பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 443 களவுடன் ஒதுங்கியுள்ளதும் ஆழ்ந்த கடல் போன்றது மான (சமுசார) வாழ்க்கையே சுகமென நினைத்து, அதில் ஈடுபட்டு, ஆசையுடன் (பெண், ஆசை, மண்). பெண் - (ஆசை பொன்). மண் என்னும் மூவாசைகளும் ஒன்று சேர்ந்து, தீவினை ஊழ்வினை இவைகளின் காலக்கொடுமை 495лтЛтGNUтLDлт95 துக்கம் பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முத்தி நிலையிலே சுகமாக எவற்றினும் மேம்பட்டதான சொர்க்கநாட்டில் நான் கரை ஏறும்படி உனது திருவடியைத் தந்தருளுக - (அல்லது-உபதேசம் செய்தருளுக) தக்கத் தோகிட தாகிட திகிட. டீகுட டாடுடு என்னும் ஒசை எழத் தாளங்களின் - ஒலியைப் பரப்பிச் சூரர்களின் கூட்டத்துடன் (அவர்களுடைய) தேர்களும், குதிரைகளும் அழிபட்டுக் கீழ்நிலையடைந்து கடலில் முழுகும்படி - சத்திவேலுக்கே யாவும் உணவாயின என்று சொல்லும்படியே - செலுத்தின ஒளிவேலனே! திக்கத் தோகணதா என்று நடனஞ் செய்கின்ற நிர்மல மூர்த்தியாம் உனது தந்தையார் நடராஜப் பெருமானே நீ என்று சொல்லும்படி அழகிய சிவந்த (வலது) திருவடியை (பூமியிற்) பதித்து இசை ஒலிகள் பாட செம்பொன் நிறத்தோகை விளங்கும் மயில்மீது பக்கத்திற் (சிவகாமியம்மை போலக்) குறமாது - வள்ளியம்மையுடன் (நடித்துச்) சிறப்புற்றுத் (தில்லையில்) தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமாளே! (சதாசிவ முத்திக்கே - பதம் அருள்வாயே) 622. முத்து மாலையோடு ஆபரணங்களைக் கொண்ட மார்பில் இணையாகவுள்ள (இரண்டு) யானைகள் போருக்கெழுந்ததுபோல எழுந்துள்ள பெரிய கொங்கைகளைக் கொண்டவர்களாய் ஆய்ந்து எடுத்த ஆடையை அணிந்துள்ள நூல்போல நுண்ணிய இடையை உடைய அழகிய மாதர்கள் .