பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவளுர்) திருப் புகழ் உரை 693 பெருகிக் கிடக்கும் (செய்ப்பதி) - வயலூரில் வாழ்கின்ற முருகனே! (காஞ்சியில்) அறம் வளர்த்த நித்ய கல்யாணியும், கிருபாகரியுமான தேவி உறைகின்ற திருத்தவத்துறை என்னும் பெரிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே! (உயர்வாகவுமே அருளுரையாதோ) பூவாளுர் 924. யமன், வேல், அம்பு, அறுக்கும் * வாள், விஷம் -- இவைகளுக்கு ஒப்பான கண்கொண்டு கொலைத் தொழிலையே செய்யத் சூழ்ச்சி செய்கின்ற மகா பாவிகள், காம சாத்திரத்தை (கொக்கோ சாத்திரத்தை) வாய் பாடாகக் கொண்டவர்கள் (கரதலப் பாடமாகக் கொண்டவர்கள்), ஏணியின் தன்மை கொண்டவர்கள், (அல்லது ஏன்ை --- கர்வப்பேச்சுப் பேசுபவர்கள்), யாராயிருந்தாலும் அவருடனே காம இச்சை நிறைந்த (வினா) சொற்களை வாய்கொண்டு பேசுபவர்கள், காம இன்பத்துக்குப் (பாத்திரம்) கொள்கலமான - இடமான - மகா மூதேவிகள், பொருள் தா எனக் கேட்கின்ற மாய சொரூபிகள், அதிக ஆசை மயக்கத்தை மூட்டுபவர்கள், ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கும் ஆனை போலச் சண்டை செய நேராகப் போருக்கெழும் கொங்கை மார்பைக் காட்டுபவர்கள், பலவிதமான (பேதகம்) வேறுபாடுகளைக் கொண்டதான - மாயைகளைச் செய்யவல்ல. மகா பராக்குக் காரிகளுடனே - பெரிய நோக்கத்தை உடையவர்களுடனே - உத்தமமான என் பொழுதைப் போக்குதல் நல்லதாகுமோ (நல்லதாகாது ஆதலால்) நீ இனி என்னை வா என்று அன்புடனே அழைத்து ஆள்வதான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா! தேவியின் முலைப்பால் நீங்காத திருவாயால் நீ பாடின பா ஏடு (வைகையாற்றின்) நீரை எதிர்த்துப் போக, வாது செய்த பாடலுக்குத் தோற்ற எண்ணாயிரம் சமண மூடர்களும்.