திருப்புகழ் 321 சலமலம் விட்ட  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 321 salamalamvitta  (kAnjeepuram)
Thiruppugazh - 321 salamalamvitta - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

......... பாடல் .........

சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்
     சகலவி னைக்கொத் திருந்தி டும்படி
          சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு ...... தந்தைதாயும்

தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி
     லுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொரு
          தனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் ...... வந்திடாமுன்

பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்
     படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கண
          படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் ...... வென்றிவேலா

பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்
     பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு
          பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட ...... வந்திடாயோ

சிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடு
     சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர்
          திரிபுர மத்தைச் சுடுந்தி னந்தரி ...... திண்கையாளி

திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன
     தெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள்
          திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு ...... கின்றஞானக்

கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர்
     நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்
          கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் ...... கஞ்சபாதங்

கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடு
     கருதும வர்க்குப் பதங்கள் தந்தருள்
          கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

சல மலம் விட்டத் தடம் பெரும் குடில் ... சலம், மலம் இவைகளை
வெளியேற்றுகின்ற மிகப் பெரிய குடிசையில்,

சகல வினைக் கொத்து இருந்திடும்படி ... எல்லா வினைகளும்
ஒன்று சேர்ந்து அமையும்படி,

சதிர உறுப்புச் சமைந்து வந்த ஒரு தந்தை தாயும் தர வரு
பொய்க்குள் கிடந்த கந்தலில்
... அழகாகப் பொறுத்தப்பட்ட
அவயவங்கள் சேர்ந்த மனக் களிப்புடன் தந்தையும் தாயும் கலந்து அளிக்க
உண்டாகின்ற, பொய்யிலே கிடந்த கிழிபட்ட துணிபோல் அழிந்து போகும்
உடலில்,

உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு தனியில்
இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன்
... இருக்கும் உயிரை
யமன் ஓட்டிச் செலுத்தி ஒரு தனியான வகையில் இழுக்கும் மனக்
கலக்கமும் வந்து கூடுவதற்கு முன்,

பல உருவத்தைப் பொருந்தி அன்று உயர் படியு(ம்) நெளிக்கப்
படர்ந்த
... பல வித நிறங்களைப் பொருந்தியதும், அன்று (போர்க்
களத்தில்) சிறந்த பூமியும் நெளியும்படியாக நடந்து சென்றதுமான,

வன் கண பட மயில் புக்குத் துரந்து கொண்டு இகல் வென்றி
வேலா
... வலிமை வாய்ந்த, பீலிக் கண்களை உடைய தோகையை உடைய
மயிலில்* ஏறி, அதனைச் செலுத்திச் சென்று போரினை வென்ற வேலனே,

பரிமள மிக்கச் சிவந்த நின் கழல்பழுது அற நல் சொல்
தெரிந்து அன்பொடு பகர்வது இனி சற்று உகந்து தந்திட
வந்திடாயோ
... நறு மணம் மிகுந்து, சிவந்த உனது திருவடியை,
எவ்வகைக் குற்றமும் இல்லாத நல்ல சொற்கள் கொண்டு அறிந்து,
அன்புடன் சொல்லும்படியான பாக்கியத்தை இனிச் சற்று நீ மகிழ்ந்து
தந்துதவ வர மாட்டாயோ?

சிலையும் எனப் பொன் சிலம்பை முன் கொடு சிவ மயம்
அற்றுத் திடம் குலைந்தவர் திரி புரம் அத்தை சுடும் தினம்
...
வில் என்னும்படி பொன் மலையாகிய மேருவை (சிவபிரான்) முன்
கையில் கொண்டு, சிவ வழிபாட்டைக் கைவிட்டவர்களும் தமது
சக்தி குலைந்தவர்களுமாகிய அசுரர்களையும் திரி புரங்களையும்
எரித்த தினத்தில்

தரி திண் கையாளி திரு மகள் கச்சுப் பொருந்திடும் தன
தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள்
... அந்த வில்லைத் தாங்கிய
திண்ணிய திருக் கரத்தைக் கொண்டவள், அழகிய தேவி, கச்சு அணிந்த
மார்பகங்களைக் கொண்ட மாது, கருணையுடன் தோன்றியவள்,

திசைகளில் ஒக்கப் படர்ந்து இடம் பொருகின்ற ஞானக்
கலைகள் அணை கொத்து அடர்ந்து
... திசைகள் எல்லாவற்றிலும்
வியாபித்து இடம் கொண்ட ஞான நூல்கள் உட்பட்ட திரண்ட கலை
நூல்கள் அனைத்தையும் நிரம்பக் கற்றவள்,

வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய் கருக
இடத்தில் கலந்து இருந்தவள்
... புது மலர்களைத் தன்னுள்ளே
கொண்ட கம்பை நதிக் கரையில் (காமாக்ஷி சிவனை வழிபடும்போது),
(நதியின் வெள்ளத்தைக் கண்டு) பயந்து ஏகாம்பர நாதருடைய சிவந்த
உடல் கரு நிறம் கொள்ளுமாறு அவருடைய இடப் பாகத்தில்
கலந்திருந்தவள்,

கஞ்ச பாதம் கருணை மிகுத்துக் கசிந்த உளம் கொடு கருதும்
அவர்க்குப் பதங்கள் தந்து அருள் கவுரி
... தனது தாமரைத்
திருவடியை அன்பு மேலிட்டு கனிந்த மனம் கொண்டு தியானிக்கும்
அடியார்களுக்கு பதவிகளைத் தந்து அருளும் கெளரி அம்மையின்

திருக் கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே. ... திருக்கோயிலில்
(காஞ்சீபுரத்துக்) குமரக்கோட்டத்தில் அமர்ந்திருக்கும் இறைவா,
தேவேந்திரனின் தலைவனே.


* இங்கு மயில் என்பது மயிலான இந்திரனைக் குறிக்கும். இந்த மயிலில்
ஏறி சூரனுடன் முருக வேள் சண்டை செய்தார். சூரன் மயில் வாகனமாவதற்கு
முன்பு போர்க்களத்தில் இந்திரன் மயிலாக முருகவேளைத் தாங்கினான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.47  pg 2.48  pg 2.49  pg 2.50  pg 2.51  pg 2.52 
 WIKI_urai Song number: 463 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 321 - salamalam vitta (Kanchipuram)

salamalam vittath thadampe rungudil
     sakalavi naikkoth thirunthi dumpadi
          sathiravu Ruppuc camainthu vanthoru ...... thanthaithAyum

tharavaru poykkut kidantha kanthali
     luRaiyumu yirppaic camanthu ranthoru
          thaniyili zhukkap paduntha rangamum ...... vanthidAmun

palavuru vaththaip porunthi yanRuyar
     padiyune Likkap padarntha vankaNa
          padamayil pukkuth thuranthu koNdikal ...... venRivElA

parimaLa mikkac civantha ninkazhal
     pazhuthaRa naRchot Rerinthu anpodu
          pakarvathi nicchat Rukanthu thanthida ...... vanthidAyO

silaiyume nappoR cilampai munkodu
     sivamaya matRuth thidamku lainthavar
          thiaipura maththaic cudunthi nanthiri ...... thiNkaiyALi

thirumakaL kacchup porunthi dunthana
     therivaiyi rakkath thudanpi RanthavaL
          thisaikaLi lokkap padarnthi damporu ...... kinRanjAnak

kalaikaLa Naikkoth thadarnthu vampalar
     nathikoLa kaththiR payanthu kamparmey
          karukai daththiR kalanthi runthavaL ...... kanjapAthang

karuNaimi kuththuk kasinthu Lamkodu
     karuthuma varkkup pathangaL thantharuL
          kavurithi rukkot tamarntha inathirar ...... thambirAnE.

......... Meaning .........

sala malam vittath thadam perum kudil: This is a large cottage wherefrom water and faeces are excreted,

sakala vinaik koththu irunthidumpadi: in which all past deeds settle in a collaborative effort;

sathira uRuppuc camainthu vantha oru thanthai thAyum thara varu poykkuL kidantha kanthalil: this is formed out of love between a father and a mother whose blissful union manifested through beautiful limbs brought together; this body has been lying like a rag cloth on a mat of lies, awaiting extinction;

uRaiyum uyirppai saman thuranthu oru thaniyil izhukkappadum tharangamum vanthidA mun: before my mind faces the quandary of the life in this body being uniquely pulled out and driven away by the God of Death (Yaman),

pala uruvaththaip porunthi anRu uyar padiyu(m) neLikkap padarntha: It is multicoloured; the other day, (in the battlefield) the great battleground twisted and turned under its feet;

van kaNa pada mayil pukkuth thuranthu koNdu ikal venRi vElA: it is strong and has feathers with a pattern of wide eyes; You mounted that Peacock* and drove it to win the war, Oh Lord with the Spear!

parimaLa mikkac civantha nin kazhalpazhuthu aRa nal sol therinthu anpodu pakarvathu ini satRu ukanthu thanthida vanthidAyO: I wish to praise, with full knowledge of, and love towards, Your hallowed, fragrant and reddish feet with the choicest words of purity without any blemish; will You not come happily to grant me that boon, even to a little extent?

silaiyum enap pon silampai mun kodu siva mayam atRuth thidam kulainthavar thiri puram aththai sudum thinam: On that day, when Lord SivA took the Mount MEru as a bow and burnt down Thiripuram and its demons who after forsaking worship of SivA, were thoroughly demoralised,

thari thiN kaiyALi thiru makaL kacchup porunthidum thana therivai irakkaththudan piRanthavaL: She held that bow in Her strong hand; She is the beautiful Goddess wearing a fitting blouse on Her bosom; She is compassion personified;

thisaikaLil okkap padarnthu idam porukinRa njAnak kalaikaL aNai koththu adarnthu: She has fully learnt the entire works of art contained in the texts of knowledge prevalent in all directions;

vampu alar nathi koL akaththil payanthu kampar mey karuka idaththil kalanthu irunthavaL: on the banks of KambA river where fresh flowers had blossomed, (while She was worshipping Lord SivA), She was scared (by the flash-flood in the river) and hugged the left side of Lord EgAmbara NAthar (SivA) so strongly that His reddish body turned black;

kanja pAtham karuNai mikuththuk kasintha uLam kodu karuthum avarkkup pathangaL thanthu aruL kavuri: to the devotees worshipping Her lotus feet with love and devoted heart, She kindly grants blissful status; She is Mother Gowri;

thiruk kottu amarntha inthirar thambirAnE.: You are seated in Her KumarakkOttam (of Kanchipuram), Oh Lord; You are the Lord of IndrA, Oh Great One!


* The Peacock referred to here represents Lord IndrA.
It is this Peacock that Lord Murugan mounted to fight with the demon SUran.
Prior to SUran himself becoming the Peacock mounted by Murugan, IndrA was His vehicle.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 321 salamalam vitta - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]