திருப்புகழ் 270 சினத் திலத் தினை  (திருத்தணிகை)
Thiruppugazh 270 sinaththilaththinai  (thiruththaNigai)
Thiruppugazh - 270 sinaththilaththinai - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தத்தன தனதன தனதன
     தனத்த தத்தன தனதன தனதன
          தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
     செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
          செனித்த தெத்தனை திரள்கய லெனபல ...... வதுபோதா

செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
     செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
          செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ ...... தளவேதோ

மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
     கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
          வதைத்த தெத்தனை யளவிலை விதிகர ...... மொழியாமல்

வகுத்த தெத்தனை மசகனை முருடனை
     மடைக்கு லத்தனை மதியழி விரகனை
          மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் ...... புரிவாயே

தனத்த னத்தன தனதன தனதன
     திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
          தகுத்த குத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ

தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
     தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
          தமித்த மத்தள தமருக விருதொலி ...... கடல்போலச்

சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
     திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
          தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை ...... பொரும்வேலா

செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
     முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
          திருத்த ணிப்பதி மருவிய குறமகள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சி(ன்)னத் திலத் தினை சிறுமணல் அளவுடல் ... சிறிய எள்ளு,
தினை, சிறு மணல் ஆகியவற்றின் அளவுள்ள உடலினை

செறித்த(து) எத்தனை ... எடுத்து மறைந்த ஜன்மங்கள் எத்தனை?

சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய
லெனபல
... அலை வீசும் கடலுக்கடியில் பெருத்த சுறா மீனிலிருந்து
சிறிய கடல் ஜந்து வரை எடுத்த பிறவிகள் எத்தனை?

அதுபோதா ... அவையெல்லாம் போதாவென்று

செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை ... மலைகளிலும்
சுனைகளிலும் ஜனித்த பிறவிகள் எத்தனை?

செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு செடத்தில் ...
பலவிதமான உடம்புகளின் புகுந்து வளர்ந்து கீழ்மைக்குரிய பெண்களின்
மார்பிலே மையல் கொண்டு அலைந்தமை எத்தனை?

எத்தனை நமனுயிர் பறிகொள்வது அளவேதோ ... யமன் பல பல
பிறவிகளிலும் பறித்துக் கொண்ட உயிர்கள் எத்தனை?

மனத்தி லெத்தனை நினைகவ டுகள் ... மனத்திலேதான் எத்தனை
வஞ்சகமான எண்ணங்கள்?

குடி கெடுத்த தெத்தனை ... வேண்டுமென்றே கெடுத்த மற்றவர்களின்
குடிகள்தாம் எத்தனை?

மிருகம தெனவுயிர் வதைத்த தெத்தனை ... கொடிய மிருகம்போல்
மற்ற உயிர்களை வதைத்தது எத்தனை?

அளவிலை ... இவை யாவற்றையும் எண்ணினால் அளவிட முடியாது.

விதிகரம் ஒழியாமல் வகுத்த தெத்தனை ... விதி வகுத்த
வழியினின்று மாறாமல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை?

மசகனை முருடனை ... கொசுவைப் போன்ற அற்பனகிய என்னை,
முரட்டுக்குணம் உடைய என்னை,

மடைக்குலத்தனை மதியழி விரகனை ... மூடர்கள் குலத்தனான
என்னை, அறிவற்ற காமாதூரனான என்னை,

மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் புரிவாயே ... உன்
மலரடிகளில் என் நெஞ்சை வைத்து உருகுதற்கு இனியாகிலும் நீ அருள்
புரிவாயாக.

தனத்த னத்தன தனதன தனதன
     திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
          தகுத்த குத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
     தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
... என்ற ஓசையோடு
கூடிய சந்தத்தில்

தமித்த மத்தள தமருக விருதொலி கடல்போல ... தமக்கே உரிய
வெற்றி ஒலியோடு மத்தளமும், தமருகம் என்ற முரசும் கடல் அலை
ஓசை போல ஆர்ப்பரிக்கவும்,

சினத்தமர்க்கள செருதிகழ் குருதிய திமிழ்த்திட ... கோபம்
பொங்கும் போர்க்களத்தில் இரத்தம் கொப்பளித்திடவும்,

கரி யசுரர்கள் பரி சிலை தெறித்திட ... போரில் யானைகளும்,
அசுரர்களும், குதிரைகளும், விற்களும் தெறித்து சின்னாபின்னமாக
விழுந்திடவும்,

கழு நரிதின நிணமிசை பொரும்வேலா ... கழுகும் நரியும்
பிணங்களைத் தின்ன, மாமிச மலை மீது நின்று சூரனோடு போர்
செய்த வேலனே,

செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ முநிக்கணத்தவர் ...
மனவளம் மிக்க உத்தமர்களான சிவனடியார்களும், தவமுநிவர்
கூட்டங்களும்

மதுமலர் கொடுபணி ... தேன் நிறைந்த மலர்களைக் கொண்டு
பணிகின்ற

திருத்தணிப்பதி மருவிய ... திருத்தணிகை என்ற திருப்பதியிலே
வீற்றிருக்கும்

குறமகள் பெருமாளே. ... குறப்பெண் வள்ளியின் மணவாளப்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.637  pg 1.638  pg 1.639  pg 1.640 
 WIKI_urai Song number: 266 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 270 - sinath thilath thinai (thiruththaNigai)

sinaththi laththinai sirumaNaL aLavudal
     seRiththa dheththanai silai kadalinil uyir
          jeniththa dheththanai thiraL kayal ena pala ...... adhupOdhA

semiththa dheththanai malai sunai ulagidai
     sezhiththa dheththanai siRu dhana mayalkodu
          jedaththi leththanai namanuyir paRikoLvadh ...... aLavEdhO

manaththi leththanai ninai kavadugaL kudi
     keduththa dheththanai mirugama dhena uyir
          vadhaiththa dheththanai aLavilai vidhikaram ...... ozhiyAmal

vaguththa dheththanai masaganai murudanai
     madai kulaththanai madhi azhi viraganai
          malar padhaththinil urugavum ini aruL ...... purivAyE

thanaththa naththana thanathana thanathana
     dhimith dhimith dhimi dhimidhimi dhimidhimi
          thaguth thaguth thagu thaguthagu thaguthagu ...... thagu theedhO

tharith tharith thari thaririri riririri
     thadut tudut tudu tadududu dudududu
          thamiththa maththaLa dhamaruga virudholi ...... kadal pOla

sinaththa markkaLa seruthigazh kurudhi
     adhimizhththi dakkari asurargaL pari silai
          theRiththidak kazhu nari thina niNamisai ...... porum vElA

sezhikkum uththama sivasaraNargaL thava
     muni gaNaththavar madhumalar kodu paNi
          thiruththaNip padhi maruviya kuRamagaL ...... perumALE.

......... Meaning .........

sinaththi laththinai sirumaNaL aLavudal seRiththa dheththanai: How many lives have I been born in bodies of the size of little tilseed (gingely), thinai seed and minuscule sand?

silai kadalinil uyir jeniththa dheththanai: In how many times did I get life beneath the roaring ocean full of waves

thiraL kayal ena pala: in several forms, from the giant shark to little fish?

adhupOdhA: Not content with that,

semiththa dheththanai malai sunai: how many births have I taken in hills and ponds?

ulagidai sezhiththa dheththanai siRu dhana mayalkodu: In how many physical forms did I exist, which fancied and lusted for the trashy bosoms of women?

jedaththi leththanai namanuyir paRikoLvadh aLavEdhO: Is there a count for the number of lives that were snatched away in several births by Yaman (God of Death)?

manaththi leththanai ninai kavadugaL: How many treacherous thoughts did I nurture in my heart?

kudi keduththa dheththanai: How many families did I ruin?

mirugama dhena uyir vadhaiththa dheththanai: How many living beings did I torture in a brutal way?

aLavilai: It is simply countless!

vidhikaram ozhiyAmal vaguththa dheththanai: How many incidents have occurred which did not deviate from their destined course?

masaganai murudanai: This person, me, is like a mere mosquito, a bully,

madai kulaththanai madhi azhi viraganai: one in the clan of dullards and who is full of lust and devoid of wisdom.

malar padhaththinil urugavum ini aruL purivAyE: For my heart to melt at Your lotus feet, will You kindly bless me at least henceforth?

thanaththa naththana thanathana thanathana
dhimith dhimith dhimi dhimidhimi dhimidhimi
thaguth thaguth thagu thaguthagu thaguthagu thagu theedhO
tharith tharith thari thaririri riririri
thadut tudut tudu tadududu dudududu:
To the aforesaid meter,

thamiththa maththaLa dhamaruga virudholi kadal pOla: the voice of victory sounded characteristically from maththaLam and dhamarukam (percussion instruments), resounding like the roaring sea.

sinaththa markkaLa seruthigazh kurudhi adhimizhththida: Blood was shed profusely at the battle field where the war was waged with fury.

kari asurargaL pari silai theRiththida: Elephants, demons, horses and bows were torn into shreds

kazhu nari thina niNamisai porum vElA: while vultures and wolves fed on the corpses, when You stood on a mountain of human flesh and fought with SUran, Oh VElA!

sezhikkum uththama sivasaraNargaL: The virtuous Saivite savants of great mind

thavamuni gaNaththavar madhumalar kodu paNi: and the galaxy of sacred sages worship You with honey-filled flowers at

thiruththaNip padhi maruviya kuRamagaL perumALE.: ThiruththaNigai, where You reside along with Your consort, VaLLi, the damsel of the KuRavAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 270 sinath thilath thinai - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]