பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 267 (எட்டா) பாய்ந்து (நெட்டாக) பெருமையுடனே (தோகைக்கே) மயில் மீதே (புக்கு பாய்ந்து ஏறி (ஒலத்திட்டு) எங்களைக் காத்தருளுக அபயம் அபயம் என்று கூச்சலிட்டு (இமையோர்) தேவர்கள் வான் -இல் வானில்-விண்ணிலும், (பாரில்) பூமியிலும் (சூழ) உன்னைச் சூழ்ந்து நிற்கச் (சூரைத்தான்) சூரனை (எட்டா) எட்டி அணுகி (அவனை வெட்டிச் சண்டை செய்த வேலனே! (முட்டாமல்) தங்கள் வழிபாட்டில் இடையின்றி - குறைவு தடை ஒன்றும் ஏற்படாத வழியில், (உனது) (தாளை) திருவடியைச் (சேவிப்பார்) வழிபட்டு வணங்குபவர்களின் (முற்பாவத்தை) பழைய பாப வினையை தீவினையை ஒழிப்பவனே நீக்கியருள்பவனே! குதி பற்றற்றவனே! முத்தி அளிக்கும் பெருமாளே! (நற்றாள் சற்றோதப் பெற்றிடுவேனோ) T 122. பட்டுப் புடைவைக்கும், பசுமைவாய்ந்த ஒலையை அணிந்துள்ள காதுக்கும். (பத்தி) ஒழுங்காக உள்ள (தனம்) கொங்கையாகிய அழகிய (கும்பக்கே) குடத்துக்கும் (நீட்டுரப் பார்வைக்கே) கொடுமையைக் காட்டும் கண்பார்வைக்கும் (பட்டு) அகப்பட்டு ஆசைப்பட்டு (உறவாடி) உறவு பூண்டு கலந்து களித்துப்பேசி (ஒட்டார்) ஆகாதவர்கள் (நட்டார்) ஆனவர்கள் (பகைவர் நண்பர்) ஆகிய எல்லாருடைய (வட்டாரத்து) - சூழலிலும் (ஏசுற்றே) பழிப்பு மொழியை அடைந்து (யாவரும் என்னைப் பழிக்க) அடியோடு- (முழுதும்) தடுமாறுகின்ற கலங்குகின்ற (ஒட்டாரப் பாவிக்கே) பிடிவாதமுள்ள பாவியாகிய எனக்கு - (மிக்காம்) மேலானதாகிய (உற்றாள்) உனது (தாள்) திருவடி (கிட்டத் தகுமோதான்) கிடைக்கும் படியான தகுதியுண்டோதான்! (திருவடியைக் கிட்டும் தகுதி உளதெனில் மிகவும் மகிழ்வேன் நான் என்றபடி) t தப்பாமற் பாடிச் சேவிப்பார் தத்தாம் வினையைக் களைவோனே" - திருப்புகழ். 292 =

  1. கும்பக்கே = கும்பத்துக்கே X வட்டாரத்து ஏசு உற்றே எனப் பிரிக்க. O உற்றாள் = உன் தாள்.