பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 11 தொடி (கைவளை, தோள்வளை) அணிந்துள்ள தாமரை யன்ன கைக்கும், இடைக்கும், சுருள் கொண்ட வரிசை யமைந்த கூந்தலுக்கும், பவளத்தைக் கடைந்தெடுத்து அலங்களித்து வைத்த (வாய்) இதழுக்கும்-குறமான் (வள்ளியின்) ஒளிவீசும் ரவிக்கை கட்டிய கொங்கைக்கும் - நெகிழ் கின்ற நெஞ்சத்தை உடையவனே, சுத்தமான இருக்கு வேதமும், தேவர்களும் வணங்கக் கச்சியில் நிற்கும் பெருமாளே! (சமய சங்கத்தைத் தப்பி குணமடைந்து இருக்கும்படி பாராய்)

  • 454.

பருத்த கிரவுஞ்ச மலைமீது வேலாயுதத்தை விட்டு அன்று அசுரர் தண்டத்தைப் (படையை) அழித்தும், அந்த இதழ்களை உடைய தாமரைஆதனத்தனாம் ரமனை முன்பு குட்டிப் (பின்) கை விலங்கு இட்டு உம்பரைத் (தேவர்களை) காத்தளித்தாண்ட கடவுள், அன்புகொண்டு கற்றுவல்ல பெரியோர்கள் வலம்வரும் பெரிய தும்பிக்கையைக் கொண்ட கற்பகம் (கணபதி) முன்தம்-முன்பு தனது கையைப் பிடிக்கப் பெற்ற ஒருவன் (கணபதி தன் கையாற்பற்றி அழைத்துச் செல்ல நடை கற்ற இளையதளர் நடை பழகின ஒருவன் (ஒரு குழந்தை), உலகுக்கு ஒரு தந்தை தினைப்புனத்திருந்த இளமைப் பருவத்துத் தத்தைக்கு (கிளிக்கு) வள்ளிக்கு இச்சை (காதல் மொழிகளை) உரைக்கும் (சொன்ன) அரசன், பக்தர்களுக்குத் துணையாக நின்றருளும் புதியோன், வெட்சிப் புட்பம் மணம் வீசும் பல கனத்த: