பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை திருப்புகழ் உரை 797 வேத லோகர் - வேதமோதும் நன் மக்கள், (பொன் நிலத்தர்) பொன்னுலகத்துத் தேவர்கள், தவசிகள், சித்தர்கள், மிக்க பெருமை வாய்ந்த ஒழுக்கம் நிறைந்த முனிகணங்கள் - இவர்களெல்லாம் றயிட்டுக் கூச்சலிட்டலற வேலாயுதத்தைச் செலுத் (அவுனக்குலம்) அசுரர் கூட்டம் இறக்கும்படிச் சிரித்த (சிலனே) துாயனே! (அசுரனாற் கவரப்பட்ட) வேதத்தை மீட்டுத்தந்த (கமலக்கண்ணர்) தாமரை போன்ற கண்களை உடையவரும், உடல் பச்சை நிறமுள்ளவருமான (ரகுராமர்) திருமால் தந்த (மயில்) பெண்களான - தேவசேனை - வள்ளி இவர்கள் இருவருடனும் (அல்லது வள்ளியுடன்) மதுரைப்பதியில் வீற்றிருந்து வாழ்கின்ற தம்பிரானே! தேவர்களும், ஜீவன் முத்தர்களும், சிவபத்தர்களும் வணங்குகின்ற தம்பிரானே! (பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ) 965. புருவமாகிய நல்ல வில்லை ஏந்தி, இரண்டு கண்களாகிய அம்புகளை வீசிக், கொங்கைகளாம் இரண்டு மதயானைகள் சண்டை செய்ய, முத்தத்தைத் தருகின்ற இனிமை வாய்ந்த உபசார வழிகளாலே- - = பேசச், சங்கின் ஒலி போன்ற ஒலி கழுத்தில் உண்டாக அல்லது சங்கு போன்ற கழுத்தில் (இசை) ప్స్లో எழ (புட்குரல் எழ), உருவம் - நிறம், செம்மை வாய்ந்ததாய்த் துவர் தந்த அதரம் பவளம் போன்ற தான வாயிதழ் (கீழுதடு) ன்ற எழில் வாய்ந்த தாம்பூல எச்சில் சிலவற்றையும் கொடுக்க, (உணர்ச்சி) எழும் மனதுகொண்டு (அந்த எச்சிலைக்) குடித்து உண்ணுதல் நல்ல சுகமாம் என்று மனம் உருகிக், குங்குமமும் சந்தனமும் அதிக வேர்வையினால் கலந்து படிய, க்ளிப்பையும், (ரஞ்சிதம்) இன்பத்தையும் தருகின்ற புணர்ச்சித் தொழிலாலே பலருக்கும் கடையன் (கீழானவன்) இவன் என்று என்னை இகழும்படியாகக் காம மயக்கத்தைத் தருகின்ற அரிய மாதர்களை 鷺 பலமாக நம்பிப் பிடித்துக் கொண்டுள்ள (வண்டன்) தீயனாகிய நானும் உன்னுடைய திருவடியைப் பணிவேனோ!