பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 445 (உதரம் எரிதர வயிற்றில் எரிச்சல் உண்டாகும்படி மருந்திட்டு ஆட்டிவைப்பவர்; உயிர் நிலைகளையே (விரித்துச் சேர்ப்பவர்) (தங்கள் கடுமொழிகளாலும் சரசமொழிகளாலும்) பிரித்துக் கூட்டியும் வைப்பவர்; (அத்தகைய பொதுமாதர்களின்) சம்பந்தமான புணர்ச்சியை சேர்க்கையை நான் விட்டொழிக்கும்படி என்னை ஆண்டு கொண்டருள (உன் திருவுள்ளம்) நினைக்காதா! மருதமரம் பொடிபட உதைத்தவர் (சகடை) உதைத்தவர்; ஆயர் சேரியில் இருந்த மகளிருடைய உறிகளை எல்லாம் உடைத்து போட்டவர்; கலங்கும்படி ஒரு கயிற்றினால் அடிபட்டுக் கட்டுண்ண அழுதவர்; பெருகி வளர்ந்த (திரிவிக் ரமராப் பேருரு எடுத்த) நெடிய மேகவண்ணர், எதிரில் காட்டு பார்க்கலாம் என்று மகனாம் பிரகலாதனைக்கேட்டுத் தூணை மோதின. அந்த முட்டாள் இரணியனுடைய (உரத்தை மார்பைப் பிளந்தவர், மழை பொழிந்த பொழுது - பசுக்கூட்டத்தை கோவர்த்தனகிரியைக் குடையாக எடுத்துப்பிடித்துக் காத்தவர்-ஆகிய திருமாலின் மருகனே! வீரசின்னங்கள் பல பல ஒலிக்கச், சூரனுடைய கூட்டங்களின் பயங்கரமான பெரிய தலைகளைப் பறித்தெறிந்து, அவர்களின் தோள்களை விழும்படி முறித்து, அடித்துத் தாக்கின வேல் வீரனே! வெகுதி - (வெகு தீயால்) - பெருநெருப்பால் கடலை எரித்து, வினை செய் அசுரர்கள் - தீவினைகளைப் புரிந்த அசுரர்கள் (துாள்பட) அழியும்படி - பதிக்குள் - அவர்கள் வாழ்ந்த மகேந்திர நகரில் (சலதியை) கடல் நீரைப் பாய்வித்த - நகரைக் கடல் நீரால் அழித்த (வி.புத தேவனே - மலர்களை உனது திருவடியில் விரியத் தூவிப் பரவிப் போற்றுபவர்களின் பெ s (ஆட்கொள நினையாதோ)