mEperum pArpukazhum ...... vinthaiyOnE cUrasang kArasurar lOkapang kAvaRuvar thOkaimain thAkumara vELkadam pArathodai thOLakaN dAparama thEsikan thAvamarar thOkaipang kAenavE thAkamanj cUzhsuruthi thOthakam pAdamalai yEzhuthuN dAyezhuvar sOrikoN dARuvara vEleRin thEnadana ...... mungkoLvElA mAliyan pARavoru Adakan sAkamiku vAliyum pAzhimara mOdukum pAkananu mAzhiyung kOravali rAvaNan pARavidu mAsukan kOlamuki lOnukan thOthidaiyar mAthudan kUdiviLai yAdusam pOkathiru mArpakan kANamudi yOnaNang kAnamathi ...... yonRumAnai mArpudan kOduthana pAramunj chEraidai vArthuvaN dAdamuka mOdukan theerarasa vAyithang kOthimaNi nUpuram pAdamaNa vAsaikoN dAdumayi lALithung kAkuRavi mAthupang kAmaRaiku lAvuseng kOdainakar vAzhavan thAykariya mAlayan thEvarpukazh ...... thambirAnE. ......... Meaning ......... neela manjAna kuzhal mAlai vaNdOdu kathi needu panthAdu vizhiyAr paLingAna nakai neela pon sApa nuthal Asaiyin thOdu asaiyu(m) neeL mukam thAmaraiyinAr: Around the garland on their black cloud-like hair, beetles swarm about; they have long eyes that roll sideways like a ball shunting from here and there; they have marble-like white teeth and black eye-brows that are beautiful like a bow; their bright face is like a lotus, adorned by swinging ear-studs made of gold; mozhinthu Ara mozhi nEr sukam pOla kamukAna kanthArar puya(m) nEr suNangu Avi kiLai Er siRanthAr malai iraNdu pOla neeL ipam kOdu iLa neer thEn iruntha Ara mulai needu alangAra saramOdu adainthAr: their fulsome speech is like that of a parrot; their neck is soft like the betel-nut tree; the discoloured skin on their bamboo-like and pretty shoulders is fragrant; their breasts, adorned with a string of pearls, are like two mountains, the long tusks of an elephant and tender coconuts tasting sweet like honey; a long and decorative chain is worn around their neck; maruvi neeL maNam chARu pozhi av va(L)Lam pOthu ivaiyil neela vaNdu Eviya nal kAman angAra(m) niRai nEsa santhAna alkul kAma paNdAra amuthai nEru sampOkar: their bosom is like a bowl (smeared with a paste of sandalwood powder) that sits snugly on their chest secreting a fragrant juice; (from all the arrows of flowers wielded by Manmathan, God of Love,) the arrow of blue water lily has been chosen to strike their genital, the proud throne of Manmathan, the seat that is the source of love and cause for procreation; from here, they proffer coital bliss that is equivalent to nectar, the treasure of love; idai nUl oLirnthu Asai uyir sampaiyAr amchAlu pon thOkai amai pALitham cUzh saraNa thAL silampu Olam idavE nadanthu: their slender waist strikes like a lightning that flashes in all the cardinal directions; their beautiful silk saree, bordered with golden brocade, hangs right down to their feet, the anklets on which make a lilting noise when they walk; Ana nadai sAthi santhAna ekina(m) mArpar am thOkai ena thAn ezhum kOla vilai mAthar inpu Ar kalavi thAvu koNdE: their unique gait is that of the swans of the noblest breed; with their beautiful bosom, when they get up they look like the gorgeous peacock; bent upon jumping all over these pretty whores seeking blissful union, kaliya nOykaL koNdE piRavi thAn adainthu Azhum adiyEn idam chAlum vinai anji Oda: I fall into the deep pit of several births afflicted by miserable diseases; and in order that the deeds that engulf me are scared and driven away, thAr kadampu Adu kazhal pAtha senthAmaraikaL thAzh perum pAthai vazhiyE padinthE varuku thApam viNdE amutha vAri uNdE pasikaL thApamum theera: kindly make me seek Your hallowed lotus feet wearing anklets and the wavy kadappa garlands, so that I stick steadfastly to the path of attaining those big holy feet enabling me to destroy the ensuing thirsts (desires) by imbibing the flood of nectar that is Your graceful blessing to see that my hunger and thirst are removed altogether; thukir pOl niRam kAzh koL uru sAravum jOthi murukA enum kAthal kodu thAn irunthu Otha iru Or akam pERu uRuka vinjai thArAy: and in order that I could chant in absolute tranquility with the only desire of calling Your name aloud, saying "You have the complexion of coral and a bright shape, Oh Effulgent MurugA!", kindly grant me the knowledge as a boon making my mind great and matchless, Oh Lord! cUli em thAy kavuri mOka sangAri kuzhai thOdu koNdu Adu sivakAma sunthAri na(l)la thUL aNainthu ALi niruvANi am kALi: She holds the Trident in Her hand; She is my mother, Gowri; She removes the desires; She is SivakAma Sundari who dances with swinging ear-studs; She wears the holy ash on Her body and protects the world; She wears the cardinal directions as Her clothing; She is beautiful KALi; kalai thOkai senthAmaraiyin mAthu ninRE thuthi sey thUya ampA kazhai koL thOLi pangALa krupai thOy paran sEy enavumE perum pAr pukazhum vinthaiyOnE: Saraswathi, Goddess of the Arts, and Lakshmi, seated on the red lotus, offer their worship standing on their feet to this pure Mother; Her shoulders are soft like the bamboo; that PArvathi is concorporate on the left side of His body; You are hailed by the people of this vast world as the child of that graceful Lord SivA, Oh Wonderful Lord! cUra sangAra surar lOka pangA aRuvar thOkai mainthA kumara vEL kadampu Ara thodai thOLa kaNdA parama thEsika anthA amarar thOkai pangA enavE: "You destroyed the demon SUran; You are the favourite Lord of the celestials; You are the child nourished by six (KArththigai) women, Oh Lord KumarA! You wear the garland of kadappa flowers, Oh Valorous One! You are the handsome Master of Lord SivA! You are the consort of the celestial damsel, DEvayAnai!" - so praising You, vEtha Akamam cUzh suruthi thOthakam pAda malai Ezhu thuNdAy ezhuvar chOri koNdu ARu vara vEl eRinthE nadanamum koL vElA: the celestials who have researched into the VEdAs and the scriptures appealed to You in a loud voice complaining about the misery (they were suffering at the hands of the demon SUran); then, splittting the seven hills into pieces as the blood of the demons residing in those mountains gushed like a river, You wielded the spear and danced in joy, Oh Lord! mAliyan pARa oru Adakan sAka miku vAliyum pAzhi maramOdu kumpAkananum Azhiyum kOra vali irAvaNan pARa vidum Asukan kOla mukilOn: He has a powerful arrow that killed RAvaNan's grand father and chief minister, MaliyavAn, destroyed the mighty demon HiraNyan, killed VAli after felling the stout trees known as marAmaram, killed KumbakarNan, subdued the sea and took the life of the terrible and valorous demon RAvaNan; He is of the complexion of the beautiful and black cloud; ukanthu Othi idaiyar mAthudan kUdi viLaiyAdu(m) sampOka thiru mArpakan kANa mudiyOn aNangAna mathi onRum Anai: with mirth He united with shepherd girls and enjoyed many acts of love; He holds Lakshmi on His chest; He is the golden-haired Lord VishNu; His intelligent daughter is DEvayAnai; mArpudan kOdu thana pAramum sEra idai vAr thuvaNdu Ada mukamOdu ukanthu eera rasa vAy itham kOthi maNi nUpuram pAda maNa Asai koNdAdum mayilALi thungA kuRavi mAthu pangA: hugging her chest along with the heavy mountain-like bosom, making her slender waist wriggle, elating her hallowed face, graciously imbibing little by little the nectar-like saliva oozing from her mouth and making her anklets embedded with gems sound liltingly, You openly appreciated her love and married her, Oh Pure Lord mounting the peacock! You are the consort of VaLLi, the damsel of the KuRavAs! maRai kulAvu sem kOdai nakar vAzha vanthAy kariya mAl ayan thEvar pukazh thambirAnE.: Throughout this town, ThiruchchengkOdu*, VEdic chanting is heard, and You made it Your abode! The dark Lord VishNu, Brahma and the celestials laud You, Oh Great One! |
In this song, description of every part of the whore's body from the head to the toe could be seen. |
* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given. |
In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |