பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை) திருப்புகழ் உரை 799 லகr:மியாம் சீதையை அழைத்தக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியத்தில் வந்திருந்தபொழுது, பயத்தோடு வந்து உலவின (உழை மாரீச மானின் உடல் பாணம் பட்டுச் சிதறி அழியத் துஷடர்களான கொடிய கரன், திரிசிரன் என்னும் அரக்கர்களையும். (திரம்) வலிமை கொண்டிருந்த (அல்லது மலைபோல இருந்த) கும்பகர்கணனையும், ஒப்பற்ற பத்துத் தலைகளைப் பெற்றுத் தேவர்களை வென்றவனான (அவனும்) ராவணனையும், தமது கோதண்டம் என்னும் வில்லேந்திக் கொன்ற முகுந்தன் - திருமாலின் நல்ல உள்ளம் மகிழ்கின்ற மருமகப் பிள்ளையே வாசனை கொண்ட மருக்கொழுந்தைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய உமையவள், சிவபிராற்குத் தனது அன்பைக் காட்டும் அம்பிகை, கெளரி, மலையரசன் (இமவான்) பெற்ற சங்கரி (பார்வதி) தனது கருணையை அன்பைக்) காட்டும் குழந்தையே வடவெற்பு - வடக்கே உள்ள இமயமலைக்கு அங்கு அயல் - அங்க சமீபத்தில் உள்ள (அன்று) முன்பு அழகிய குச சரவணையில்-குசம்) தருப்பைகள் வளர்ந்து சூழ்ந்திருந்த (அல்லது குசம் - நீர் நிறைந்திருந்த) சரவண மடுவில் தங்கியிருந்த தாமரையன்ன திருமுகத்தை உடையவனே தமிழ் (வளர்ந்த மதுரையிற் சங்கிலி மண்டபம் எனப்படும் மண்டபத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! தேவர் பெருமாளே (உனதடி பணிவேனோ) 966. முகம் முழுமையும் வாசனைத் தயிலத்தைப் பூசியும், விளங்கும் நெற்றியில் பொட்டு இட்டுக்கொண்டும், வாசனையுள்ள, பூமாலையைக் கூந்தலிலே அணிந்துள்ள அழகிய மாதர்களின் முற்றினதும், முத்துமாலை அணிந்ததும், கணத்ததுமான கொங்கைகளின் மேல் (ஒரே) உயிராய், உள்ளம் நெகிழ்ந்து அழிந்து, எப்போதும் காம மயக்கிலே அகப்பட்டு (அதனால்) (வேசையர்க்குப் பொருள் கொடுக்க வேண்டி) நான் அலைந்து, பொருள் தேடி x இமையச் சாரல் தங்கிய கமலம்பூத்த சரவணம் கந்தபுரா 1-11-90 o சங்கிலி மண்டபம்.இது "கிளி மண்டபம்" FT...T...T இப்போதுவழங்கும்.