பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 முருகவேள் திருமுறை (7- திருமுறை தயிரு மமுது மமையு மிடுக o சவடி கடக நெளிகாறை. தருக தகடொ டுறுக எனுமி விரகு தவிர்வ தொருநாளே: உயரு நிகரில் சிகரி மிடறு முடலு மவுணர் நெடுமார்பும். உருவ மகர முகர திமிர வுததி யுதர மதுபீற: அயரு மமரர் சரண நிகள முறிய எறியு மயில்வீரா. அறிவு முரமு மறமு நிறமு மழகு முடைய பெருமாளே (74)

  • இந்தப்பாடலின் முதல் நான்கு அடிகள் - சித்து வகுப்பின்'

கருத்தைத் தழுவுகின்றன - சித்து வகுப்பில் எமக்குப் பச்சிலை முதலியவைகளைக் கொண்டு ரசவாதம் செய்யத் தெரியும்; உன்னிடம் இருக்கும் பழைய நகை வகைகள், பித்தளை சாமான், பணம் முதலிய எல்லாவற்றையும் தருக; நான் என் ரசவாத சக்தியால் வெகுகோடி பொன் உண்டாக்கி உனக்குத் தருவேன்; அது கொண்டு ஏழு நிலை மாட வீடு நீ கட்டிக் கொள்ளலாம். நான் பார்வதி கலியான தினத்தன்றுதான் உணவு கொண்டேன். இப்போது எம் பசி திர அமுது படை நல்ல கறிகாய், நிரம்ப நெய், பொரியல், பால், தேன், கறி வகை, பழ வகை, வெற்றிலை பாக்கு இவையெலாம் எமக்குக் கொடு, அங்ங்ணம் கொடுத்து நீ சுகமாய் இரு" - என வருகின்றது. அதே கருத்தில் இந்த 1068 - ஆம் பாடலில் எனது பசி திர தயிரமுது கொடு: பழைய நகைகளைக் கொடு; நான் ஒரு மந்திரத் தகடு, (தாயித்து) தருகிறேன். அதனால் உன் துயரம், வறுமை எல்லாம் திரும் தேவாமிர்தம், காமதேனு இவையெலாம் எளிதிற் கிடைக்கும் என்கின்றார். சித்து வகுப்பில் ரசவாதம் முதலிய சித்து செய்பவர்கள் சித்தர்கள் அல்ல. உண்மையான பிரசித்த சித்தர்கள் முருகனது திருப்புகழைக் கற்பவர்களே என்கின்றார். "எருக்கிலை முருக்கிதழ். அகத்தி தமரத்தை மதமத்தமொடு பித்திகை, வகை வகை கொண்டு ஒரு மண்டலம் மோரொடு ஊறவை வாத(ம்) நல்வழி அனேகம். வளையல் குழை பீலி காலாழி தண்டை. பாட்டி புதைத்த குடப் பணம். கொடு வந்து சொரிந்து குவாலிடு.