பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பொக்க ணத்து tநீற்றை யிட்டொ ருத்த னார்க்கு

புத்தி மெத்த காட்டு # புனவேடன்: பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு பைச்சி லைக்கு மாட்கொ ளரன்வாழ்வே. பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட பத்த ருக்கு வாய்த்த பெருமாளே (62)

  • பொக்கணம் . ஒருவகை விபூதிப் பை. சுத்திய பொக்கணம் - திருக்கோவையார் - 242. நீறது பூசித் தக்கைகொள் பொக்கணம் இட்டுடனாக - சம்பந்தர் 1-75-5.

t நீற்றையிட்ட ஒருத்தனார் - சிவகோசரியார். 4 புனவேடன் கண்ணப்ப நாயனார். கண்ணப்பர் வரலாறு:- நாகனார் என்னும் வேட ராஜனுடைய பிள்ளை திண்ணனார். இவர் வேட்டையாடச் சென்றவர் காளத்தி மலைமேல் சிவபிரானது திருவுருவத்தைக் கண்டதும் அனலிடையிட்ட மெழுகுபோல் உருகி அவரைத் தழுவி மோந்து இம் மலைத் தனியே நீரிங்கிருப்பதோ என்று நைந்தார்" தம்முடன் வந்த நாணனைப் பார்த்துப் பச்சிலையும் பூவும் இட்டு நீரும் வார்த்தவர்" யார் என்று வினவினர். நாணன் ஒரு அந்தணன் இங்கனம் இக் கடவுளை நீராட்டிப் பூச்சூட்டினதை நான் பார்த்திருக்கிறேன்' என்றான். இதைக் கேட்டதும் தானும் அங்ங்ணமே செய்ய விரும்பிப் பன்றித் தசையைக் காய்ச்சிச் சுவைத்துப்பார்த்து சுவையுள்ளவையைப்பற்றி ஒரு தொன்னையில் நிவேதனத்துக்காக எடுத்துக்கொண்டு, அபிஷேகத்துக்கு வேண்டிய நீரைத் தமது வாயினில் அடக்கிக்கொண்டு, பூசைக்கு வேண்டிய மலரைத் தமது குடுமியில் துதையக்கொண்டு ஒரு கையில் வில்லும் அம்பும் மற்றொரு கையில் தொன்னை இறைச்சியுமாக மலைமீதேறி இறைவன் மீது வாய் நீரை உமிழ்ந்து அபிஷேகம் செய்து, மலர் பூசனைசெய்து, இறைச்சியை நிவேதனம் செய்தார். இங்ங்ணம் இவர் செய்து, இரவெலாம் காவல் காத்து வந்தார். வழக்கமாய் அங்குப் பூசனை செய்யும் அருந்தவ முநிவர் சிவகோசரியார் அங்கு வந்து இறைச்சி கிடப்பதைக் கண்டு "ஐயோ யாரது செய்தார்" என அழுது விழுந்தார். பின்பு இடத்தைச் சுத்தி செய்து பூசை செய்து போனவர் 'இறைவனே நீதான் இங்கனம் அபசாரம் செய்பவனை ஒழிக்க வேண்டும்" என வேண்டினர். அவர் கனவில் இறைவன் தோன்றி . அப்படிப் பூசை செய்பவன் ஒரு வேடன், "அவனுடைய வடிவெல்லாம் நம் பக்கல் அன்பு: அவனுடைய அறிவெல்லாம் நம்மை யறியும் அறிவு. அவனுடைய செயலெல்லாம் நமக்கிணியவாம்" - என மொழிந்து, "நாளை நீ ஒளித்திருந்து அவனது அன்பைக் காண்க எனக் கூறி மறைந்தார். (தொடர்ச்சி பக்கம் 527)