பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டாலியூர்) திருப்புகழ் உரை 743 (முரண்) வலிமை வாய்ந்த முடியை உடைய போர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தினவள். (மாலினி) மாலையை அணிந்தவள், (அல்லது அக்ஷரங்களின் தெய்வமாக இருப்பவள் துர்க்கை), நீயே (சரணம்) தஞ்சம் என நிற்கும் அடியார்களுக்குப் ಕ್ಷೌನ್ಡಿಲ್ಲ குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான (தாளி) பனையன்ன கால்களை உடைய பேய்ப் படையை உடையவள் (அல்லது கடினத்து ஆளி வாகினி - கடிய யாளிவாகனம் சிங்கவாக்னம் - உடையவள், மதுபானம் (கள்ளுணாவை). உண்பவர்களுக்கு (வாம தந்திரப்படி) உபாசிப் பவர்களுக்கு அல்லது, மதுபானம்,பருகினர் அமுது பருகின தேவர்களுக்கு (பரம போக மோகினி) மேலான போகத்தை ளிக்கும் மோகனாங்கனை (அழகி), அரகர' என்று ஸ்தாரமாக நிரம்ப ஒலி செய்பவள், (யாமளி) சியாமள நிறத்தை உடையவள், சில்ம்பணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடிக்கின்றதும் பறைகள் ப்பதுமான சுடுகாட்டுக் கோயிலில் இருக்கும் தேவி, (இறை) பரசிவனொடும் இடம் கண்டு நடனம் செய்யும் காரணி (காரணமாக நடிப்பவள்), பயிரவி ஆகிய தேவி பெற்ற பெருமாளே!_பட்டாலியூரில் எழுந்தருளியுள்ள பெருமாளே! (உனதடி நிழலிற் சேர வாழ்வதும் ஒருநாளே) 944. கஸ்தூரி, (அகரு) அகில், (ம்ருகதம்) கஸ்தூரி மஞ்சள், நிறைய சந்தனம், (இமசலம்) பன்னிர், பச்சைக் கற்பூரம் கலவைச் சாந்து இவைகளை அணிவதாய், ரத்னங்களுடன் சேர்க்கப்பட்டுக் கட்டார வடமும் - கட்டப்பட்ட ஆரவடமும் முத்துமாலையும் நெருங்கினதாய் (நீட்டுர்) கொடிய க்ல்கங்களை விளைவிப்பதாய், ரவிக்கையுடன் முட்டி நிமிர்வதாய் உள்ள கொங்கையை உடைய மாதர்களின் (தொடர்ச்சி) x சுடலை நாளியொர் பாகமாக நடமாட வல்ல...நம்பன்' - சம்பந்தர் 2-87-1. 0 "இடமிட்டாடுதல்" - " புன்சடை இடம் பெறக் காட்டகத் தாடிய வேடத்தர்". சம்பந்தர் 2-108.3.

  • அபிராமி அந்தாதி உரை செய்யுள் 77.