பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 45 அழகிய தேவி, ரவிக்கை பொருந்திய கொங்கைகளைக் கொண்ட மாது, கருணையுடனே தோன்றியவள். திசைகள் எல்லாவற்றினும் வியாபித்து இடங்கொண்ட ஞானக் கலைகள்(நூல்கள்) அணைந்த கொத்து (திரள்) திரண்ட கலை நூல்களனைத்தையும் , அடர்ந்து (நிரம்பப் பழகி) வம்பு அலர் (புது மலர்களை) நதிகொள் அகத்தில் (கொள் நதி அகத்தில்) கொண்ட கம்பை நதிக் கரையகத்தே பயந்து (அந்தக் கம்பை நதியின் வெள்ளத்தைக் கண்டு பயந்து) கம்பர் (ஏகாம்பரநாதரது சிவந்த) மெய் (உடல்), கருக (தனது) கருநிறத்தை ஏற்றுக் கொள்ளும்படி இடத்திற் கலந்திருந்தவள் (இடது பாகத்திற் கலந்திருந்த தேவி), தனது தாமரைத் திருவடியை. அம்பு மேலிட்டுக் கசிந்த உள்ளத்தோடு தியானிக்கும் அவர்க்கு (அடியார்களுக்கு) பதங்கள்.மேலான பதவிகளைத் தந்தருளுகின்ற கவுரியம்மை ஆகிய தேவியின் (திருக் கொட்டு) - திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பெருமாளே! தேவேந்திரர் தம் பெருமாளே! (நின்கழல் பகர்வது.....தந்திட வந்திடாயோ) 464. முதல் எல்லையில் (வகுப்பில்) வைக்கத் தக்க தகுதி (மேன்மை) பெற்றுள்ள புலவர்கள் போற்றித் துதிக்க, உனது மயிலையும், (கிரெளஞ்ச) மலையைப் பிளந்து (எறிதரும்) எறிந்த அயில் (வேலையும்), வெட்சிமாலை அணிந்த புயங்களையும் கயவஞ்சி (யானை வளர்த்த தேவசேனை -யையும்), குறவஞ்சி (குறவர் வளர்த்த) வள்ளியையும்.