பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 7 குருட்டுத்தன்மையைக் கொண்டு, பொருளும் ஒலியும் பிற எல்லாமும் (பழைய நூல்களினின்றும்) திருடியும், சொல்லுக்குத் தக்கவாறு (பாடல்களை) அமைத்தும் மகிழ்ந்து குலவியும் கத்துகின்ற கூச்சலிடுகின்ற கலக்க அறிவு தெளிவு அடையாதோ! சனக மகாராஜன் அன்புடன் பெற்ற மடப்பெண் (சீதையின்) ஒப்பற்ற பெரிய கற்பு என்னும் ஆஞ்ஞா சக்ரம் நடைபெற்ற பெருமை வாய்ந்த இலங்கையில் இருந்த (அரக்கர் குலச்) சுற்றத்தார் யாவரும் சுடுபட்டழியும்படி, கொடிய, போர்வல்ல வலிய வீரம் வாய்ந்த அரக்கன் (ராவணனுடைய) ஒளி வீசும் பத்துக் கொத்தான முடிகளுக்கும் ஒப்பற்ற ஒரு அம்பைச் செலுத்தி (வீழ்த்தி) தேவர்களின் இடர்களை நீக்கின திருமாலும். சூரியனும், சொர்க்கத்துக்கு இறைவனாம் இந்திரனும், சுக்கிரனும், (பிறை சூடிய) ஈசானனும், திக்குக் கர்த்தர்கள் (அஷ்டதிக்குப் பாலகர்களும்), அகத்திய முநிவரும், பிரமனும், பேர்போன (புகழ்பெற்ற) வசிட்டரும், கூட்டமான வேதங்களும் பூலோகத்தினரும், அகத்துாய்மை புறத்துாய்மை கொண்ட பக்தர்களும், (சித்தம், செயல், ஒழிந்தற்றுப் பெற்றவர்) மனமும் செயலும் ஒடுங்கி ஒழியப் பெற்ற ானிகளும், பின்னும், சிவனும், வ்ணங்கி நிற்கக் கச்சியில் ற்கும் பெருமாளே! (கலக்கம் தெளியாதோ) 453. பாவத்துக்கு இடமான உடம்பு, அத்தி (எலும்பு), தெற்றி (மாடம் - அத்தித் தெற்றி (எலும்பாலாய வீடு), ரத்தம், நெருங்கிய நரம்புகள் (இவைகள்) இட்டு (சேர்த்து) கட்டிய சட்டம் - கட்டப்பட்ட ஒரு கட்டடம், சிறையிட்டது போலச் சூழ்ந்து திரண்டு ஒன்று கூடிச் சேர்ந்த வினை என்னும் பாசக் கலக்கம்.