Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 53  வேடிச்சி கொங்கை
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 53  vEdichchi kongkai
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 53 ... வேடிச்சி கொங்கை

வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
   பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
      தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
         வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.

......... சொற்பிரிவு .........

வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய் அன்பினால்
   பாடிக் கசிந்து உள்ளபோதே கொடாதவர் பாதகத்தால்
      தேடிப்புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து
         வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.

......... பதவுரை .........

வேடவர் மகளாகிய வள்ளியம்மையை விரும்பும் திருமுருகப்பெருமானை
உண்மையான அன்போடு உருகிப் பாடி, பொருள் உள்ளபோதே
பொருளற்ற ஏழைகளுக்குக் கொடாதவர்கள், தாம் நேர்மையற்றவழியில்
தேடிய செல்வத்தை மண்ணில் புதைத்து ஒளித்துவைத்திருந்தபோது
அப்பொருளைத் திருடர்களிடம் பறிகொடுத்துவிட்டு, திகைத்து
உடல் மெலிந்து மனம் வாட்டமுற்று துக்கப்பட்டு தம் வாழ்நாளை
வீணாக அழிப்பவர்களே ஆவர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.59   pg 4.60 
 WIKI_urai Song number: 53 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 53 - vEdichchi kongkai

vEdichchi kongkai virumbum kumaranai mei anbinAl
   pAdik kasindhu uLLapOthE kodAdhavar padhagaththAl
      thEdippudhaiththuth thiruttil koduththuth thigaiththu iLaiththu
         vAdik kilEsiththu vAzhnALai veeNukku mAippavarE.

Those people who tenderly sing and praise ThirumurugapperumAn, Who is fond of the hunter's daughter VaLLi-ammai, with sincere love, [but] do not give alms/gifts to poor people while still having wealth, and instead hoard their ill-gotten wealth under the earth, lose it to the thieves, and taken aback by the loss of their wealth, become weak in body and mind, and suffer, are merely ruining their lifetime in vain.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 53 - vEdichchi kongkai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]