திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 322 தலை வலையத்து (காஞ்சீபுரம்) Thiruppugazh 322 thalaivalaiyaththu (kAnjeepuram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான ......... பாடல் ......... தலைவலை யத்துத் தரம்பெ றும்பல புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி தருமயில் செச்சைப் புயங்க யங்குற ...... வஞ்சியோடு தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ...... ளம்புகாளப் புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன ...... னம்பெறாதோ பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய துறவனெ னத்திக் கியம்பு கின்றது புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை ...... தந்திடாதோ குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி குறைவற முப்பத் திரண்ட றம்புரி ...... கின்றபேதை குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி கணபண ரத்நப் புயங்க கங்கணி குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின ...... வஞ்சிநீலி கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி ...... யெங்களாயி கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... தலை வலையத்துத் தரம்பெறும்பல புலவர் ... முதல் வகுப்பில் வைக்கத்தக்க தகுதி பெற்ற பல புலவர்கள் மதிக்கச் சிகண்டி ... போற்றித் துதிக்கும் உனது மயிலையும், குன்றெறி தரும் அயில் ... கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்த உன் வேலையும், செச்சைப் புயம் ... வெட்சி மாலையைப் புனைந்த உன் திருப்புயங்களையும், கயங்குற வஞ்சியோடு ... (கயவஞ்சி) தேவயானையையும், குறவஞ்சி வள்ளியையும், தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி ... பொற்சங்கிலி, முத்துச் சலங்கை, கிண்கிணி ஆகியவை தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும் ... தழுவிய செக்கச் சிவந்த உனது சரணாம்புஜத்தையும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்விளம்பு ... பாட்டுக்குப் பொருளாக வைத்து பெரிய பாமாலைகளைப் பாடவல்ல, காளப் புலவனென ... கரிய மேகம் மழை பொழிவதுபோலப் பொழியும் புலவன் இவன் என்று சொல்லும்படியும், தத்துவந்தரந்தெரி தலைவனென ... உண்மை ஞானம் உணர்ந்த தலைவன் இவன் எனக் கூறும்படியும், தக்கறஞ்செயுங்குண புருஷனென ... தக்க தர்மங்களைச் செய்யும் குணவானான சத்புருஷன் இவன் என்றும் உலகோர் கூறும்படியுமாக, பொற் பதந்தருஞ் சனனம்பெறாதோ ... மேலான பதவியைத் தரும் பிறப்பை என் ஆத்மா பெறாதோ? பொறையனெனப் பொய்ப் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவனென ... இவன் பொறுமைசாலி என்றும், இந்தப் பொய்யுலகைக் கண்டு அஞ்சும் துறவி என்றும், திக்கியம்புகின்றது புதுமையல ... எல்லாத் திசைகளிலும் உள்ளோர் அடியேனைக் கூறுவது ஆச்சரியம் இல்லை. சிற் பரம்பொருந்துகை தந்திடாதோ ... அறிவுக்கும் மேலான பதத்தில் சேரும் பேற்றை உன் திருவருள் தந்திடாதோ? குலசயிலத்துப் பிறந்த பெண்கொடி ... சிறந்த மலையாகிய இமயமலைக்குப் பிறந்த கொடி போன்றவள், உலகடை யப்பெற் றவுந்தி ... உலகம் முழுவதையும் ஈன்றெடுத்த திருவயிற்றை உடையவள், அந்தணி ... அழகிய தட்பத்தை (காருண்யத்தை) உடையவள், குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்றபேதை ... குறைவில்லாமல் முப்பத்திரண்டு அறங்களையும்* முறையே புரியும் பாலாம்பிகை, குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி ... நற்குணங்களைத் தரித்தவள், மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரி, கணபண ரத்நப் புயங்க கங்கணி ... கூட்டமான படங்களையும், ரத்தினங்களையும் உள்ள சர்ப்பங்களைக் கைகளில் வளையல்களாகத் தரித்தவள், குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின வஞ்சி ... மேரு மலையை வில்லாக வளைத்து, திரிபுரத்தைச் சினத்துடன் எரித்த** வஞ்சிக் கொடி போன்றவள், நீலி கலப விசித்ரச் சிகண்டி ... நீல நிறத்தினள், தோகை மயிலின் அழகிய சாயலை உடையவள், சுந்தரி கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி ... பேரழகி, கொடிய விஷத்தைக் கழுத்திலே பொதிந்தவள்**, கருணைவி ழிக்கற்பகம் ... கருணை பொழியும் விழிகளை உடையவள், கேட்டவரம் நல்கும் கற்பகத் தரு, திகம்பரி யெங்களாயி ... திசைகளையே ஆடைகளாய் உடைய எங்கள் தாய், கருதிய பத்தர்க்கிரங்கும் அம்பிகை ... அவளை நினைத்த பக்தர்களுக்கு கருணை புரியும் அம்பிகை, சுருதிதுதிக்கப் படுந்த்ரியம்பகி ... வேதங்களால் போற்றப்படும் முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவள்**, கவுரிதிருக்கொட்டமர்ந்த ... (இத்தனை பெருமைகளை உடைய) கெளரியாகிய காமாக்ஷியின் கோயிலாகிய திருக்கோட்டத்தில் (காஞ்சீபுரத்தில்) வீற்றிருப்போனே, இந்திரர் தம்பிரானே. ... தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான இந்திரர்கள் வணங்கும் பெருமாளே. |
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு: சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம். |
** சிவபிரானைக் குறிக்கும் செயல்களும் இயல்புகளும் இங்கு பார்வதி தேவிக்கும் பொருந்துவன. ஏனெனில் தேவி சிவனின் இடது பாகத்தில் இருப்பவள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.51 pg 2.52 pg 2.53 pg 2.54 pg 2.55 pg 2.56 WIKI_urai Song number: 464 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 322 - thalaivalai yaththu (kAnjeepuram) thalaivalai yaththuth tharampe Rumpala pulavar mathikkac cikaNdi kunReRi tharumayil checchaip puyanga yangkuRa ...... vanjiyOdu thamaniya muththuc chathangai kiNkiNi thazhuviya chekkac chivantha pangaya saraNamum vaiththup perumpra panthamvi ...... LampukALap pulavane naththath thuvantha rantheri thalaivane naththak kaRanjche yunguNa purushane nappoR pathantha runjcana ...... nampeRAthO poRaiyane nappoyp prapanja manjiya thuRavane naththik kiyampu kinRathu puthumaiya lachchiR parampo runthukai ...... thanthidAthO kulasayi laththup piRantha peNkodi yulakadai yappeR Ravunthi yanthaNi kuRaivaRa muppath thiraNda Rampuri ...... kinRapEthai kuNathari chakrap prasaNda sankari kaNapaNa rathnap puyanga kangaNi kuvaduku niththup puranchu dunchina ...... vanjineeli kalapavi chithrac chikaNdi sunthari kadiyavi daththaip pothintha kanthari karuNaivi zhikkaR pakanthi kampari ...... yengaLAyi karuthiya paththark kirangku mampikai suruthithu thikkap padunthri yampaki kavurithi rukkot tamarntha inthirar ...... thambirAnE. ......... Meaning ......... thalaivalai yaththuth tharampe Rumpala pulavar mathikkac cikaNdi: Your Peacock that is praised by many poets who are of the highest calibre; kunReRi tharumayil: Your Spear that shattered Mount Krouncha; checchaip puyam: Your shoulders that are adorned with the garland of vetchai flowers; kayangkuRa vanjiyOdu: Your two consorts, namely DEvayAnai and VaLLi, the damsel of the KuRavAs; thamaniya muththuc chathangai kiNkiNi thazhuviya chekkac chivantha pangaya saraNamum: and Your reddish lotus feet adorned with golden chains, anklets with pearls, and kiNkiNi (another lilting anklet) - vaiththup perum prapanthamviLampu: with these as subjects, he is capable of composing great songs; kALappulavanena: he is indeed a great poet like the dark clouds (in showering poems); thaththuvantha rantheri thalaivanena: he is a leader who has attained true knowledge; thakkaRanjche yunguNa purushanena: and he is a paragon of virtues giving charity to worthy causes - with these words, the world should praise me. poR pathantha runj chananam peRAthO: May I not be granted a birth in which I can attain Your golden feet? poRaiyane nappoyp prapanja manjiya thuRavanena: "He is a forbearing person and he has renounced everything, dreading this world which is full of myths" thikkiyampu kinRathu puthumaiyala: It is no wonder that the people of the world from all the directions refer to me in the above terms. chiR parampo runthukai thanthidAthO: Will You graciously bless me to attain the blissful state that is beyond any knowledge? kulasayilaththup piRantha peNkodi: She is the creeeper-like daughter born to the great Mount, HimavAn; yulakadai yappeR Ravunthi yanthaNi: In Her womb, the entire universe was conceived; She has immense compassion; kuRaivaRa muppath thiraNda RampurikinRapEthai: She is the young damsel carrying out the thirty-two religious duties* without any flaw; kuNathari chakrap prasaNda sankari: She is the repository of all virtues; She is Sankari reigning with valour on all the chakrAs and yanthrAs (Seats of Goddess Shakthi); kaNapaNa rathnap puyanga kangaNi: her bangles consist of multi-hooded serpents, holding precious gems; kuvadukuniththup puranchudun china vanji: looking like a beautiful creeper vanji (rattan reed), but with intense rage, She bent Mount Meru as a bow to burn down the three mounts, Thiripuram**; neeli kalapavi chithrac chikaNdi: Her complexion is blue; She has the likeness of a peacock with beautiful feathers; sunthari kadiyavidaththaip pothintha kanthari: She is the most beautiful; In Her neck She holds the most virulent poison**; karuNaivizhik kaRpakam: She has eyes showering compassion; She is like the wish-yielding celestial tree, KaRpagam; thikampari yengaLAyi: She wears as clothing all the eight directions; She is our Mother; karuthiya paththark kirangku mampikai: She is the Goddess showering grace upon all the devotees who think about Her; suruthi thuthikkap padun thriyampaki: She has three eyes (namely, the sun, the moon and fire)** worshipped by all the four VEdAs; kavurithirukkot tamarntha: and She is Gowri, KamAkshi, and in Her sacred temple at KAnchipuram, You are seated. inthirar thambirAnE.: Oh Lord, You are the Great One worshipped by all the Heads of the Celestials! |
* Thirty-two religious duties are listed in Periya PurANam as follows: Road-laying; Food for teachers; Food for all the six kinds of religious people; Feeding the cows; Feeding the prisoners; Alms; Distribution of eatables; Feeding the orphans; Obstetrics; Orphanage; Feeding milk to babies; Cremation of destitute corpses; Clothing the orphans; Whitewashing old houses; Offering medicines; Washing others' clothes; Barber's work; Providing glasses for visually-impaired; Piercing ears and providing studs; Eyedrops for medication; Providing hair oil and hair cream; Fomentation for relief; Protecting others from perils; Free distribution of potable water; Provision of free accommodation; Provision of bathing facility; Rearing shady groves; Providing sandals and shoes; Feeding animals; Ploughing the field; Providing security guard; and Conducting marriages. |
** All these acts or aspects, usually attributed to Lord SivA, equally apply to Mother PArvathi also as She is the left-half of the Lord. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |