திருப்புகழ் 259 கனைத்து அதிர்க்கும்  (திருத்தணிகை)
Thiruppugazh 259 kanaiththuadhirkkum  (thiruththaNigai)
Thiruppugazh - 259 kanaiththuadhirkkum - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
     தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான

......... பாடல் .........

கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே
     கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே

தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே
     தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ

தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா
     திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே

பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா
     படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

கனைத்து அதிர்க்கும் இப் பொங்கு கார்க்கடல் ஒன்றினாலே ...
ஒலித்து அதிர்கின்ற இந்தப் பொங்கும் கரிய கடல் ஒன்றினாலும்,

கறுத்து அறச்சிவத்து அங்கி வாய்த்தெழு திங்களாலே ...
கோபித்து மிகச் சிவந்து போய் நெருப்பின் சூட்டினைப்
பூண்டுகொண்டு உதித்த சந்திரனாலே,

தனிக்கருப்பு விற் கொண்டு வீழ்த்த சரங்களாலே ... ஒப்பற்ற
கரும்பு வில்லினை ஏந்தி மன்மதன் செலுத்திய மலர்ச் சரங்களாலே,

தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ ...
வாட்டத்தால் தனித்த ஒருத்தியாம் இந்தத் தலைவி இளைப்புற்று
இங்கு உடல் தளரலாமோ?

தினைப்புனத்தினைப் பண்டு காத்த ... தினைப் புனத்தில்
உள்ள பயிரை முன்னாள் காவல் செய்த

மடந்தைகேள்வா ... வள்ளியின் கணவனே,

திருத்த ணிப்பதிக் குன்றின் மேல் ... திருத்தணித் தலத்தின்
மலை மீது

திகழ் கந்தவேளே ... விளங்குகின்ற கந்தக் கடவுளே,

பனைக்க ரக்கயத்து அண்டர் போற்றிய ... பனைமரம் போன்று
பருத்த தும்பிக்கையை உடைய வெள்ளை யானைக்கு (ஐராவதம்)
உரிய தேவர்கள் போற்றுகின்ற

மங்கைபாகா ... மங்கையாகிய தேவயானையின் பக்கத்தில்
இருப்பவனே,

படைத்து அளித்து அழிக் கும் ... ஆக்கி அளித்து அகற்றும்
முத்தொழில்களையும் செய்யும்

த்ரி மூர்த்திகள் தம்பிரானே. ... மும்மூர்த்திகளின் தலைவனான
பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை
தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.677  pg 1.678  pg 1.679  pg 1.680 
 WIKI_urai Song number: 281 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)



 பாடல் ரா - 1    song R1 


 பாடல் ரா - 2    song R2 

Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 259 - kanaiththu adhirkkum (thiruththaNigai)

kanaiththa dhirkkumip pongu kArkkadal ...... ondrinAlE
     kaRuththaRa sivath thangi vAyththezhu ...... thingaLAlE

thani karuppuviR kondu veezhththa ...... sarangaLAlE
     thagaith thoruththiyeyth thingu yAkkai ...... sazhangalAmO

thinaip punaththinai paNdukAththa ...... madandhai kELvA
     thiruththaNi padhi kundrin mEtrigazh ...... kandha vELE

panaik karak kayath thaNdar pOtriya ...... mangai bAgA
     padaith thaLith thazhikkum thrimUrthigaL ...... thambirAnE.

......... Meaning .........

kanaiththa dhirkkumip pongu kArkkadal ondrinAlE: Ever roaring and tossing with waves, this dark sea is one (that haunts her);

kaRuththaRa sivath thangi vAyththezhu thingaLAlE: the moon which has become red with anger burning like fire is another one (that haunts her);

thani karuppuviR kondu veezhththa sarangaLAlE: the flowery arrows shot from the bow of sugarcane by Manmathan (Love God) are another bunch (that haunt her); and

thagaith thoruththiyeyth thingu yAkkai sazhangalAmO: due to the pangs of separation from You, MurugA, this heroine is alone in suffering. Does she deserve this punishment?

thinaip punaththinai paNdukAththa madandhai kELvA: You, VElA, are the consort of VaLLi, the damsel of the millet field, which she once protected from the birds.

thiruththaNi padhi kundrin mEtrigazh kandha vELE: You reside at the mount at ThiruththaNigai, Oh KanthA, my Lord!

panaik karak kayath thaNdar pOtriya mangai bAgA: DEvAs who have AirAvatham, the white elephant with a trunk as thick as the palm tree, worship DEvayAnai; and You are her consort.

padaith thaLith thazhikkum thrimUrthigaL thambirAnE.: You are above the Trinity of BrahmA, Vishnu and SivA who take care respectively of Creation, Protection and Destruction, Oh Great One!


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The sea, the moon, Love God and the flowery arrows are some of the sources which aggravate the separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 259 kanaiththu adhirkkum - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]