பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 53 (என்று) விறஞ்க்கட்டைகளின் (இடைப்பட்டிட்டு) இடையே (மத்தியிலே) கிடத்தப்பட்டு, அனல் (நெருப்பால்) சுட்டிட்டு (சுடப்பட்டு) அடக்கைக்கு (அடங்குவதற்கு) இறந்து மறைந்து போவதற்கும், பிறப்பதற்கும், தலத்தில் (இந்தப் பூமியில்) புக்கு தோன்றி, இடியாமுன்-மடிந்து (அழிந்து) போவதன் முன்னரே. தினைப்புனத்தில், அழகிய குழந்தைபோலத் திருந்தாப் பேச்சுக்களைப் பேசும் குறக்குலத்து கிளியாம் வள்ளியின் கொங்கையை அழகுபெற வெட்சிமாலை அணிந்த திருப்புயத்தில் ஏற்று அணிபவனே! அகந்தை கொண்டும், சிறிது கோபித்தும், (சொல்) பேசுகின்ற துஷ்டரை, பிரட்டத்துட்டரை-நன்னெறியில் நின்றும் வழுவின துஷடர்களினின்றும் தப்பி விலகி,திரள் o அவர்கள் கூட்டத்தினின்றும் விலகி, (உனது) கழல் செப்ப திருவடியைப் புகழத் திறல் தாராய்-சாமர்த்தியத்தை (ஒழுக்கத்தை) தந்து அருளுக. பனைக்கை (பனைமரம் போல நீண்ட )ெஅதிக துதிக்கையைக் கொண்டிருந்த கொக்கனை *கொக்கின் குணங்கொண்டவனாம் தாரகனை (அல்லது பனைக்கை(யன்) கொக்கன் - எனக் கொண்டு பனைக்கையன் (தாரகனையும்) கொக்கன்-மாமரமாய் நின்ற சூரனையும், தட்டுப்பட தடைபடும்படிக் குத்தி, அவன் (அவர்) அழிவுற சற்பப் பணம் (ஆதிசேடனுடைய படங்கள் அஞ்சவும், கடல் அஞ்சவும் பொருத வேலனே! பரப்பு (பேராசை) ஒழிய, சுருக்கு (உலோபகுணம்) ஒழிய, பதைப்பு (நடுக்கம் - அல்லது ஆத்திரப்படுதல்) ஒழிய, திகைப்பு (மயக்கம்) ஒழிய பலிப்ப இத்தகைய நற்குணங்கள் உண்டாக, பத்தர்க்கு-அடியார்களுக்கு ஒப்பித்துச் -- சேர்ப்பித்து (அடையும்படித் தந்து உதவி) அருள்புரியும் செல்வமே! "கொக்கன் - ஓர் இழிவுச் சொல்லாக உபயோகப்பட்டுள்ளது. கொக்கின் குணம்-சமயம் பார்த்துச் செயலாற்றல் - மடைத் தலையில் ஓடுமீன் ஒடஉறுமின் வருமளம் வாடியிருக்குமாம் கொக்கு மூதுரை.