பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விளக்கச்சுரர் ஆழ்தர வாழ்தரு பிரப்புத்வகு மாரசொ ரூபக * வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி ருந்தவாழ்வே. இதப்பட்டிட வேfகம லாலய வொருத்திக்கிசை வாணபொ னாயிர மியற்றப்பதி தோறுமு லாவிய தொண்டர்தாள. இசைக்கொக்கவி ராசத பாவனை யுளப்பொற்றொடு பாடிட வேடையி லிளைப்புக்கிட வார்மறை யோனென வந்துகானிற் றிதப்பட்டெதி ரே! பொதி சோறினை யவிழ்த்திட்டவி நாசியி லேவுரு திசைக்குற்றச க்ாயனு மாகிம் றைந்துபோமுன்

  • இது வயலூர் முருகன் அருணகிரியாரின் கனவில் வந்து அருளிய வரலாற்றைக் குறிப்பது திருப்புகழ் - பாடல் 916, 105, 27.1 (அடி எட்டின் பாடபேதம் - பக்கம் 176 கீழ்க்குறிப்பு) பார்க்க

f கமலாலய ஒருத்தி - திருவாரூரிற் பரவையார். திருவிழாக் காணவரும் அடியார்களுக்குப் பொன், மணி, துணி, அமுது முதலியன கொடுத்து உபசரிப்பது பரவையாரின் வழக்கம். அந்தப் பணி நிறைவேறுதற் பொருட்டே சுந்தரர் இறைவனிடம் பொன் வேண்டுவார். சுந்தரர் பொன் வேண்டின இடங்கள்: (1) திருப்புகலூர். செறிபுன் சடையார் திருவாரூர்த் திருப்பங் குனியுத் தரத்திருநாள் குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவிற் குறைவறுக்க நிறையும் பொன்கொண்டணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் இறைவர் பாதம் பணிய எழுந் தருளிச் சென்றங் கெய்தினார்" - பெரிய புரா, ஏயர்கோன்-46, (2) திருப்பாச்சிலாச்சிராமம். "நன்று பெருகும் பொருட்காதல் நயப்புப் பெருக நாத ரெதிர் நின்று பரவி" - பெரிய புரா (ஏயர்கோன்-79) (3) விருத்தாசலம். (திருமுதுகுன்றம்) "நாதர்பாற் பொருள்தாம் வேண்டி.குறிப்பொடும் பரவும் போது, * பனிமதிச் சடையார் தாமும் பன்னிரண் டாயிரம் பொன். நல்கிட (பெரிய புரா-ஏயர்கோன்-106, 107) இந்தப் பன்னிரண்டாயிரம் பொன்னும் பரவையாரின் பொருட்டே (தொடர்ச்சி 763 ஆம் பக்கம் பார்க்க)