பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவமூர்) திருப்புகழ் உரை 221 தேவர் முதலானோர் துன்பப் படும்படி மேல் விழுந்து நெருங்கி எதிர்த்த பொல்லாத அசுரர்கள் வாழ்ந்திருந்த முப்புரங்களை எரித்த இடமாகிய (திரு) அதிகை மகா நகரில் வீற்றிருக்கும் பெருமாளே! இந்திராணியின் மகள் தேவசேனையின் பெருமாளே! (நின் ஆறிரு புயமென உரைசெய அருள்வாயே) 744. திருவாமூர் குளிர்ந்த நிலவு வீசுகின்ற நெருப்பாலும் . கோபித்து மன்மதன் வளைக்கின்ற வில்லாலும் - அலைகள் வீசி அலைக்கின்ற கடலாலும் ஊழிபோல (நீடித்துள்ள) இராப்பொழுது தொலைக்குந் தன்மையதோ தான் (தொலைக்க முடியவில்லையே, என் செய்வேன் என்றபடி) (மாது) திலகவதியாரின் புகழை வளர்க்கும் தலமாம் திருவாமூரில் வாழும் குமரேசனே! மயிலில் வீற்றிருக்கும் குமரேசனே! அன்புள்ள அடியார்களின் கருத்தில் உறையும் பெருஞ் செல்வமே! யமனுடைய முதுகைப் பிளவு கொள்ளும்படி அடித்து வெருட்டும் பெருமாளே! (இரவு தொலைக்கும் படியோதான்) மாது புகழை வளர்க்குந் திருவாயா என்றும் பாடம் - இந்தப் பாடங்கொண்டால் மாது' என்பது மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவையைக் குறிக்கும்" முதுகை விரித்தல் - புறங்காட்டச் செய்தலும் முதுகு விரியும்படி அடித்தலும், முருகன் அடியவராகிய அருணகிரியாரே "அந்தகா உனைப் பாரறிய வெட்டிப் புறங்கண்டலாது விடேன் வெய்ய சூரனைப் போய் முட்டிப் பொருத செவ்வேற் பெருமாள் திருமுன்பு நின்றேன்" கந்-அலங் 64 என யமனை வெருட்டுகின்றார் எனில் - முருகவேள் காலன் முதுகை விரிக்கும் பெருமாள்' என்பது மிகவும் பொருத்தமே. 1. காமனழகில் மிகுக்கும் பெருமாளே - என்றும் பாடம்