பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/818

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிம்மபுரம்) திருப்புகழ் உரை 259 நிம்பபுரம் 758. பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களும், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனப்படும் கரணங்கள் நான்கும், இரவு - பகல் எவையும் அறியாத முடிவு, நடு, முதல் ஒன்று இல்லாததான அந்த ஒப்பற்ற வீட்டின்பத்தைப் பெறுமாறு - மேகம் தவழ்கின்ற மலைப்பக்கங்களை உடைய அழகிய மலை வேடர்களின் மங்கைதனை (வள்ளியை) விரும்பி வள்ளிமலைக் காட்டில் வந்து சேர்ந்த திருவடித் தாமரைகளைப் பாட (அடியேனுக்கு) வண்தமிழ் அற்புத அழகைத் தந்தருளுக. LL/[T&TT}{3TUT வளர்த்ததும், (கலாபம்) இடையணி அணிந்துள்ளதும் ஆன வஞ்சி (அல்லது மயில்போன்ற சாயலுடையவளும் ஆன) வஞ்சி பெண் (தேவசேனையின்) அழகிய செஞ்சாந்தும் சந்தனமும் (அதிரேகம்) மிகுதியாகக் கொண்டுள்ள குடம்போன்ற கொங்கை மீது (மனம்) பாய்ந்து அணைகின்ற மார்பனே! கிரெளஞ்சகிரி தடுமாற்றம் அடையும்படி அதைப் பகைத்துக் கோபித்தவனே! (அல்லது தடுமாற்றம் அடையவும், பகையும் கோபமும் கொண்டு) கொடிய போர்செய்த சூரனுடைய நெஞ்சு பிளவுபடவும் வீரம் வாய்ந்த வெற்றிதரும் கூரிய வேலைச் செலுத்தினவனே! ஒளி பொருந்திய மதில் சூழ்ந்துள்ள நிம்பபுரம் என்னும் தலத்தில் வாழ்கின்ற பெருமாளே! விண்தலமகி.பர் - விண்ணுலகத் தரசர்களுக்குத் தேவேந்திரர்களுக்குப் பெருமாளே! (வீடு பெறுமாறு வண்டமிழ் அருள்வாயே)