பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 397 கோபத்துடன் (இறந்து பட்ட) அசுரர்களின் உடலைத் தின்று தின்று (இன்புடன்) மகிழ்ச்சியுடனே, டுமுடுமுடடு முடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் என ஒலிக்கும் (திமிலை) ஒரு வகைப் பறை, பறை, (முழவு) முரசு, (துடி) உடுக்கை, (பம்பை) பறை வகை, சங்கு - ஆதிய வாத்தியங்கள் (தவ) மிகவும் (மோத) அடிபட்டு ஒலிக்க (சர வரிசை) அம்புகளை வரிசை வரிசையாகச் செலுத்தின குமரனே தேவர்கள் முன்பு அடை பட்டிருந்த சிறையினின்றும் வெளியேறுவதற்கே அவதரித்த முருகனே! என்று கூறி வந்து இந்திரனும் நான் முகனும் (பிரமனும்) திருவடியைப் போற்றி செய்ய, (மண்டு) நிறைந்து எழுந்த (வெஞ்சம்) கோபத்துடன் சண்டை செய்த (அல்லது) வெஞ்ச(மலும் - கொடிய போரைச் செய்த ஒளி வேலனே! உலகம் எல்லாவற்றையும் முழுசாக அமுதாக உண்ட மேக மனையவனாம் திருமாலும் காணுதற்கு முடியாத திருமுடியை உடையவர், (அரவங்களும்) பாம்புகளையும், சந்திரனையும், (சலம்) கங்கையையும், (இதழி) கொன்றையையும் அணிகின்ற ஒப்பற்ற (சங்கரன்) சிவன் அளித்த பெருமாளே! (செனனம் இது தவிர பைங் கழல் தாராய்) 1165. கொங்கை சற்று குலுங்க, (பொற் கலன்கள்) பொன்னாலாய ஆபரணங்களும், (பட்டு இலங்க) பட்டாடையும் விளங்க, அழகிய (சதங்கை) சலங்கையும், (கல்) ரத்னங்கள் இழைக்கப் பெற்ற சிலம்பும் (ஒத்தி) தாளமிடுதல் போல ஒலிக்கக் கையில் ஏந்தியுள்ள வீணை, (ததும்ப) மேன்மேலும் ஒலி எழுப்ப, (கைக் குழந்தைச் சொல் பரிந்து) கைக் குழந்தையின் மழலைச் சொல் போலச் சொற்களைப் பேசுவதாகி (அற்புக்கு இதங்க) அன்புக்கு இதமான - இன்பமான வழியில் (பொன் சரம்) பொன்னாலாய மாலையைச் (சுற்றிட்டு) கழுத்தைச் சுற்றி அணிந்து, (இணங்க) மனம் ஒத்து வரக், (கண் சர வேலால்) கண்ணாகிய அம்பாலும் வேலா லும், நாள்தோறும் (பித்த மருந்தைத் தந்து) காம மயக்கத்தை ஊட்டி, (இணங்கி) இணங்கினவர்களாய்ச் சொல்லும் கட்டி, கரமும் கட்டி - சொல்லுக்குக் கட்டுப் பட்டவர்களாய் கைகட்டி நடந்து, கலவியிற் கூடி (தினம் தெட்டி) நாள்தோறும் (தெட்டி) வஞ்சிப்பவராய்க் (கடன் பற்றி) தங்களுக்கு உரிய பொருளைப் பற்றிக் கொள்ளுகின்ற மாதர்களின்,