திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 276 தொடத்துளக்கிகள் (திருத்தணிகை) Thiruppugazh 276 thodaththuLakkigaL (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் ...... முழுமோசந் துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள் துமித்த மித்திரர் விலைமுலை யினவலை ...... புகுதாமல் அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறமென வரவுட னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு ...... விளையாடி அவத்தை தத்துவ மழிபட இருளறை விலக்கு வித்தொரு சுடரொளி பரவந லருட்பு கட்டியு னடியிணை யருளுவ ...... தொருநாளே படைத்த னைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபியொர் பரத்தி னுச்சியி னடநவி லுமையரு ...... ளிளையோனே பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர் தொடுத்த சக்கிர வளைகர மழகியர் படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் ...... மருகோனே திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில் திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு ...... மயில்வீரா தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல் குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ் திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தொடத் துளக்கிகள் அ(ப்)பகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் ... தொட்டால் கூச்சம் அடைபவர் போல அசைபவர்கள். அந்த வஞ்சக நினைவு கொண்டவர்கள். அறிவுக் கண் இல்லாத மூடர்கள். இள மகளிர். குற்றம் உள்ளவர்கள். சுதைச் சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோசம் துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் ... நிலப் பிளப்பில் (பிறரை ஆழ்த்துபவர்கள்). இன்பச் சுவையைச் சிறுகச் செய்பவர்கள். தந்திரவாதிகள். எளிதில் பிணக்கம் கொள்பவர்கள். முழு மோசம் நிரம்பியுள்ள பயனிலிகள். மூடர்கள். துர்க்குணிகள். முழுப் புரட்டிகள் நழுவிகள் மழுவிகள் துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல் ... முழுதும் மாறுபட்ட பேச்சுக் காரிகள், பிடிபடாது நழுவுகிறவர்கள், தங்கள் சூது வெளியாகாமல் மழுப்புவோர்கள், (வருபவரின்) பொருளை நண்பர்கள் போல நடித்துப் பறிக்கின்றவர்கள், மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள் (ஆகிய பொது மகளிரின்) வலையில் நான் புகாமல், அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன் அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி ... (நற்கதிக்குப் போகும் வழியைத்) தடுத்து அடைத்த விலைமாதர்களுக்குச் (சமமாக நடக்கும்), இன்பத்தைக் காட்டுபவர்களும் துன்பத்தை ஊட்டுபவர்களும் ஆகிய (சித்துக்களைக் காட்டி மோசம் செய்யும்) சிலரை, அணிந்துள்ள பவளம் போன்ற ஒளி போல மதித்து, அவர்களை உடன் வரும்படி அழைத்துச் சென்று, சக்கிவாள கிரியால் சூழப்பட்ட இப்பூமியில் அவர்களுடன் வீண் பொழுது போக்கி விளையாடும் அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ ந(ல்)ல அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே ... என்னுடைய ஜாக்கிராதி* மல அவஸ்தைகளும், தத்துவ சேஷ்டைகளும் ஒடுங்க (எனது) அஞ்ஞானத்தை நீக்கி, என் உள்ளே ஞானப் பேரொளி பரவ, நல்ல (உனது) திருவருளை ஊட்டி, உன் திருவடிகளை அருளுகின்ற ஒரு நாளும் எனக்குக் கிட்டுமோ? படைத்து அனைத்தையும் வினை உற நடனோடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஓர் பரத்தின் உச்சியில் நடம் நவில் உமை அருள் இளையோனே ... படைத்து எல்லாவற்றையும் செயற்படச் செய்து காப்பாற்றி, நடராஜப் பெருமானோடு அழித்த கற்புடையாள், மரகத நிறத்தினள், ஒப்பற்ற பர வெளிக்கு மேலே நடனம் செய்கின்ற உமா தேவியார் ஈன்ற இளையோனே, பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் படிக் கடத்தையும் வயிறு அடை நெடியவர் மருகோனே ... பகைத்து வந்து அசுரர்கள் யம லோகத்தை அடையும்படி போர் செய்தவரும், சக்கரம், சங்கு ஏந்திய திருக்கரத்து அழகரும், பூமியாகிய பாண்டத்தை வயிற்றில் அடக்கியவருமாகிய நெடியோன் திருமாலின் மருகனே, கடல் திடுக்கிட அசுரர்கள் முறிபட கொளுத் திசைக் கிரி பொடிபட சுடர் அயில் திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம் வரு மயில் வீரா ... கடல் திடுக்கிடவும், அசுரர்கள் முறிபட்டு ஓடவும், சேர்ந்துள்ள அஷ்ட திக்குகளில் உள்ள மலைகள் பொடியாகும்படியும் ஒளி வேலைச் சீராகச் செலுத்தி விட்டு, ஒரு நொடியில் மயில் மீதேறி உலகை வலம் வந்த வீரனே, தினைப் புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தொடு சசி மகளொடு புகழ் திருத்தணிப் பதி மலை மிசை நிலை பெறு(ம்) பெருமாளே. ... தினைப் புனத்தில் இருந்த, இரண்டு மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட குமரி, நல்ல குறச் சாதியினள், முத்தாகிய வள்ளியுடனும், இந்திராணியின் மகளான தேவயானையுடனும், புகழ் கொண்ட திருத்தணிகை மலையில் நிலைத்து வீற்றிருக்கும் பெருமாளே. |
* அவஸ்தைகள் ஐந்து: ஜாக்கிரம் (நனவு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்), துரியம் (பேருறக்கம்), துரியாதீதம் (உயிர்ப்படக்கம்). |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.639 pg 1.640 pg 1.641 pg 1.642 WIKI_urai Song number: 267 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 276 - thodaththuLakkigaL (thiruththaNigai) thodaththu LakkikaL apakada ninaivikaL kuruttu mattaikaL kumarikaL kamarikaL suthaicchi RukkikaL kusalika LisalikaL ...... muzhumOsan thuRuththa mattaikaL asadikaL kasadikaL muzhuppu rattikaL nazhuvikaL mazhuvikaL thumiththa miththirar vilaimulai yinavalai ...... pukuthAmal adaiththa varkkiyal sarasikaL virasikaL thariththa vithruma niRamena varavuda nazhaiththu sakkira kirivaLai padikodu ...... viLaiyAdi avaththai thaththuva mazhipada iruLaRai vilakku viththoru sudaroLi paravana larutpu kattiyu nadiyiNai yaruLuva ...... thorunALE padaiththa naiththaiyum vinaiyuRa nadanodu thudaiththa paththini marakatha sorupiyor paraththi nucchiyi nadanavi lumaiyaru ...... LiLaiyOnE pakaiththa rakkarkaL yamanula kuRAmar thoduththa sakkira vaLaikara mazhakiyar padikka daththaiyum vayiRadai nediyavar ...... marukOnE thidukki dakkada lasurarkaL muRipada koLuththi saikkiri podipada sudarayil thiruththi vittoru nodiyinil valamvaru ...... mayilveerA thinaippu naththiru thanakiri kumarinal kuRaththi muththodu sasimaka Lodupukazh thiruththa Nippathi malaimisai nilaipeRu ...... perumALE. ......... Meaning ......... thodath thuLakkikaL a(p)pakada ninaivikaL kuruttu mattaikaL kumarikaL kamarikaL: These women feign ticklishness when touched. They always harbour treacherous thoughts. They are stupid, lacking the eye of knowledge. They are young damsels, full of blemishes. suthaic chiRukkikaL kusalikaL isalikaL muzhu mOsam thuRuththa mattaikaL asadikaL kasadikaL: They ditch others knocking them down into the clefts on the ground. They administer sensual pleasure in small doses. They are too cunning. They readily display their grumpiness. These useless women are full of utter treachery. They are foolish and are bereft of any virtue whatsoever. muzhup purattikaL nazhuvikaL mazhuvikaL thumiththa miththirar vilai mulai ina valai pukuthAmal: They reverse their talk completely in about turn. They are too slippery to be caught. They elude so cleverly that their misdeeds never show up. They grab their suitors' money after flirting with them in a friendly manner. They sell their bosom for a price. I do not wish to be ensnared in the net spread by these whores; adaiththavarkku iyal sarasikaL virasikaL thariththa vithruma niRam ena vara udan azhaiththu sakkira kiri vaLai padi kodu viLaiyAdi: comparable to these whores, there are others who also block my path towards righteousness; these are both elators and depressors as they indulge in sorcery; deeming them bright as coral, I used to take them home and wasted so much of my time in this world surrounded by the great Mountain ChakravaLAka. avaththai thaththuvam azhipada iruLaRai vilakkuviththu oru sudar oLi parava na(l)la aruL pukatti un adi iNai aruLuvathu oru nALE: In order that my five mental states (avasthAs*) are done away with and the various mischiefs played on me by the several tenets are removed, and to dispel the darkness of my ignorance so as to spread the bright and True Knowledge throughout my mind, kindly bless me graciously; will there be a day when I shall attain Your hallowed feet, Oh Lord? padaiththu anaiththaiyum vinai uRa nadanOdu thudaiththa paththini marakatha sorupi Or paraththin ucchiyil nadam navil umai aruL iLaiyOnE: After creating the entire universe, setting everything in motion and protecting them all, She, along with Lord NadarAjar (SivA), destroyed the whole lot; She is chaste and of a complexion of emerald green; She dances on top of the unique cosmos; and You are the younger child of that Goddess UmAdEvi, Oh Lord! pakaiththa arakkarkaL yaman ulaku uRa amar thoduththa sakkira vaLai karam azhakiyar padik kadaththaiyum vayiRu adai nediyavar marukOnE: He fought against the aggressive demons sending them all to the land of Yaman (God of Death); He is the handsome Lord holding the conch and the disc in His hallowed hands; the huge earthen pot constituting this world was concealed by Him inside His belly; and You are the nephew of that tall Lord VishNu! kadal thidukkida asurarkaL muRipada koLuth thisaik kiri podipada sudar ayil thiruththi vittu oru nodiyinil valam varu mayil veerA: The sea was in a shell-shock, the demons ran away helter skelter and the mountains in all the eight directions were shattered to pieces when You wielded the bright Spear perfectly and went around the world in a fraction of a second mounted on the peacock, Oh Valorous One! thinaip punaththu iru thana kiri kumari nal kuRaththi muththodu sasi makaLodu pukazh thiruththaNip pathi malai misai nilai peRu(m) perumALE.: She belongs to the field of millet; She is the young lass bestowed with two mountain-like breasts; She comes from a good lineage of the KuRavAs; along with that pearl-like VaLLi and DEvayAnai, the daughter of IndirANi, You are seated permanently in this famous mountain in ThiruththaNigai, Oh Great One! |
* The five avasthAs are: jAgram (wakefulness), soppanam (dream), suzhuththi (sleep), thuriyam (deep sleep) and thuriyAtheetham (total control of breath). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |