திருப்புகழ் 22 அந்தகன் வருந்தினம்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 22 andhaganvarundhinam  (thiruchchendhUr)
Thiruppugazh - 22 andhaganvarundhinam - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தனந்தனந் தனதனத்
     தந்தன தனந்தனந் தனதனத்
          தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான

......... பாடல் .........

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
     சந்தத மும்வந்துகண் டரிவையர்க்
          கன்புரு குசங்கதந் தவிரமுக் ...... குணமாள

அந்திப கலென்றிரண் டையுமொழித்
     திந்திரி யசஞ்சலங் களையறுத்
          தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
     கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
          சென்றுசெ ருகுந்தடந் தெளிதரத் ...... தணியாத

சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித்
     தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
          சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
     கும்பிடு புரந்தரன் பதிபெறக்
          குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்

குன்றிடி யஅம்பொனின் திருவரைக்
     கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
          குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
     செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
          தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான

சங்கரி மனங்குழைந் துருகமுத்
     தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
          சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அந்தகன் வருந்தினம் பிறகிட ... யமன் வருகின்ற தினமானது பின்
தள்ளிப் போக,

சந்ததமும் வந்துகண்டு அரிவையர்க்கு அன்புருகு சங்கதம்
தவிர
... எப்போதும் வருவதும் போவதும் காண்பதுமாய், பெண்களிடம்
அன்பு காட்டி உருகக்கூடிய தொடர்பு விட்டு நீங்க,

முக் குணம் மாள ... சத்துவம், ராஜதம், தாமதம் என்ற மூன்று
குணங்களும் அழித்து,

அந்திபகலென்றிரண்டையுமொழித்து ... இரவு (ஆன்மா
செயலற்றுக் கிடக்கும் நிலை), பகல் (ஆன்மா உழலும் நிலை) என்னும்
இரண்டு நிலைகளையும் ஒழித்து,

இந்திரிய சஞ்சலங் களையறுத்து ... ஐம்பொறிகளால் வரும்
துன்பங்களை அறுத்து,

அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி ... தாமரை போன்ற
உன் திருவடிகளின் பெருமையைக் கவிபாடி,

செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற ... திருச்செந்தூரைக்
கருதி உணர்ந்து ஞானம் பிறக்க,

கந்தனை அறிந்து அறிந்து அறிவினில் ... கந்தக் கடவுளாம்
உன்னைஅறிந்து அறிந்து அந்த அறிவின் வழியே

சென்று செருகுந் தடந் தெளிதர ... சென்று நுழைந்து முடிகின்ற
இடம் தெளிவு பெற,

தணியாத சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து ... அடங்காத மனமும்
நெகிழ்ந்து நெகிழ்ந்து,

உரையொழித்து என்செயல் அழிந்தழிந்து அழிய ... பேச்சும்
நின்று, எனது செயலும் அடியோடு அற்றுப் போக,

மெய்ச்சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் படுவேனோ ...
உண்மையான அறிவு வர, எப்பொழுது உன்னைக் காணும் பாக்கியத்தை
யான் பெறுவேனோ?

கொந்தவிழ் சரண்சரண் சரணென ... மலர்க் கொத்துக்கள் கிடக்கும்
பாதங்களே சரணம் சரணம் என்று

கும்பிடு புரந்தரன் பதிபெற ... கும்பிட்ட இந்திரன் தனது ஊராகிய
அமராவதியை மீண்டும் பெற,

குஞ்சரி குயம்புயம் பெற ... யானை வளர்த்த மகள் தேவயானையின்
மார்பகம் உன் திருப்புயங்களைப் பெற,

அரக்கரும் மாள ... அரக்கர்கள் யாவரும் மாண்டழிய,

குன்றிடிய ... கிரெளஞ்ச மலை பொடிபட்டு விழ,

அம்பொனின் திருவரைக் கிண்கிணி கிணின்கிணின்
கிணினென
... அழகிய பொன்னாலான அரைஞாண் கிண்கிணி
கிணின் கிணின் கிணின் என்று ஒலிக்க,

குண்டலம் அசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீச ...
குண்டலங்கள் அசைந்து சிறிய காதணிகளில் ஒளிவீச,

தந்தன தனந்தனந் தனவென ... தந்தன தனந்தனந் தன என்ற
ஓசையோடு

செஞ்சிறு சதங்கைகொஞ்சிட ... செவ்விய சிறு சதங்கைகள்
சிற்றொலி செய்திட,

மணித் தண்டைகள் கலின்கலின் கலினென ... மணித் தண்டைகள்
கலின்கலின் கலின் என்று சப்திக்க,

திருவான சங்கரி மனங்குழைந்துருக ... அழகிய சங்கரி மனம்
குழைந்து உருகி நிற்க,

முத்தந்தர வருஞ்செழுந் தளர்நடைச் சந்ததி ... முத்தம் தர வரும்
செழுவிய தளர்ந்த நடைப் பிள்ளையே,

சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே. ... இந்த வையமெல்லாம்
தொழும் சரவணப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.140  pg 1.141  pg 1.142  pg 1.143 
 WIKI_urai Song number: 47 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 22 - andhagan varundhinam (thiruchchendhUr)

andhakan varun dhinam piRagida
     santhatha mumvandhukaN darivaiyark
          anburu gusangathan thaviramuk ...... guNamALa

andhipa galendriraN daiyumozhith
     indhiri yasanchalan gaLaiyaRuth
          ambuya padhangaLin perumaiyai ...... kavipAdi

chendhilai uNarndhuNarn dhuNarvuRak
     kandhanai aRindhaRin dhaRivinil
          chendruche rugunthadan theLithara ...... thaNiyAdha

chindhaiyu mavizhndhavizhindh uraiyozhith
     enseyal azhindhazhin dhazhiyameyc
          chinthaiva raendrunin dherisanaip ...... paduvEnO

kondhavizh charaNsaraN saraNena
     kumbidu purandharan padhipeRa
          kunjari kuyambuyam peRaarak ...... karumALa

kundridi yaamponin thiruvaraik
     kiNkiNi kiNinkiNin kiNinena
          kuNdala masaindhiLang kuzhaikaLiR ...... prabaiveesath

thananthanan thanan thanavena
     chenchiRu chadhangaikon jidamaNith
          thaNdaigaL galingalin galinena ...... thiruvAna

sankari manangkuzhain dhurugamuth
     thanthara varumchezhun thaLarnadai
          sandhathi jaganthozhum saravaNa ...... perumALE.

......... Meaning .........

andhakan varun dhinam piRagida: To postpone the day of my reckoning with the God of Death (Yaman);

santhathamum vandhukaN darivaiyarkku anburugu sangatham thavira: to end the frequent going in and out, seeing women and having a passionate liaison with them;

muk guNamALa: to get rid of the three characteristics, namely sathwam (tranquility), rAjasam (aggressiveness) and thAmasam (sluggishness);

andhipagal endr iraNdaiyum ozhiththu: to do away with the night (when the soul is inactive and asleep) and the day (when the soul is active and agitated);

indhiriya sanchalangaLai aRuththu: to sever the sufferings caused by the five sensory organs;

ambuya padhangaLin perumaiyai kavipAdi: to sing the glory of Your hallowed lotus feet;

chendhilai uNarndh uNarndh uNarvuRa: to contemplate the greatness of ThiruchchendhUr deeper and deeper until wisdom dawns;

kandhanai aRindhaRindh dhaRivinil chendru cherugun thadan theLithara: to understand You, KandhA, more and more, until that knowledge leads to the final destination with immaculate clarity;

thaNiyAdha chindhaiyum avizhndh avizhindhu: to disentangle my uncontrolled mind from each and every knot;

uraiyozhith enseyal azhindh azhindh azhiya: to put an end to my speech and to let my action fade out gradually;

meychinthaivara: and to attain the Real Wisdom;

endru nin dherisanai paduvEnO: when will I be granted Your vision (to accomplish all the above)?

kondhavizh charaN saraN saraNena: Saying that Your holy feet, immersed in bunches of flowers, are the ultimate refuge,

kumbidu purandharan padhipeRa: IndrA, the leader of the DEvAs, worshipped You and regained the capital (AmarAvathi) of his land.

kunjari kuyambuyam peRa: The damsel of the DEvAs, DEvayAnai, brought up by an elephant, won Your broad shoulders for her bosom.

arak karu mALa kundridiya: All the demons were killed, and Mount Krounchagiri, was smashed into powder.

amponin thiruvarai kiNkiNi kiNinkiNin kiNinena: Your waist-band, made of lovely gold, produced lilting sound like "kiNin kiNin kiNin";

kuNdalam asaindhiLang kuzhaikaLiR prabaiveesa: Your swinging ear-drops radiated luminous rays over the petite studs on Your ears;

thananthanan thanan thanavena chenchiRu chadhangai konjida: Your reddish little anklets made musical sounds to the tune of "thananthanan thanan thana";

maNi thaNdaigaL galin galin galinena: and Your thandais (another type of anklet), made of gems, sounded like "galin galin galin"

thiruvAna sankari manang kuzhaindh urugamuththanthara varum: when You came to kiss Your mother, beautiful Sankari, sending Her into ecstatic pleasure.

chezhun thaLarnadai sandhathi: You are Her Son walking towards Her with a strong and relaxed gait!

jaganthozhum saravaNa perumALE.: You are worshipped all over the world, Oh SaravanA, the Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 22 andhagan varundhinam - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]