பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 522. மயில்மீது வர தனதனன தான தத்த, தனதண்ன தான தத்த தனதனன தான தத்த தனதான முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு முழுமதிநி லாவி னுக்கும் வசையாலும். மொழியுமட் மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு முதியமத ராஜ னுக்கு மழியாதே; புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ரா நி ரைத்த புதுமையினி லாறி ரட்டி புயமீதே. புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர பொருமயிலி லேறி நித்தம் வரவேணும்; எழுமகர வாவி சுற்று பொழிலருனை மாந கர்க்கு ளெழுதரிய கோபு ரத்தி லுறைவோனே. இடைது.வள வேடு வச்சி படமசைய வேக ணத்த இளமுலைவி டாத சித்ர மணிமார்பா, செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த சிவனைமுத லோது வித்த குருநாதா. tதிசைமுகன்+மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற சிறையடைய மீள விட்ட பெருமாளே (14)

  • சோலை சூழ்ந்த உயர்பொழில் அண்ணா. அப்பர் 6:16:5,

1 திசைமுகன் - நான்முகன் பிரமன் - தான் படைத்த திலோத்தமையைக் கண்டு பிரமன் காதல்கொண்டு அவளை நோக்கத் திலோத்தமை வேறொருதிசைக்குச் செல்ல, அவளைப்பார்க்க வேண்டி அந்தத் திசைப் பக்கம் தனக்கு ஒரு முகத்தைப் படைத்துக் கொண்டான் பிரமன் இவ்வாறு அவள் நாலு திசைகளிலும்செல்ல, அவளைப் பார்க்கப் பிரமனும் நாலு திசைப் பக்கங்களுக்கும் முகங்களைப் படைத்துக்கொண்டான் அதனால் திசைமுகன் ஆயினன்.

  1. முராரி - முரன் என்றும் அசுரனுக்குப் பகையாய் நின்று அவனை அழித்த திருமால். முரன் நரகாசுரனுடைய சேநாபதியும் மந்திரியும். இவன் கோட்டையைக் காத்துக் கொண்டிருந்தபோது கண்ணனாற் கொல்லப்பட்டான்.