பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிக்கொடுமுடி) திருப்புகழ் உரை 725 மிண்டர்களால் - மதங் கொண்டவர்களால் - ஆணவம் மிக்கோர்களாற் காணக் கூடாதவனே மிண்டர்களின் புலனுக்கு அகப்படாதவனே! வெஞ்சமாக்கூடல் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (சித் அருள்வாயே) திருப்பாண்டிக்கொடுமுடி 936. நல்வினை தீவினை என்னும் இருவினை காரணமாகத் தோன்றும் பிறவி என்கின்ற கடலில் மூழ்கி வேதனைகளில் அவஸ்தைப் பட்டு அலையுமாறு புகாமல் உனது திருவருளாம் கருணை ஒளியாலே (ஸ்திரமான வகையில்) நிலையானவகையில் - (நான்) நல்ல கதியைப் பெறுவேனோ! திருமாலும் பிரமனும் அறிதற்கு அரியவனே! அடியார்களுக்கு எளியவனாய்க் கிடைக்கும் அற்புத நண்பனே! குருமூர்த்தியாய்ச் சிவபிராற்கு அருளிய ஞானசாரியரே! கொடுமுடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே! (கதியைப் பெறுவேனோ) 937. காந்தள் மலர்போலுள்ள (கரவளை) வளைகரம் - வளையல் அணிந்துள்ள கைகள் சேந்துற்றிட சிவக்க (மதகாண்டத்து) கர்ம காண்டத்து காமனுடைய வில்லுக்குப் பயன்படும் - மாதர்களுடன், ஊசிக்கும். (தொடர்ச்சி): *மதகாண்டம் - காம காண்டம் மன்மதனுடையவில் கரும்புவில், பூவில், இரும்பு வில் என மூன்று. கயக்கனின்ற பூவின்மிக்க காம காண்டம், கன்னல் வில் இயக்கமான பாரவில் எடுத்து மொய்ம்பில் ஏந்தியே" 實曹 (கந்தபுரா 1-1-62) (தொடர்ச்சி 726 ஆம் பக்கம் பார்க்க)