திருப்புகழ் 277 நிலையாத சமுத்திர  (திருத்தணிகை)
Thiruppugazh 277 nilaiyAdhasamuththira  (thiruththaNigai)
Thiruppugazh - 277 nilaiyAdhasamuththira - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
     தனதான தனத்தன தான ...... தனதான

......... பாடல் .........

நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
     நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே

நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
     நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
     சலமான பயித்திய மாகி ...... தடுமாறித்

தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
     தலைமீதில் பிழைத்திட வேநி ...... னருள்தாராய்

கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
     கவினாரு புயத்திலு லாவி ...... விளையாடிக்

களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
     கடனாகு மிதுக்கன மாகு ...... முருகோனே

பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
     படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே

பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நிலையாத சமுத்திரமான ... அகலம், ஆழம் இவ்வளவு என்று
காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற

சமுசார துறைக்கணின் மூழ்கி ... சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே
மூழ்கி,

நிசமானதெனப் பல பேசி ... மெய் போன்ற பல பொய்களைப் பேசி,

அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி ... அந்த சம்சாரக்
கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி,

பெரியோர்களிடைக் கரவாகி ... பெரியோர்களின் கூட்டத்தில்
சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி,

நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல் ... நல்ல
நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல்,

தலையான வுடற்பிணி யூறி ... உடலில் முதன்மையான நோய்கள்
வந்து தாக்கவும்,

பவநோயின் அலைப்பல வேகி ... இந்த சம்சார சாகரத்தில் பிறவி
நோய் என்னும் பல அலைகள் வீசவும்,

சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் ... கோபம்
கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல்,

பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து ... பிறவியின் மூல காரணத்தை
ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து,

உனையோதி தலைமீதில் பிழைத்திடவே ... உன் புகழ் ஓதி
இவ்வுலகில் உய்யுமாறு

நினருள்தாராய் ... உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக.

கலியாண சுபுத்திரனாக ... மேன்மை தங்கிய கல்யாண
மாப்பிள்ளையாகவே

குறமாது தனக்கு விநோத ... குறக் குல வள்ளி தேவியிடத்தில்
என்றும் விளங்கி உல்லாசமாக,

கவினாரு புயத்தில் உலாவி விளையாடி ... அழகு நிறைந்த
அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து

களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை ... மகிழும்
உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை

சுகப்பட வேவை கடனாகும் ... இன்பம் அடையும்படியாகவே
வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும்.

இதுக்கன மாகு முருகோனே ... அவ்வாறு என்னை அருளினால்
அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே.

பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ்
கூறி
... பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன்
திருப்புகழைப் பாடி

படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே ... இவ்வுலகிலே
உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து
வாழும்படியாக அருளும் செவ்வேளே,

சிவலோக மெனப்பரி வேறு ... இதுவே பூலோகத்தில் உள்ள
சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க

பதியான திருத்தணி மேவு ... திருத்தலமாகிய
திருத்தணிகையில் வாழ்கின்ற,

பவரோக வயித்திய நாத பெருமாளே. ... பிறவிப் பெரு
நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.711  pg 1.712 
 WIKI_urai Song number: 293 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திரு அருண் சந்தானம் (அட்லாண்டா)

Thiru Arun Santhanam (Atlanta)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Atlanta Thiru Arun Santhanam

Song 277 - nilaiyAdha samuththira (thiruththaNigai)

nilaiyAdha samudhdhiramAna samusAra thuRaikkaNin mUzhgi
     nijamAna dhenap pala pEsi ...... adhanUdE

nedu nALum uzhaippuLa dhAgi periyOrgaL idaik karavAgi
     ninaivAl nin adith thozhil pENi ...... thudhiyAmal

thalaiyAna udaR piNi URi bava nOyin alaip palavEgi
     chalamAna payiththiyam Agi ...... thadumARi

thaviyAmal piRappaiyu nAdi adhu vErai aRuththunai Odhi
     thalameedhil pizhaiththidavE nin ...... aruL thArAy

kaliyANa supuththiran Aga kuRamAdhu thanakku vinOdha
     kavin Aru buyaththil ulAvi ...... viLaiyAdi

kaLi kUrum unaith thuNai thEdum adiyEnai sukappada vEvai
     kadan Agum idhuk ganamAgu ...... murugOnE

palakAlum unaith thozhuvOrgaL maRavAmal thiruppugazh kURi
     padimeedhu thudhith thudan vAzha ...... aruLvELE

padhiyAna thiruththaNi mEvu sivalOkam enappari vERu
     bavarOga vayidhdhiya nAtha ...... perumALE.

......... Meaning .........

nilaiyAdha samudhdhiramAna samusAra thuRaikkaNin mUzhgi: I was drowned in the ocean of family life; an ocean whose vastness and depth can never be measured.

nijamAna dhenap pala pEsi: I used to make a lot of false statements which sounded like truth.

adhanUdE nedu nALum uzhaippuLa dhAgi: In the meantime, I put in long hours of physical labour for many days.

periyOrgaL idaik karavAgi: I used to hide myself from the company of respectable elders.

ninaivAl nin adith thozhil pENi thudhiyAmal: I never used to think of serving You or seeking Your feet.

thalaiyAna udaR piNi URi: Many major diseases attacked my body.

bava nOyin alaip palavEgi: (As I said about the ocean of family life), several waves of illnesses called the disease of birth swayed me!

chalamAna payiththiyam Agi thadumARi: I became an angry mad man and lost my balance.

thaviyAmal: I do not want to suffer like that any more.

piRappaiyu nAdi adhu vErai aRuththu: I want to contemplate on the origin of birth and to destroy its root cause, namely, desire.

unai Odhi thalameedhil pizhaiththidavE nin aruL thArAy: I want to sing Your glory and survive in this world by Your grace.

kaliyANa supuththiran Aga: You are always the great bridegroom

kuRamAdhu thanakku vinOdha: to VaLLi, the damsel of the KuravAs, in whose company You revel!

kavin Aru buyaththil ulAvi viLaiyAdi: You embrace her lovely shoulders and play with her romantically!

kaLi kUrum unaith thuNai thEdum adiyEnai: I seek the Your closeness as You rejoice in the company of VaLLi!

sukappada vEvai kadan Agum idhuk ganamAgu murugOnE: You have to make me experience happiness. It is not only Your duty but would also add to Your dignity, Oh MurugA!

palakAlum unaith thozhuvOrgaL maRavAmal thiruppugazh kURi: Those devotees of Yours, who sing Your glory without fail several times a day,

padimeedhu thudhith thudan vAzha aruLvELE: are blessed by You to live in Your company forever worshipping You!

sivalOkam enappari vERu padhiyAna thiruththaNi mEvu: People love to deem this place, ThiruththaNigai, to be the land of SivA in this world;

bavarOga vayidhdhiya nAtha perumALE.: and You have Your abode here, standing as the Curer of the disease of birth, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 277 nilaiyAdha samuththira - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]