திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 271 சொரியும் முகிலை (திருத்தணிகை) Thiruppugazh 271 soriyummugilai (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனனத் தனன தனனத் தனன தனனத் ...... தனதான ......... பாடல் ......... சொரியு முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் ...... சமமாகச் சொலியு மனமெட் டனையு நெகிழ்விற் சுமட ரருகுற் ...... றியல்வாணர் தெரியு மருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் ...... கவிபாடித் திரியு மருள்விட் டுனது குவளைச் சிகரி பகரப் ...... பெறுவேனோ கரிய புருவச் சிலையும் வளையக் கடையில் விடமெத் ...... தியநீலக் கடிய கணைபட் டுருவ வெருவிக் கலைகள் பலபட் ...... டனகானிற் குரிய குமரிக் கபய மெனநெக் குபய சரணத் ...... தினில்வீழா உழையின் மகளைத் தழுவ மயலுற் றுருகு முருகப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சொரியும் முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் சமமாகச் சொ(ல்)லியும் ... மழை பொழிகின்ற மேகத்தையும், பதும நிதியையும், காமதேனுவையும், கற்பக மரத்தையும் (கொடையில்) நீ ஒப்பாய் என்று சொல்லிப் புகழ்ந்தாலும், மனம் எள் (அத்)தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகு உற்று ... மனம் ஓர் எள் அளவும் இளகி இரங்குதல் இல்லாத கீழ் மக்களின் அருகில் சென்று, இயல் வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவி பாடி ... இலக்கியத் தமிழ்ப் புலவர்கள் தெரிந்து பாடிய அருமையான பழைய பாடல்களைத் திருடியும், திரித்து நுழைத்தும் பாடல்களைப் பாடி, திரியு மருள் விட்டு உனது குவளைச் சிகரி பகரப் பெறுவேனோ ... திரிகின்ற மயக்க அறிவை விட்டு, குவளை மலர் தினமும் மலர்கின்ற, உன்னுடைய, திருத்தணிகை மலையின் பெருமையைக் கூறும்படியான பாக்கியத்தை நான் பெறுவேனோ? கரிய புருவச் சிலையும் வளைய ... (வள்ளியின்) கரிய புருவம் என்னும் வில் (காம வேதனையால்) வளைந்து சுருங்க, கடையில் விடம் மெத்திய நீலக் கடிய கணை பட்டு உருவ ... (காமனது ஐந்தாவது) கடைசிப் பாணமானதும்*, விஷம் நிறைந்ததும் ஆகிய நீலோற்பலம் என்னும் கொடுமை வாய்ந்த அம்பு உன் மேல் பட்டு, நீ அதனால் விரக வேதனை மிகுந்து, வெருவிக் கலைகள் பல பட்டன கானிற்கு உரிய குமரிக்கு அபயம் என நெக்கு ... மிகுந்த அச்சத்துடன், மான்கள் பல உள்ள வள்ளி மலைக் காட்டுக்குச் சென்று, அவ்விடத்துக்கு உரிய குமரியாகிய வள்ளிக்கு அபயம் என்று உரைத்து, உபய சரணத்தினில் வீழா உழையின் மகளைத் தழுவ மயல் உற்று உருகு(ம்) முருகப் பெருமாளே. ... அவளது இரண்டு பாதங்களிலும் விழுந்து, பின்பு, மான் பெற்ற மகளாகிய வள்ளியைத் தழுவ மோகம் கொண்டு உருகி நின்ற முருகப் பெருமாளே. |
* நீலோற்பல மலர் மன்மதனின் ஐந்தாவது ஈற்றுப் பாணம். மற்ற கணைகள் - தாமரை, மா, அசோகம், முல்லை. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.703 pg 1.704 pg 1.705 pg 1.706 WIKI_urai Song number: 290 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 271 - soriyum mugilai (thiruththaNigai) coriyu mukilaip pathuma nithiyaic curapi tharuvaic ...... camamAkac coliyu manamet tanaiyu nekizhviR sumada rarukut ...... RiyalvANar theriyu marumaip pazhaiya mozhiyaith thirudi nerudik ...... kavipAdith thiriyu maruLvit tunathu kuvaLaic cikari pakarap ...... peRuvEnO kariya puruvac cilaiyum vaLaiyak kadaiyil vidameth ...... thiyaneelak kadiya kaNaipat turuva veruvik kalaikaL palapat ...... tanakAniR kuriya kumarik kapaya menanek kupaya saraNath ...... thinilveezhA uzhaiyin makaLaith thazhuva mayalut Ruruku murukap ...... perumALE. ......... Meaning ......... coriyum mukilaip pathuma nithiyaic curapi tharuvaic camamAkac co(l)liyum: "(In granting alms) you are like the cloud that showers rain, like the (wish-yielding) Padmanidhi, KamadhEnu and KaRpaga tree" - even if one praises in such words - manam eL (ath)thanaiyum nekizhvu il sumadar aruku utRu: those miserly, base people would not be moved nor would they show an iota of kindness; approaching such people, iyal vANar theriyum arumaip pazhaiya mozhiyaith thirudi nerudik kavi pAdi: and composing songs on them by stealing from ancient and rare songs written by Tamil poets, well-versed in literature, or by inserting such poems in my own songs with slight modifications, thiriyu maruL vittu unathu kuvaLaic cikari pakarap peRuvEnO: I do not want to roam about with such deceptive knowledge; instead, I would like to sing about the greatness of Your mountain in ThiruththaNigai where everyday a black lily blossoms; will I be fortunate to sing like that? kariya puruvac cilaiyum vaLaiya: When the black bow-like brows (of VaLLi) were bent (due to pangs of passion), kadaiyil vidam meththiya neelak kadiya kaNai pattu uruva: and when the (fifth and) last flowery and severe arrow of blue lily (neelOthpalam)*, full of poison, struck You, You became very passionate, being unable to bear separation (from VaLLi); veruvik kalaikaL pala pattana kAniRku uriya kumarikku apayam ena nekku: with utmost fear, You went to the forest in VaLLimalai, belonging to that maiden, where many deers roam about, and declared that You sought refuge in VaLLi; upaya saraNaththinil veezhA uzhaiyin makaLaith thazhuva mayal utRu uruku(m) murukap perumALE.: then You fell in prostration at her feet; later, You stood there melting with intense passion to embrace her, the daughter of a deer, Oh Great One! |
* Manmathan's five flowery arrows are as follows: first arrow - lotus; second - mango; third (middle) arrow - asOkam (also known as ceyalai); fourth - jasmine; fifth (last) - blue lily (NeelOthpalam). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |