பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 329 581. யாவரும் சொல்லும்படியாக நிறம் கறுமைகொண்டு, மகர மீன்களின் கூட்டம் கலக்கி முழு இடத்தும் வளைந்து ஒலிசெய்யும் கடலாலும். (கலைகள்) வளர, இடம் அகன்று (பூரணமாய் - பூரண சந்திரனாய்), lெடIெT முகாக்கினியை மொண்டு கொண்டும், நெருப்பில் முழுகியும், எழுந்துவரும் நிலவாலும் மழைபோல் நீண்ட கூந்தலைக்கொண்ட வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய (இப் பெண்) அடைந்துள்ள காம மயக்கம் தணியும்படிக்கு (நீ) நினைவு பூண்டு. பச்சை நிறம், பரிசுத்தம், வெற்றி இவைகளைக் கொண்டதாயும், அழகுள்ள நடனம் கொண்டதாயும் உள்ள அலங்கார மயில்மீது வந்து முத்தி தரவேணும். அழகிய மென்மை வாய்ந்த குறத்தி (வள்ளியின்), புளகம் கொண்டதும், சந்தனமும் அமுதமும் பொதிந்த கொங்கையைக் (கொண்ட)- அணைந்துள்ள அழகிய மார்பனே! தேவர்களின் ஊர் (அமராவதியிலும்), அழகிய திருச்செந்துளரிலும், அருணை என்னும் வளப்பம் பொருந்திய ஊரிலும் தங்கும் தலைவனே! ஏழுலகங்களும் பிழைக்க அசுரர்களின் தலை தெறிக்க ஏழு கிரிகளைத் தொளைத்த ஒளிவேலனே! ஆதித்தர்கள், விண்ணுலகோர், அரி (திருமால்), அரன் (ருத்திரன்) பங்கயத்தன் (பிரமா) இவர் தம் பயத்தை ஒழித்த பெருமாளே! (மயிலினில் வந்து முத்தி தரவேணும்) 582. வலி (இழுப்பு நோய்), வாதம் - பித்தநோய் - பின்னும் கண்டமாலை நோய், (விப்புருதி) - சிலந்தி அல்லது கிரந்திப்புண் என்னும் நோய் . (வறள்) ; உடம்பு மெலிதல். சூலை (வயிற்றுளைவு நோய்), குட்டந்ோய்?குளிர் தாகம்.