பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 303 விஷத்தை அதிகமாகச் சொரிகின்ற சிவந்த கண்களை உடைய யமன் (வெட்டத்தனம் உற்றிட்டு) - அழிக்க வேண்டும் என்கிற தன்மையைக் கொண்டு அடைந்து, உயிராகிய (வித்துத்தனை) வித்தை - விதையை நீக்கிக் கொண்டு போவதற்கு முன்பாக (எனது வினையும், பற்றும் அற்று (அற) ஒழிந்து நீங்க நாள் (தோறும் புதிய புதிய சொற்களைக் கொண்டு வெட்சிமாலை அணிந்த (உனது) திருப் பு:பங்களின் வெற்றிப் புகழை உரைக்கும் (பாக்கியத்தைப்) பெறுவேனோ! நெருங்கியுள்ள சிறந்த சடையில் அழகிய பிறைச் சந்திரன், (அப்பு கங்கைநீர், இவைதமைப் புனைந்துள்ள அணிந்துள்ள (அப்பர்க்கு) தந்தையாம் சிவ பிராற்கு ஞானம் கூடிய பொருளை உபதேசித்தவனே! - (அலகைக்குள்) பேய்க் கூட்டங்களுள் பசி தித்த - பசி திருந்த அடங்க வேண்டிப், பலகை - பலபேய்களின் கைகளும் (கொத்தது பட்டிட்டு அலற) - ஒன்றோ டொன்று உனக்கு எனக்கு என்று பிணங்களின் மீது கையால் அப்பிணங்களைக் கொத்தும்போது ஒன்றின் கை ஒன்றின் மேல் கொத்துப்பட, அதனால் நோயுண்ட பேய்கள் அலற - வேதனையாற் கூச்சலிடவும், (ஒன்றை ஒன்று) குத்திடவும், (அசுரர்களை) எதிர்தாக்கிச் சண்டை செய்த வேலனே! கடலுக்குள்ளே அமைந்த ஆதிசேடன் என்னும் பாம்பின் மேலே மெச்ச - (அடியார்கள்) போற்றித் துதிக்க (அறி) துயில் கொண்டுள்ள (பச்சைக்கிரி) பச்சை மலைபோன்ற வடிவை உடையவனும், (கைக்குள்) திருக்கரத்திலே (திகிரிக் கொற்றவன்) சக்கரம் கொண்ட அரசனுமான (மாயன்) திருமாலுக்கும் "சதையைச் சில கைக் கொள, மற்றதனைச் சருவிச் சருவிப் பறிக்கும் ஒரு திரள்" 'தெறித்த தலைகளை இது எனக்கு அது உனக்கு அது மற்றதனுக்கு என மொய்த்துலவிப் பொறுக்கும் ஒரு திரள்' - செருக்களத் தலகை வகுப்பு. பலகைக் கொத்தது பட்டிட்டலற முட்டிப் பொருதது - 2000 கைகளைக் கொண்ட சிங்க முகா சுரனுடைய பல கைகள் கொத்து கொத்தாய் அறுபட்டு விழ அவன் வேதனைப் பட முருக வேள் பொருததையும் இது குறிக்கலாம். சென்னியில் ஒன்றும் கையில் இரண்டுமே நிறுவிப் பின்னர் யாவையுந் தடிந்தான் அன்றே" . கந்தபுரா. 4.12-44

  • " நாக மெத்தையிற் றுயின்ற நாரணன்". திருப்புகழ் 832 f t "பச்சைமா மலைபோல் மேனி" - தொண்டரடி திருமாலை.2