பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 341 சிதறி விழுந்து, அவர்களுடைய ரத்தம் அண்டச் சுவரளவும் நிரம்ப், மலைபோலப் பொங்கி எழுந்து பெருகிச் சிவப்ப, அந்த ரத்த (வெள்ளத்தில்) யானைகளும், கொழுப்புள்ள குதிரைகளும், அறுபட்ட சிரங்களும் (இரதங்கள்) தேர்களும் இவையெலாம் மிதக்க, மாமிசத்தைச் சிவந்த பறவைக் கூட்டமாம் கழுகுகள் உண்ண, (உண்ட மகிழ்ச்சியால்) அவைகளின் தலைகள் (திருப்தியுடன்) அசையக் கருடன் நடத்துடன் வட்டமிட, காக்கைகள் மறைவுசெய்ய, நரிக்கூட்டங்கள் மிகச் சேர, குறளிகள்) மாயவித்தை செய்யும் பேய்வகைகள் கூத்தாட இருண்ட கிரெளஞ்சகிரியைக் கொளுத்தி, அலைவீசும் கடல் தன்னகத்துள்ள செம்பொற் பவளங்கள் சுருங்கிப் பிளவுபட வெந்துபோய், இங்குள்ள மலைகள் (யாவும்) தூளாகப், (பூபாரத்தைச்) சுமக்கின்ற (பாம்பு) ஆதிசேடனும் கூச்சலிட்டு விஷமுள்ள படங்களைக்கொண்டுள்ள நூற்றுக்கணக்கான தனது முடிகள் நடுக்கமுற்று அலைபடும்படிச் செலுத்தின வேலாயுதனே.! தொந்தத் தொகுகுட என்னும் கழலின் ஒலி மிக்கெழ, (பரிபுரம்) சிலம்பணிந்துள்ள செவ்விய அழகிய பாதத்தை அழகாகச் சுழற்றி (அல்லது பாதங்களில் அணிந்துள்ள மன்னிகளுடன் . சுற்றி) நடன்ஞ் செய்கின்ற நிருத்த மூர்த்தி, பிரமனது முடியைக் கையிற் கொண்டவர். சிங்கத்தையும், யானையையும் உரித்த கடவுள், உண்மை அடியார்களுக்கு அருள் செய்பவர், வெந்த நீறு அணிபவர், கங்கை, பாம்பு, திங்கள், கொன்றை இவைதமைக் கொண்ட சடையர், (தன்மீது அம்பைச்) செலுத்தின மன்மதனுடைய உருவைப் பொடிசெய்த கண்ணினர், ஆணவம்) மிக்கிருந்த திரிபுரங்களை எரித்த புன்னகையை உடையவர், தும்பை மலர்மாலையை அணிந்தவர். கழுத்தில் கரிய அடையாளத்தினை உடையவர், தொந்திக்கடவுள் (கணபதியை)ப் பெற்றவர் அத்தகைய சிவபிரானது இடது பாகத்தில் உள்ள சுகத்தி, மழு மான் ஏந்தின கரத்தினை உடையவள், மரகதம் போன்ற பச்சை நிறத்தினள், முயலகனை மிதித்த திருவடியினள் அருளிய முருகனே!