பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப் புகழ் உயை 17| (கொளுவ) கொழுந்துவிட்டு எரிய, அவைதமில் மொகம் கொண்டவனாய், (விறோடு போய்) வீறாப்புடன் - பெருமையுடன் நடந்தவனாப், நீண்டகாலம் மலர்ப்படுக்கையில் ஏறி, (ஆமாறு) மேலான நிலைக்கு வரும் வழிகள் எல்லாம் - (போமாறு) கெட்டழியும்படி (அல்லது செல்வம்கூடி வரும் வழிகள் எல்லாம் தொல்ைந்து போம்படி), (அந்த வேசையர்களுடன்) கூடிக் குலவி, இன்பகரமான பேச்சுக்களைப் பேசி, ரவிக்கை அணிந்துள்ளதும், அணிந்துள்ள முத்துமாலையைக் கொண்டதுமான கொங்கையில் மனம் உருக மன்மத ராஜனுடைய (கோலாடு) பானங்கள் இயற்றும் (மாபூசல்) பெரிய காமப் போர் உண்டாக, கண்கள் சுழற் உற்று . சுழன்று மேலே உள்ள கூந்தலை எட்டிப் பார்ப்பது போல அணுகி மீள, நிலவொளியைக் கொண்ட முகம் ஒளி வீச (நீராளமாய் ம்ே.வி) (வேர்வை நீர் மிகவும் பெருகப் ப்ொருந்தி, காமப் பற்றுாறியே விதம் விதமாக மிக்க மோகம் என்னும் (வாராழியூடான) பெரிய கடலிடையே கிடைக்கின்ற பொருள் அளவது அளவாக) பொருளின் அளவே தாம் தரப்போகும் போகத்தின் அளவாக, எல்லாருடனும் (மாலான) ΕΗΤΙΙΙ இச்சையைக் காட்டும் (வனிதையர்கள்) மாதர்களின் வசப்பட்டவனான அடியேனும் ஈடேறும் படி அருள் புரிவாயாக என்னுடைய பேச்சு தவறாமல் நீ போவாயாக காட்டுக்கு என்று (விர்கு உபாயம் குறைவு படாத (மாதாவும்) கைகேயியும் நேரே தம்மிடம் விஷயங்களை எடுத்து ஒதச் சொன்ன சொல் தவறாமலே, (மாமாதும் இலக்குமி அன்ைய் (மனைவி) மாது சீதேவியும், தம்பி இலக்குமணனும் (கூட வர) (ஏ.கி) காட்டுக்குப் போய். கண்ணுக்கு இனிய உருவத்துடன் வந்த மாயம் வல்ல மாரீசனாம் மானின் உயிர் மாள எதிர்த்து வந்த கர தூஷணராதிய வீரர்கள் போரில் மாள, நெருங்கி நீண்டிருந்த மராமரங்கள் ஏழும் பொடிபட்டழிய, வாலியினுடைய உயிரைக் கோபித்தழித்து அநுமானொடு பிற குரங்குகளும் கூடிவர (வாராகம்) கடலாகிய நீராழி - நீர் வட்டத்தை (அணையிட்டு) அடைத்து, அந்த அனைமீது ஏறிச்சென்று, மகா பாவியாகிய ராவணனுடைய (ஊர்) இலங்கை நகரை அடைந்து, அரக்கர்களுடைய கூட்டம் எல்லாம் மாளப் பொடி செய்து, (ஆலாலம்) ஆலகால விஷம் போல மகா கோபத்துடன் வந்த அரக்கர் தலைவன் - ராவணனுடைய -