பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாதிரிப்புலியூர்) திருப்புகழ் உரை 235 உணர்ச்சி இல்லாதவன் (நான்), ஜெபம் முதலான ஒரு நல்லொழுக்கமும் இல்லாதவன் (நான்), (நிறையிலி) காப்பன காத்துக் கடிவன கடியும் ஆண்மைக் குணம் இல்லாதவன் (நான்), (முறையிலி) ஒழுக்கம் இல்லாதவன் (நான்), அன்புகூட இல்லாதவன் (நான்), மேன்மைக்குணம் இல்லாதவன் (நான்). இவ் வண்ணம் (பல குறைகள் என்னிடம் இருப்பினும்). என் நெஞ்சு நினைவு என்பதை இழக்கு முன்னரே ஒப்பற்ற அழகிய பச்சை நிறமுடைய உயர்ந்த மயில் என்னும் குதிரைமேல், (உனது) ஆறு திருமுகங்களும் (ஒளிவிட) பிரகாசிக்க (நீ எதிர்) வந்து, நான்கு வேதங்கள், உபநிஷத்துக்கள் ஆகிய இவைகள் எனக்கு விளங்கும்படி நீ அருள்புரிவாயாக கடலிற் கலந்து படிந்து எழுகின்ற சூரியன் அஞ்சி விலகும் மதில்களை உடைய இலங்கையில் வாழ்ந்த தலைவன் ராவணனுடைய பொன்மய ரத்னமகுடங்கள் அணிந்திருந்த தலைகள் ஒரு பத்தும் நிலை பெயர்ந்து (அறுபட்டு) பூமியில் உருளும்படிக் கோபித்துக் கூரிய அம்புகள் பொருந்திய, கையிலிருந்த வில்லை வளைத்து, முயற்சி எடுத்துக்கொண்டு தேடிச் சென்ற மேகநிறத்துப் பெருமான், மிக்க வீரம் வாய்ந்த அரி, விண்டு, மால் எனப் பெயர்கள் கொண்ட திருமாலின் அழகிய மருகனே! அழகுள்ள கயிலைமலையும் நடுங்க. (ஒரெழு குலகிரி) மலை ஏழு அல்லது (1 + 7) அவுட குலகிரிகள் எல்லாம் இடிந்து துள்பறக்க, அலை வீசும் கடல் குழப்பங் கொள்ள வேல்விடுமுருகனே! தேவி முன்பு அரிய தவஞ் செய்த தலமாகிய பாடல வள நகரில் (திருப்பாதிரிப் புலியூரில்) பொருந்தி வீற்றிருக்கும் தேசிக மூர்த்தியே! அறுமுகனே! (குறமகள்) வள்ளியின் அன்பனே! பெரிய தவசிகளின் பெருமாளே! (உபநிடமதனை விளங்க நீ அருள் புரிவாயே)