பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 620. சிவஞானம் பெற தனத்தத் தந்தனத்தத் தானன தானன தனத்தத் தந்தனத்தத் தானன தானன தனத்தத் தந்தனத்தத் தானன தானன தனதான அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு அணுக்கிச் ‘செந்துணுக்கிற் t கோவிதழுறல்க -- ளதுகோதி, அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலை நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபன மேயென xஅருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க ளுறவோடே, படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள் படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிக H &TT&TMLDJTTL/L/Oபரத்தைக் “குண்டுணர்த்துத் தோதக பேதைகள் பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு முடனை பரத்துற் றண் H பதத்துப் போதக மீதென அருள்தாராய், தடக்கைத் H தண்டெடுத்துச் சூரரை வீரரை நொறுக்கிப் பொன்றவிட்டுத் துாளெழ நீறெழ தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண கலைவீரா. * செந்துணிக்கில் - சிவந்த பவளத்துண்டை யொத்த 1 கோவிதழ் - கோப இதழ் - இந்திரகோபத்தை யொத்தஇதழ் # பஞ்சரித்து குதலைமொழி பேசி. X அருட்டி - சாக்கிரதை பண்ணி, 0 பரத்தை - பரத்தைகள். * குண்டு உணர்த்து- தாழ்வான செய்கையை யுணர்த்தும். t பதத்துப் போதகம் - திருவடி ஞானம் - சிவஞானம் 'திருவடியே சிவமாவது - திருமந்திரம் 138. # தண்டு முருகவேளின் ஆயுதங்களில் தண்டும் ஒன்று. - பாடல் 585 பக்கம் 342 கீழ்க்குறிப்பு.