பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/900

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடவூர் திருப்புகழ் உரை 341 தோள்கள் பன்னிரண்டு, திருமுகங்கள் —£4,00s, மயில், வேல், இவைகள் அழகுக்கு மேலான ஏய்வான, உவமைப்பொருளா யிருக்கின்ற மேம்பட்டுப் பொருந்தியுள்ள வடிவா - அழகு உருவம் உள்ளவனே! தொழுது வணங்கி, ஏனா எண்ணி - தியானித்து வயனர் - ஜடாயு சம்பாதி என்னும் பறவை வடிவினர் சூழ்ந்து பரவும் வேளுர் - புள்ளிருக்கு வேளுரில் - வைத்தீசுரன் கோயிலில், கா - சோலைகள் - விரியும் - விரிந்து பரந்துள்ள வேளுரில் வீற்றிருக்கும் முருகா! தேவர்கள் பெருமாளே! (உடல் உழல்வேனோ) திருக்கடவூர். 789. பிரமனது (ஏடு) சீட்டிற் கண்ட விதியின் பிரகாரம் (இந்த உயிரைக்) கொண்டுபோய் நல்ல (புரம்) உடலாகிய ஒரு வீட்டிலே சேர்த்துப், பொருந்தவே (கசை மூணு) (அடிக்கும்) சவுக்குப்போன்ற மூன்று (சுழுமுனை, இடைகலை, பிங்கலை) . என்னும் நாடிகளை அதிற் பொருத்தி, (அடித்திட) அடித்துச் செலுத்தக், கடலில் (ஒடம்) படகு ஒடுவதுபோலப் போந்து (காலம் கழித்து) நல்லதென்று பொருளாசை, பெண்ணாசை (கொளா கொண்டு, (து) - து என) து என்று (பலர் இகழத்) திரிந்தும் வருந்தியும், தவம் சேர்ந்துள்ள இருப்பிடம் இன்னதென்றே அழியாமலும் இவ் வுடலை விரும்பிப் பாதுகாத்து. (பூட்டப்பட்ட) சரப்பளியே (சரப்பணியே) வயிரமழுத்திய கழுத்தணி விளங்க - மதனாமென மதனனாமென - மன்மதன் இவன் என்னும்படி ஆட்டியும், அசைத்தும், ஒழுங்காகத் திரிகின்ற காலத்தில் - நிரம்பின மலஞ்சேர்ந்த குகையோ இது, பொதிசோறோ இது என்று கழுகும் காகமும்