திருப்புகழ் 338 கமலரு சோகாம்பர  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 338 kamalaru sOgAmbara  (kAnjeepuram)
Thiruppugazh - 338 kamalaru sOgAmbara - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானாந்தன தனதன தானாந்தன
     தனதன தானாந்தன ...... தனதான

......... பாடல் .........

கமலரு சோகாம்பர முடிநடு வேய்பூங்கணை
     கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே

களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
     கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந்

தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
     இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம்

இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
     இதவிய பாதாம்புய ...... மருள்வாயே

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
     அதுலன நீலாம்பர ...... மறியாத

அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
     அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே

விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
     வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ

விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
     வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கமல(ம்) அரு சோகு ஆம்பர(ம்) முடி நடு ஏய் பூங்கணை ...
(மன்மதனுடைய ஐந்து மலர்ப் பாணங்களில்* முதல் கணையாகிய) தாமரை
மலர், அருமையான (இடைக் கணையாகிய) அசோக மலர், (கடைக்
கணையாகிய) நீலோற்பல மலர், இவற்றிற்கு இடை இடையே உள்ள
மாம்பூ, முல்லை (ஆகிய மலர்ப் பாணங்களின் தொழில் ஆற்றலால்)

கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே களை அற மீது
ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி
... கலகப் போரில் ஈடுபட்டு,
படுக்கையின் மேல் சோர்வு நீங்க என் மீது தாக்கி எழுகின்ற காம
தாகம் நீங்கும்படி,

கன இய வார் ஏந்தின இள நீர் தோய்ந்து எமது உயிர் நீல
அஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும்
அநுபோகம் இனி விட
... கனத்ததும், கச்சு தாங்கியதும், இளநீர்
போன்றதுமான மார்பகங்களைத் தழுவி என்னுடைய உயிரை கரிய
மை தீட்டப்பட்ட, செழிப்புள்ள கண்ணால் கவர்ந்த இந்தப் பெண்
மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை இனி விட்டு ஒழிப்பதற்கு,

வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இத(ம்) இய பாத
அம்புயம் அருள்வாயே
... வேத முடிவான, பரம சுகம் தருவதான,
முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத்
தந்து அருளுக.

அமகர ஆசாம்பர அதுகர ஏக ஆம்பரம் அதுல ... அ, ம, கர,
(ஓங்கார) என்னும் பிரணவாகரமானவரும், திகம்பரரும், அது என்று
அஃறிணை நிலையிலும் போற்றப்படக் கூடியவரும், ஒருவராய்
மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவரும், ஒப்பற்ற தன்மை உடையவரும்,

அ(ன்)ன நீல அம்பரம் அறியாத அநகர நாள அங்கிதர்
தமை
... அன்ன ரூபம் கொண்ட பிரமன் நீல நிறமுள்ள ஆகாயத்தில்
முடியைத் தேடி காண முடியாதவரும், பாபத்தை ஒழிப்பவரும்,
(தேவியின்) அழகிய மார்பின் காம்பின் தழும்பை உடையவரும் ஆகிய
சிவபெருமானை,

உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ(ர்) காஞ்சியில்
உறைவோனே
... உமா தேவி தவம் செய்து பெற்றதும், முப்பத்திரண்டு
அறங்கள்** நிகழ்வதுமான திருக் காஞ்சி நகரில் வாழ்பவனே,

விமல கிராத அங்கனை தன கிரி தோய் காங்கெய ...
பரிசுத்தமானவனே, வேடப் பெண் வள்ளியின் தன மலைகளைத்
தழுவுகின்ற கங்கையின் புத்திரனே,

வெடி படு தேவேந்திர நகர் வாழ விரி கடல் தீ மூண்டிட
நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய
பெருமாளே.
... நறுமணம் கமழ்கின்ற பொன்னுலகத்தில் தேவர்கள்
வாழும் பொருட்டு, பரந்த கடல் நெருப்புப் பற்றி எழவும், அசுரர்கள்
வேரோடு மாளவும், தீவினைகள் நீங்கவும் வேலைச் செலுத்திய
பெருமாளே.


* மன்மதனுடைய ஐந்து கணைகளாவன:

முதற் கணை = தாமரை. நடுக் கணை = அசோகம்.
கடைக் கணை = நீலோற்பலமலர். இடை இடையாகும் கணைகள் = மா, முல்லை.
அசோகமலருக்கு செயலை என்று பெயர் உண்டு.


** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:

சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு,
பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு
உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல்,
அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல்,
நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி
அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,
ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல்,
தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு
உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.93  pg 2.94  pg 2.95  pg 2.96 
 WIKI_urai Song number: 480 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 338 - kamalaru sOgAmbara (KAnchipuram)

kamalaru sOgAmbara mudinadu vEypUngaNai
     kalakamar vAythOynthama ...... LiyinmeethE

kaLaiyaRa meethUrnthezha mathanavi dAypOmpadi
     kanaviya vArEnthina ...... iLaneerthOyn

themathuyir neelAnjana matharvizhi yAlvAngiya
     ivaLudan mAlkUrnthidu ...... manupOkam

inivida vEthAnthapa ramasuka veedAmporuL
     ithaviya pAthAmpuya ...... maruLvAyE

amakara AsAmbara athukara EkAmpara
     athulana neelAmpara ...... maRiyAtha

anakara nALAngithar thamaiyumai yALsErntharuL
     aRamuRu seekAnjiyi ...... luRaivOnE

vimalaki rAthAnganai thanakiri thOykAngeya
     vedipadu thEvEnthira ...... nagarvAzha

virikadal theemUNdida nisisarar vErmANdida
     vinaiyaRa vElvAngiya ...... perumALE.

......... Meaning .........

kamala(m) aru sOgu Ambara(m) mudi nadu Ey pUngaNai: (The first of the five flowery arrows of Manmathan - God of Love being) the lotus, the unique (middle arrow being the) asOka flower, (the fifth one being) the blue lily and the two in-between ones being the mango flower and jasmine, all of them constitute the flowery arrows* of provocation;

kalaka amar vAy thOynthu amaLiyin meethE kaLai aRa meethu Urnthu ezha mathana vidAy pOmpadi: indulging in the resultant uprising, I become exhausted and recline on the bed; to quench my passionate thirst, I am attacked

kana iya vAr Enthina iLa neer thOynthu emathu uyir neela anjana mathar vizhiyAl vAngiya ivaLudan mAl kUrnthidum anupOkam ini vida: by the plumpy and bloused bosom, loooking like tender coconuts, which I hug; my life is being snatched by the dark, painted and lush eyes of this girl; to get rid of the ever-increasing deluge of passion for, and pleasure-seeking from, this girl,

vEthAntha parama suka veedu Am poruL itha(m) iya pAtha ampuyam aruLvAyE: kindly grant me Your blissful and lotus feet that are the end of the VEdAs, offering the supreme delight and are the final destination of liberation, Oh Lord!

amakara AsAmbara athukara Eka Amparam athula: He is constituted by the letters a, ma, kara, (joining as OmkAra) representing the PraNava ManthrA; He wears the sky as His loin-cloth; He could be referred to even in the neutral gender, praising Him as "It"; He sits alone under a unique mango tree; He is matchless;

a(n)na neela amparam aRiyAtha anakara nALa angithar thamai: when Lord Brahma took the form of a swan and flew all over the blue sky seeking His head, He was unable to sight it; He is the remover of all sins; He has a scar on His chest made by the sharp nipple of the hallowed bosom of Goddess PArvathi; seeking that Lord SivA

umaiyAL sErnthu aruL aRam uRu see(r) kAnjiyil uRaivOnE: through a penance performed in Kanchipuram, UmAdEvi ultimately united with Him; it is that holy place where She carried out the thirty-two religious duties**, and You chose it as Your abode, Oh Lord!

vimala kirAtha anganai thana kiri thOy kAngeya: You are unblemished! Oh Son of the River Gangai, You hugged the mountain-like bosom of VaLLi, the damsel of the hunters!

vedi padu thEvEnthira nagar vAzha viri kadal thee mUNdida nisisarar vEr mANdida vinai aRa vEl vAngiya perumALE.: In order that the DEvAs could flourish in the fragrant celestial world, You set fire to the wide sea, annihilating the demons, and removed the effects of all evil deeds, by wielding Your Spear, Oh Great One!


* Manmathan's five flowery arrows are as follows:

first arrow - lotus; second - mango; third (middle) arrow - asOkam (also known as ceyalai);
fourth - jasmine; fifth (last) - blue lily (NeelOthpalam).


** Thirty-two religious duties are listed in Periya PurANam as follows:

Road-laying; Food for teachers; Food for all the six kinds of religious people; Feeding the cows; Feeding the prisoners; Alms; Distribution of eatables; Feeding the orphans; Obstetrics; Orphanage; Feeding milk to babies; Cremation of destitute corpses; Clothing the orphans; Whitewashing old houses; Offering medicines; Washing others' clothes; Barber's work; Providing glasses for visually-impaired; Piercing ears and providing studs; Eyedrops for medication; Providing hair oil and hair cream; Fomentation for relief; Protecting others from perils; Free distribution of potable water; Provision of free accommodation; Provision of bathing facility; Rearing shady groves; Providing sandals and shoes; Feeding animals; Ploughing the field; Providing security guard; and Conducting marriages.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 338 kamalaru sOgam - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]