பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 419 சுட்டு வெம் புரம் நீறு ஆக - திரிபுரமாகிய மும் மலங்களும் வெந்து நீறாகும்படிச் சுட்டு, விஞ்சை கொடு - சித்து `): கைவரப் பெற்று, தத்துவங்கள் விழ சாடி - தத்துவ சேஷ்டைகளெல்லாம் வேரற்று விழும்படிச் சாடி, எண் குணவர் சொர்க்கம்-எண்குணவராகிய சிவபதவி, - வந்து கையுள் ஆக- கை கூடி வந்து சித்திக்க-எந்தை பதம் உற மேவி - அச்சிவபத்வியில் உற்றுப்பொருந்தி, துக்கம் வெந்து விழ - பிறவித் துன்பமென்பது பஸ்மீகரமாய்ப்போக ஞானம் உண்டு - ஞானாமிர்த பானம் பண்ணி, குடில் வச்சிரங்கள் என - தேகம் வச்சிர காயமாகமேனி தங்கம் உற - நிறம் தங்கவர்ணமாக, சுத்த அகம் புகுத விசித்திரத்துடனே, புகழ்வேனோ - உனது திருப்புகழை யெடுத்துப் பாடுவேனோ? எட்டும் இரண்டும் இன்னது என்று (பத்து என்று) அறியாத என்னுடைய செவியில் எட்டும் இரண்டும் (அ + உ + ம்) இவையே சிவக்குறியாம் என்று, அந்த எட்டு இரண்டையும் அந்த அகார உகார மகார இலக்கணங்களைத் (தெளிவாக) வெளிப்படையாக உபதேசித்த குருமூர்த்தியாம் முருகோனே! இரண்டும் அறியாத - அடியார்களுக்கு உரிய பத்து இலக்கணங்களுள் ஒன்றேனும் இல்லாத எனக்கும் உபதேசம் செய்த குருவே! என்பதும் பொருளாம் - அடியார்களுக்கு உரிய பத்து இலக்கணங்களாவன: (1) கண்டமிசை தழுதழுத்தல் (2) நா அசைத்தல் (3) இதழ் துடித்தல் (4) கம்பமாதல், (5) விண்டு மயிர் பொடித்தல் (6) அங்கம் வெதும்பியே விதிர் விதிர்த்து வெயர்த்தல் (7) நில்லா (து), எண்டிசைகள் தள்ளாடிவிழல் (8) கண்ணிர் பிலிற்றல் (9) கலுழ்ந்திரங்கல், (10) ஆர்வம்கொண்டு பரவசப்படுதல் இவைபத்தும் அடியார்க்குக்குறிகள் அம்மா ஞானவரோ - உபதேச காண்டம் -921) பத்துக்கொலாம் அடியார் செய்கைதானே' - அப்பர் 4.18-10, பத்துடையீர் ஈசன்பழ அடியிர் - திருவாசகம் திருவெம்பாவை. பத்துடை அடியவர்க் கெளியவர் - திருவாய்மொழி - 13-1, பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம் - அப்பர் - 6.15-2. இனி எட்டும் இரண்டும் - பத்து- அது தமிழ் எண்ணில் 'ய'. ய" - பஞ்சாrரத்தில் ஆன்மாவைக் குறிக்கும் ஆதலால் எட்டும் இரண்டும் அறியாத என்பதற்கு ஆன்ம இலக்கணம் அறியாதிருந்த எனக்கு - எனவும் பொருள் காணலாம். f இலிங்கம் - சிவக்குறி.