பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மோக வாரிதி தனிலே நாடொறு மூழ்கு வேனுன தடியா ராகிய மோன ஞானிக ளுடனே சேரவு மருள்வாயே: *காத லாயருள் புரிவாய் நான்மறை மூல மேயென வுடனே மாகரி காண நேர்வரு திருமால் நாரணன் மருகோனே. காதல் மாதவர் வலமே சூழ்சபை -- நாத னார்தம திடம்ே வாழ்ர் சிவ காம நாயகி தருபா லாபுலி சையில்வாழ்வே. # வேத நூன்முறை வழுவா மேதினம் வேள்வி யாலெழில் புனை Xமு வாயிர மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே.

  • திருமால் கஜேந்திரனைக் காத்த வரலாறு - பாடல் 110 பக்கம் 162 கீழ்க்குறிப்பைப் பார்க்க

f சிவகாம சுந்தரி - நடராஜப் பெருமானது திருக்கூத்தை அருகில் (இடது பக்கத்தில்) இருந்து கண்டு களிக்கும் தேவி...... பரமசிவன் ஆனந்த நடத்தின் வைத்த அருட் கண்ணாளைச் சிரணிகொள் பொழிற் றில்லைச் சிவகாம சுந்தரியைச் சிந்தை செய்வாம்' - (பிரமோத்தர காண்டம்) "மன்றின் அவனிடத்தில் வாழும் சிவகாமசுந்தரியைச் சிந்தை செய்வாம்" (குளத்துார்ப் புராணம்)

  1. இந்த அடி தில்லைவாழ் அந்தணர்களுடைய சிறப்பை எடுத்து ஒதுகின்றது. இந்த ஒரடிதான் என் தந்தையார் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழ் ஏடுகளைத் தேடி வெளியிடுவதற்குக் காரணமா. யிருந்தது. * -

1871 வருதான் என் தந்தையாருக்குத் திருப்புகழ் அச்சிட வேண்டும் என்ற எண்ணம் முதல் முதல் உதித்தது. சிதம்பரம் திகூசிதர்கள் ஒரு விவாதத்தில் தங்கள் பெருமையைக் காட்ட இந்தத் திருப்புகழ் அடியைக் கொண்ட "தாதுமாமலர் முடியாலே" என்னும் இப்பாடலைச் சான்றாக எடுத்துக் காட்டினதாகவும், இப்பாடலின் தேனொழுகும் இனிமை தன் மனத்தை மிக்குங் கவர்ந்து திருப்புகழில் தனக்கு ஆசை உண்டு பண்ணிற்று என்றும், இத்தகைய அற்புதப் பாடல்கள் பதினாறாயிரம் அருணகிரிநாதர் பாடியிருக்க ஓராயிரமேனும் கிடைத்து அச்சிட்டால், தான் எடுத்த ஜன்மம் பலன் பட்டதாகும் எனக் கருதினேன் என்றும், எந்தையார் என்னிடம் கூறினார் - (அருணகிரிநாதர் நூலாராய்ச்சி பக்கம் 28, 29. கீழ்க் குறிப்பு) (தொடர்ச்சி பக்கம் 453)