பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/956

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுவூர்) திருப்புகழ் உரை 397 (கருவூரிய நாளு முநூறு) (கருவில் ஊறிநின்ற முந்நூறு நாள்களும், (பின்பு எழுகின்றதான மலங்களுக்கு இடமான தேகமும், (ஆவலும் ஆசை) ஆசை ஆவலும் - பொன் ஆசை (முதலான மூவகை ஆசைகளும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளும்), கபடமாகிய பாதகதிது - வஞ்சகத்தால் ஏற்படும் பெரும் பாபத் தீமைகள் அற்றுப்போகவும், வறுமை தொலையவும் - (கனி) இனிமை மிக்க அல்லது முதிர்ந்த அறிவும், மெய்ஞ்ஞானமும், தகுதி மிக்க சிவநேசமும் (எனக்கு) உண்டாக, கழலும் அதனுடன் சேர்ந்துள்ள அழகிய (அல்லது ஆபரணமாம்) சிலம்பும் (கொண்ட உனது) தாளினை நீழலைத் தந்தருளுக. இந்திரனுடைய (மின்ஒத்த) மகள் தேவசேனை ஒரு பக்கம் வீற்றிருக்க, வில் ஏந்திய வேடர்மான் வள்ளியம்மை ஒரு பக்கம் வீற்றிருக்க, (புது மாமயில்) அதிசயிக்கத்தக்க, (அல்லது எழில் உடைய) சிறந்த மயில்மீது (அணைந்து) ஏறிவரும் அழகனே! புனுகுசட்டம், நிறைந்த பன்னிர் இவை நெருங்கக்கூடிய வாசனையுள்ள... LD/T ՅՆԴՅՆ)ԱԼl (மாலையை உடையவனே)! உரகாலணி கோலமென் மாலைய (உரம் கால்) மார்பிடத்தே (அல்லது மார்பிலும் திருவடியிலும்) அணிந்துள்ள அழகிய மெல்லிய மாலையனே (மாலையை உடையவனே)! முப்புரி நூல் (பூணுால்) அசைகின்ற (துவாதச) பன்னிரண்டு புயங்கள் கொண்ட வீரனே! வாசனை குலவும் குளிர்ந்த குளங்கள், சோலைகள் செழிப்புள்ள நெல் தழைத்துள்ள (கார் வயல்) அழகிய (அல்லது பசுமைகாட்டும்) வயல்கள்... (புனை) சேர்ந்துள்ள (வள மூதூர்) வளப்பம் உள்ள பழைய ஊர், மகதாபத சீலமு மேபுனை வள முதுார் - விசேடமான (தாபதம்) முனிவர் வாசங்களைக் கொண்ட அழகினை உடைய வளப்பம் உள்ள பழைய ஊராகிய (வழுவூரில்). பெருமாளே)! மகாதேவர், புரத்தை எரித்தவர், சதாசிவர் ஆகிய சிவனது பிள்ளையாகிய தேவசிகாமணியே! வழுவூரில் வீற்றிருந்து (அடியார்க்கு) வாழ்வு அருளும் பெருமாளே! L. (தாளினை நிழல் தாராய்)