பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/872

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 313 இன்ப மயமாய் மிக்க பெருமையுடனே வாழ்கின்ற இருவினைக்கு ஈடான இந்தப்) பெரிய உடலானது ற்ேறில்) ஒருபிடி சாம்பலாகி அழிந்து படலாமோ! (வனசரர்) காட்டில் திரிபவர்கள் - வேடர்கள் (ஏங்க) அதிசயித்து ஆரவாரிக்க, வானத்தின் உச்சியைத் தொடும்படி வளர்ந்து, (தான்) ஆசையாப் (வளர்த்த) மயிலும் தோழிமார்களும் சமீபத்தில் இருக்க மயில்களும் மான்களும் சூழ, செழித்துள்ள உயர்ந்த வேங்கைமரமாகி (வள்ளி) மலை மேலே தோன்றின மாய வடிவத்தனே! பெருத்த சமன் ஊமையர்கள் (கோடி) பலரும் கழுவின்மேல் (துங்க) தொங்க, திருநீறு - உன் க்ருணைக்குப் பாத்திரமான பாண்டிநாடு பெற பாண்டிநாட்டிற் பரவ . வேதப்பொருள் கொண்ட பாடல்களை அருளிய (காந்த) ஒளிகொள் மேனியனே . அழகனே! (பால) குழந்தையே! கழுமலம், பூந்தராப் எனப் பெயர்கள் உள்ள சீகாழிப் பதியனே! கவுணிய குலத்தனே! அரசே! தேவர் பெருமாளே! (காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ) 779. பூ மாது (தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவியை) (உரமேயணி) மார்பிடத்தே வைத்துள்ள (மால்) திருமாலும், வேதம் சொல்லும் வாய் நான்கு உடையவனாகிய பிரமனும், கூட்டமான தேவர்களின் தலைவனான இந்திரனும், முநிவர்கள் முதலான யாவரும், சொல்லப்படும் வேதப்பொருளை ஆராய்ச்சியுடன் கூறும் நூல்களில் ஆராய்ச்சி செய்யாத (அடல் அசுரர்) வலிய அசுரர்கள் செய்யும் போருக்குப் பயந்து மறைந்து, தாம்கொண்ட பயம் காரணமாக வந்து ஒன்றுகூடி - (ஒருங்கே வந்து)