பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 635 1274. மூலா நில மதின் மேலே மனதுறு மோகாடாவி சுடர் தனை நாடி - மனதுறு மோகாடாவி மனத்திற் பொருந்தியுள்ள மோகாடவி - மோக அடவி - ஆசை என்கின்ற காடு - வேறு வழியிற் செல்லாது, மூலா நிலம் அதின் மேலே - மூலாதார நிலைக்கு மேலே உள்ள சுடர்தனை நாடி - ஜோதியை நாடி (மூலாதாரத்தில் உள்ள விநாயகர் முதல், மேலே சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை முதலிய ஆதாரங்களில் உள்ள பிரமா, விஷ்ணு, ருத்திரன், மகேசுரன் - சதாசிவம் ஆகிய மூர்த்திகளின் திருக்கோலங்கள் பிரசன்னமாகி நல்ல சுடர் தோற்றமுற யோகவழியில் நாடி (அல்லது மூலா - மூலப் பொருளே! நிலமதின் மேலே - இப் பூமியிலே) என் மனத்தில் உள்ள ஆசை என்கின்ற காடு (சுடர்தனைநாடி) ஜோதி ஒளியாகிய உன்னைநாடி மோனாநிலைதனை - மெளனநிலையை, நானாவகையிலும் . பல வகையாலும், ஒதா கற்று நெறிமுறை முதல் கூறும் நன்னெறிமுறை வழி முதலானவற்றைக் கூறுகின்ற காட்டுகின்ற லீலாவிதம் - உனது பலவகைய லீலைகளின் - திருவிளையாடல்களின் உண்மை நிலையை, உனதாலே - உன்னுடைய திருவருளாலே (கண்டு), (அல்லது உன்ன - ஆராய்ந்து கருத, அதாலே - அதன் பயனாக). நான் நற்கதியைப் பெற பெறும்படியான (நேமாரகசியம்) நியமம் வாய்ந்த ஒழுங்கான ரகசிய உபதேசத்தின். (பலமது தருவாயே): நீடுழி - நீண்ட ஊழிகாலத்தும் (எப்போதும்) தன்நிலை - தனது நிலை வாடாத - கெடாத மணி ஒளியே - சுயம் பிரகாச மணிச் சோதியே! நீதா - நீதனே - நீதிமானே! பலமது - பலனை - பயனைத் தந்தருளுக. (அல்லது உபதேசமாம் - தன்நிலை நீடுழி வாடா மணி ஒளியை தனது சுயம் பிரகாச ஒளி நீண்ட ஊழி காலத்தும் வாடாத மணிச்சோதி ஒளியை உபதேச ஒளியை நீதனே! பலமது - பயன்தரத்தருவாயே உபதேசித்தருளுக எனலுமாம். X மணியொளி - மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்" - கந்தரநுபூதி 51