பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கொத்துரு நறவ மெனவத ரத்துாறல் பருகி யவரொடு கொற்சேரி *யுலையில் மெழுகென வுருகாமே. t கொக்கா நரைகள் வருமுன மிக்காய விள்மை யுடன் முயல் குற்றேவல் மை செயும்வகை யருளாதோ: # அத்துார் புவன தரிசன நித்தர்ர கணக நெடுமதி ல்ச்சான் வயலி நகரியி லுறைவேலா. Xஅச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய ப்ரவையொ டக்காகி விரக பரிபவ மறவே.பார்:

  • எரியுறு மெழுகின் உள்ளம் சோர பெருங்கதை 1-46-249,

f இந்த அடியால், இந்தப் பாடல் பாடின பொழுது அருணகிரியார் இளவயதினர் என்பது தெரிகின்றது. கொக்காக நரை - தலைமயில் கொக்குக்கு ஒக்க நரைத்து' திருப்புகழ் 447, இளமை முதற் கொண்டே பத்தி செய்ய வேண்டும். கடவுளுக்கு அடிமை பூணவேண்டும் என்னும் அரிய நீதியும் புலப்படுகின்றது. இதனாலன்றோ இளவயதினராகிய சுந்தரர் - 'பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன் பொத்தின நோய் (7.51-1) என்றார். இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் திருமந்திரம் 186

  1. துரத்தில் வரும்பொழுதே - வயலூர் திருக்கோயிலின் மதில் கோயிலுக்கு அடையாளமாக நின்று தரிசிப்பதற்கு உதவுகின்றது என்கின்றார்; தூர தரிசன தலங்களைப்பற்றி

- பாடல் 311-பக்கம் 272, 273 கீழ்க்குறிப்பைப் பார்க்க x சுந்தரமூர்த்தி சுவாமிகள் திரு ஒற்றியூரிற் சங்கிலி நாச்சியாரைத் திருமணஞ் செய்து கொண்டார் எனக் கேள்வியுற்ற (அவர் முதல் மனைவி)திருவாரூப் பரவையார்-சுந்தரர் திரு ஆரூருக்கு வந்தவுடன் அவரைத் தமது இல்லத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்கச் சுந்தரர் பரமனையே தமக்காகத் துாது சென்று பரவையை இணங்கும்படி செய்ய வேண்டுமென வேண்டினர். பரமனும் துது செல்ல இணங்கிக் கோயில் அர்ச்சகர் போலப் போய்ப் பரவையாரை வேண்ட அவர் பரமன் வேண்டுகோளுக்கு இணங்க இல்லை. ஆதலால் சுந்தரர் மறுமுறையும் மிக வேண்டப் பரமன் இரண்டாவது முறை தமது சுயரூபத்துடன் தூது சென்றார். நம்மிடம் அருச்சகராக வந்தவர் பரமன் தானோ என்று பரவையார் அதிசயத்துடனும் அச்சத்துடனும் உள்ளம் சோர்ந்திருக்கும் சமயத்திற் பரமன் காட்சி தந்து பரவையை நோக்கி 'நீ சுந்தரன் உன்னிடம் வர இசைதல் வேண்டும்' எனப், பரவையாரும் தங்கள் கட்டளைக்கு இணங்கினேன்' என்று கூறி வணங்கினள் == (தொடர்ச்சி 745 ஆம் பக்கம் பார்க்க.)