பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{\ുത്ത്) தி ருப் |க| ய பை 1(M) 523. வடவா முகாக்கினியின் உள்ளே நுழைந்து முழுகி எழுகின்ற சிறந்த நிலவுக்கும், இனிய மொழிபோலச் சுவைக்கும் யாழின் இசையொலிக்கும், எட்டு மலை, (எட்டு) திசை இவை முழுதும் விடாமல் சுற்றி - வளைந்து பேரொலி செய்யும் அலைகொண்ட கடலுக்கும், இறந்துபோய் உருவமிழந்து அருவமாயுள்ள மன்மதனது பாணங்களுக்கும் மிகவும் வாடி பெரிய பொன்மயமான மேருவைப் போன்ற புளகம் கொண்ட கொங்கையை உடைய (இந்த) மாது - அருமையாக - நிறைந்துள்ள மிக்க ஆசைகொண்ட மயக்கம் திர (இவள்மீது) நினைவுவைத்து பீலிக் கண்கள்கொண்ட வெற்றி வாய்ந்த பச்சைத் தோகைகளின் அழகு பொலியும் மயிலில் ஏறி அமர்ந்து வரவேணும்; இதழ்கள் விரியும் மாலைகள் சுற்றி அணிந்துள்ள புயங்கள் இருபதும், பத்து முடிகளும் அற்றுவிழ பாணப் ப்ரயோகம் செய்த ஹரிராமரின் மருமகனே! பல தேவர்களுக்கும் அரியவனாய் நிற்கும் சிவபிரான் உணர மெளன ரகசியத்தை உபதேசித்த குருநாதனே! வழியிலே அரி (பாம்புகள்) (அல்லது குரங்குகள்) உலவும் பயங்கரமான அண்ணாமலை மகா நகரத்தில் இனிமை தரும் கிழக்குக் கோபுரத்தில் உறைபவனே! ஏழு உலகளவும் அளாவி நிற்கும் மலையுடன் (மேருவுடன்) மாறுபட்டுப் பொருது. பெரிய மலைகள் எட்டையும் (அஷ்டகிரிகளையும்) ஊடுருவும்படியாக வேலாயுதத்தைச் செ லுத்தின பெருமாளே! (198-ஆம் பக்கம் சிழ்க்குறிப்புத் தொடர்ச்சி) "சாரலின் ஏனம் மருப்புழும் சோன சைலனே"சோணசைலமாலை-14 "கட்செவியும் ஒண் கேழலின் மருப்பும் சார்தரும் உலக விளக்கெனும் சோணசைலனே" ஷெ 24